Author: Editor TN Talks
சென்னை மக்களின் பெருகிவரும் குடிநீர் தேவையைக் கருத்தில்கொண்டு, கோவளம் அருகே ரூ.471 கோடி செலவில் 4,375 ஏக்கர் பரப்பளவில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத்துறை சமர்ப்பித்த விண்ணப்பத்தை, மாநில நிபுணர் மதிப்பீட்டு குழு (SEAC) திருப்பி அனுப்பியுள்ளது. சென்னையின் மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், குடிநீர் தேவையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. தற்போது, சென்னைக்கு நாளொன்றுக்கு 1100 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதில் 350 மில்லியன் லிட்டர் நீர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாகவும், மீதமுள்ள 750 மில்லியன் லிட்டர் நீர் ஏரிகள் மூலமாகவும் பெறப்படுகிறது. இந்த தேவை 2035 ஆம் ஆண்டில் 2523 மில்லியன் லிட்டராகவும், 2050 ஆம் ஆண்டில் 3756 மில்லியன் லிட்டராகவும் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, திருப்போரூர் வட்டம், கோவளம் அருகே சென்னையின் 6-வது நீர்த்தேக்கம் அமைக்கப்படும்…
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில், பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் அந்த இளைஞரின் சகோதரர் கடத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் கடத்தல் வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பெண்ணின் தந்தை உள்பட ஐந்து பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த பூவை ஜெகன்மூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சிறுவன் கடத்தல் சம்பவத்தில் ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமனுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று பிற்பகல்…
உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகியவற்றை உள்ளடக்கிய ஜி7 அமைப்பின் ஆண்டு உச்சி மாநாடு, இந்த ஆண்டு கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் கனனாஸ்கிஸ் நகரில் நேற்று முன் தினம் கோலாகலமாகத் தொடங்கியது. இன்றுடன் நிறைவடையும் இந்த மாநாட்டில், விருந்தினர் நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கனடா பிரதமர் சிறப்பு அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள கனடா சென்றுள்ளார். கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் கால்கரி நகருக்கு சென்றடைந்த பிரதமர் மோடியை, விமான நிலையத்தில் கனடா அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். கனனாஸ்கிஸ் நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி…
சிவகங்கை மாவட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வுப் பயணம்: நலத்திட்ட உதவிகள் வழங்கி உரை!
தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், அரசின் திட்டப்பணிகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில், இன்று சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றுகிறார். மாவட்ட கழக செயலாளர் மற்றும் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இது குறித்து தெரிவிக்கையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று, மக்களின் குறைகளை கேட்டறிந்து ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் இன்று அவரது சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. மதுரையில் இருந்து கார் மூலம் சிவகங்கை வரும் துணை முதலமைச்சருக்கு, காலை 9:30 மணியளவில் திருப்புவனத்தில் மாவட்ட கழகம் சார்பில், அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. தொடர்ந்து, காலை 10 மணியளவில் காணூரில் 40 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் தடுப்பணை திட்டப்பணியை பார்வையிடுகிறார். பின்னர், 10:30 மணியளவில்…
தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கள்ளிறக்கும் போராட்டத்தை முன்னெடுத்தார். இதுவே கள்ளின் நன்மை, தீமை, தேவை உள்ளிட்டவை பற்றிய கேள்விகளைச் சமூக ஊடகங்களில் எழுப்பியிருக்கிறது. கள் உண்மையிலேயே உடலுக்கு நல்லதா? அரசு ஏன் கள் விற்பனைக்கு அனுமதி தர மறுக்கிறது? விரிவாகப் பார்க்கலாம். தமிழ்நாடும் கள்ளும் தமிழ்நாட்டின் வரலாற்றில் கள்ளுக்குத் தனியிடம் உண்டு. புளிப்பு என்ற பொருள் கொண்ட கடுத்தல் என்ற சொல்லிலிருந்துதான் கள் பிறந்தது என வேர்ச்சொல் ஆராய்ச்சி காட்டுகிறது. மன்னர்கள் முதல் மக்கள் வரை அந்நாட்களில் கள்ளுண்டு களித்த செய்திகளைச் சங்கத்தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. பரிசாகவும் படையலாகவும் கள் வழங்கப்பட்டிருக்கிறது. அதே வேளையில் கள் உண்பதைக் கொடுஞ்செயலாக அறம் போதிக்கும் நீதி நூல்கள் கூறுகின்றன. வள்ளுவர் கள்ளுண்ணாமை என்ற அதிகாரத்தையே வகுத்திருக்கிறார். பனைக்குத் தாளில் என்ற பெயரும் உண்டு. அதிலிருந்து கிடைக்கும் கள், தாளி என்று அழைக்கப்படுகிறது. அதுவே தாரி – தாடி எனத் திரிந்து…
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில், “இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழர் எனும் அடையாளம் கொண்டு மக்களை திமுக ஒன்றிணைத்ததா? இல்லையா?” என்ற ரீதியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப் 2 தேர்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தாயுமானவர் என குறிப்பிட்டு கேள்வி வெளியிட்டு சர்ச்சையான நிலையில், தற்போது மீண்டுமொரு முறை ஆளுங்கட்சியான திமுக தொடர்பான கேள்வி கேட்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. தொல் பெருமைமிக்க தமிழக வரலாறும், பெருந்தலைவர் காமராசர் அவர்களைப் போன்ற பெரும் அரசியல் தலைவர்கள் முன்னெடுத்த நல்ல திட்டங்களும் பாடத்திட்டத்தில் இருக்கையில், தேர்வர்களின் அறிவை சோதிப்பதற்கு ஆளுங்கட்சியை போற்றும் விதமாக கேள்வியை வடிவமைப்பது தான் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சிறப்பம்சமா?. தமிழக அரசின் துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர் போன்ற…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள 27 பேரையும் ஜூன் 30 ம் தேதி நேரில் ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024 ஆண்டு ஜூலை 5 ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகேந்திரன், அவரின் மகன் அசுவத்தாமன், பொன்னை பாலு, உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில் ஏற்கனவே வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் குற்றம் சாட்டப்பட்ட 27 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது, நாகேந்திரன், அசுவத்தாமன் உள்ளிட்ட 27 பேர் சிறையில் இருந்தவாறு காணொலி மூலம் ஆஜராகி இருந்தனர். இதனிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர்…
அடுத்த மே தினத்தில் எடப்பாடி பழனிசாமி எதிர்க் கட்சித் தலைவர் பதவியை மட்டுமல்ல, அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை இழந்து நிற்பார்! என்று அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.. உட்கட்சி பிரச்னை, கூட்டணிப் பூசல், கூட்டணி அரசு சத்தம் எல்லாம் எம்.ஜி.ஆர் மாளிகையிலும் கமலாலயத்திலும் தைலாபுரத்திலும் இருந்துதான் நாள் தவறாமல் வருகிறது. அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாத பொம்மைதான் பழனிசாமி.! ’’எதிர்க் கட்சித் தலைவர் பழனிசாமியின் நினைப்பு பெட்டியில்தான் உள்ளது. செய்திகளைப் பார்க்காமல், படிக்காமல் அரைவேக்காட்டுத்தனமான அரசியலைச் செய்து வருகிறார் பழனிசாமி. உட்கட்சி பிரச்னை, கூட்டணி பிரச்னையை மறைக்க அறிக்கை அரசியல் செய்து வருகிறார்” என்று தஞ்சையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடுத்த பதிலடி பழனிசாமியின் நெஞ்சாங் கூட்டை கிழித்துவிட்டது போல! ‘நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்கே முறையிடலாம்’ என எக்ஸ் பக்கத்தில் வந்து ஒப்பாரி வைத்திருக்கிறார். எங்கள் முதலமைச்சர் சுட்டிக் காட்டியது…
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு விஜயஸ்ரீ பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணை தேடி தனுஷ் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லாததால், தனுஷின் சகோதரரை கடத்திச் சென்று, பின்னர் இரவு பேருந்து நிறுத்தம் ஒன்றில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இது தொடர்பாக தனுஷின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே வி குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த போலீசார், பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைது செய்தனர். இந்த நிலையில், தன்னை காவல் துறையினர் கைது செய்யக் கூடும் என கூறி, முன் ஜாமீன் கோரி, ஜெகன் மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன்…
திருச்செந்தூ ரை சேர்ந்த ஆர்.சிவராம சுப்ரமணிய சாஸ்திரிகள் என்பவர் தாக்கல் செய்த சீராய்வு மனுவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் 7-7-2025 அன்று காலை 06.15 மணி முதல் காலை 06.50 மணி வரை என நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதை விட நல்ல முகூர்த்த நேரம் உள்ளது. இதற்கு பதிலாக, 7-7-2025 மதியம் 12.05 மணி முதல் 12.47 மணி வரை தோஷங்கள் இல்லாத கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும். அதுவரை கும்பாபிஷேக அழைப்பிதழ்களை வழங்குவதற்கு இடைக்காலத் தடை உத்தரவு வழங்க வேண்டும் என என சீராய்வு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஸ்ரீமதி, விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு மற்றும் கோவில் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகையில், இதே போன்று கோரிக்கையுடன் உச்சநீமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் போது இந்த மனு ஆடம்பரமான மனு என நீதிபதி கருத்து…