Close Menu
    What's Hot

    டாஸ்மாக் நிர்வாகத்தின் அதிரடி முடிவு..! மதுபான கொள்முதலில் புதிய நடைமுறை..!

    திருப்பத்தூர் : 510கிராம் கோயில் நகைகளை மோசடி செய்த நபர்..! திரும்ப கேட்கும் போது கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோவளம் புதிய நீர்த்தேக்கத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி மறுப்பு: மாற்று வழியைப் பரிந்துரைத்த நிபுணர் குழு!
    தமிழ்நாடு

    கோவளம் புதிய நீர்த்தேக்கத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி மறுப்பு: மாற்று வழியைப் பரிந்துரைத்த நிபுணர் குழு!

    Editor TN TalksBy Editor TN TalksJune 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250617 WA0003
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை மக்களின் பெருகிவரும் குடிநீர் தேவையைக் கருத்தில்கொண்டு, கோவளம் அருகே ரூ.471 கோடி செலவில் 4,375 ஏக்கர் பரப்பளவில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத்துறை சமர்ப்பித்த விண்ணப்பத்தை, மாநில நிபுணர் மதிப்பீட்டு குழு (SEAC) திருப்பி அனுப்பியுள்ளது.

    சென்னையின் மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், குடிநீர் தேவையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. தற்போது, சென்னைக்கு நாளொன்றுக்கு 1100 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதில் 350 மில்லியன் லிட்டர் நீர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாகவும், மீதமுள்ள 750 மில்லியன் லிட்டர் நீர் ஏரிகள் மூலமாகவும் பெறப்படுகிறது. இந்த தேவை 2035 ஆம் ஆண்டில் 2523 மில்லியன் லிட்டராகவும், 2050 ஆம் ஆண்டில் 3756 மில்லியன் லிட்டராகவும் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, திருப்போரூர் வட்டம், கோவளம் அருகே சென்னையின் 6-வது நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பின்படி, நீர்த்தேக்கம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத்துறை விண்ணப்பித்தது. இந்த விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த மாநில நிபுணர் மதிப்பீட்டு குழு, இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும், கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையத்தின் (CRZ) அனுமதிதான் தேவை என்றும் தெரிவித்து விண்ணப்பத்தைத் திருப்பி அனுப்பியுள்ளது. மேலும், மழைநீர் கால்வாயில் வரும் நீரை சுத்திகரிப்பு செய்து இந்த நீர்த்தேக்கத்தில் விடுவது தொடர்பாக சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அக்குழு பரிந்துரைத்துள்ளது.

    பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலைகளுக்கு இடையில் அமையவுள்ள இந்த நீர்த்தேக்கம், ஆண்டுக்கு 2.25 டிஎம்சி வெள்ளநீரை சேமிக்கும் வகையிலும், 1.6 டிஎம்சி கொள்ளளவுடனும் ரூ.471 கோடியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும் என்றும், இது சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த புதிய திருப்பம் திட்டப்பணிகளை எவ்வாறு பாதிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    6th reservoir Chennai Environment kovalam reservoir கோவளம் சுற்றுச்சூழல் சென்னை நீர்த்தேக்கம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருவள்ளூர் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராமன் கைது.. சஸ்பெண்ட் செய்ய காவல்துறை பரிந்துரை!
    Next Article இந்தியப் பெருங்கடலில் உருவானது இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் !
    Editor TN Talks

    Related Posts

    டாஸ்மாக் நிர்வாகத்தின் அதிரடி முடிவு..! மதுபான கொள்முதலில் புதிய நடைமுறை..!

    July 21, 2026

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    July 21, 2026

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்: நீதிமன்றம் உத்தரவு!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் நிர்வாகத்தின் அதிரடி முடிவு..! மதுபான கொள்முதலில் புதிய நடைமுறை..!

    திருப்பத்தூர் : 510கிராம் கோயில் நகைகளை மோசடி செய்த நபர்..! திரும்ப கேட்கும் போது கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    கனடா பொருட்களுக்கு 50% கூடுதல் வரி: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.