Author: Editor TN Talks
கேதர்நாத்திற்கு யாத்திரைகாக சென்ற பக்தர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து வெடித்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர் உட்பட 274 பேர் இதுவரை உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் சோகம் அடங்குவதற்குள் உத்தரகாண்டில் மீண்டும் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் கவுரிகுந்த் அருகே, டேராடூனில் இருந்து கேதார்நாத் நோக்கி சென்ற ஹெலிகாப்டர் ஒன்று காணாமல் போனதாக செய்தி வெளியானது. பிறகு காணாமல் போன ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக உத்தரகாண்ட் சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ஜெனரல் முருகேசன் உறுதிப்படுத்தினார். இந்த நிலையில் அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த…
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் மீண்டும் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானின் ராணுவத் தளவாடங்களை இஸ்ரேல் தாக்கியதற்குப் பதிலடியாக ஈரான் கடும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. ஆதரவுக் குரல் எழும் என்று பேசப்பட்ட நாடுகளுக்கெல்லாம் ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் பாதிப்பு யாருக்கு? உலக வரலாற்றில் இஸ்ரேல் – ஈரானுக்கு இடையிலான போர் 40 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது. இரு நாடுகளும் அவ்வப்போது தங்களுக்குள் தாக்கிக் கொண்டிருந்த நிலையில், கடந்த 2023-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடுத்த போர், இன்னும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ஹமாஸுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியது. ஹிஸ்புல்லாக்களையும் எதிர்த்து தாக்கத் தொடங்கிய இஸ்ரேல், ஈரான் மீது கடும் கோபத்தில் இருந்தது. இந்த நிலையில்தான், நேற்று ஈரான் தலைநகர் மீது குண்டுமழை பொழிந்து, போரைப் பெரிதாக்கியது இஸ்ரேல். என்ன செய்தது இஸ்ரேல் நேற்று (ஜூன் 13) ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் ஆபரேஷன் ரைசிங் லையன் என்ற பெயரில்…
ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமானவரின் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25லட்சம் உடனடியாக வழங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 12-ம் தேதி ஆமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து மேலே எழும்பிய சில நிமிடங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அங்கிருந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விடுதிக் கட்டடத்தின் மேல் விழுந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்கள் என மொத்தம் 274 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1கோடி வழங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது. மேலும் விமானத்தில் இருந்து கீழே விழுந்து உயிர்தப்பிய இந்தியாவை சேர்ந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கும் ரூ.1கோடி…
திருச்சியில் இன்று(14.06.2025) விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதச்சார்பின்மை காப்போம் பேரணி நடைபெற்றது. வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற இந்த பேரணி, டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் தொடங்கி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. இதனையொட்டி வழிநெடுங்கிலும் கட்சி கொடிகளும், பிரம்மாண்ட பேனர்களும் அமைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டு அரசியலின் திசைவழியை தீர்மானிப்பவர்கள் விடுதலைச் சிறுத்தைகள். இந்திய தேசிய அரசியலையும் கூர்மைப்படுத்துபவர்கள் விடுதலைச் சிறுத்தைகள். எங்களை நோக்கி அதிகாரம் வரும்; எங்களை நோக்கி நாற்காலிகள் வரும். எங்களை ஓரங்கட்ட பார்த்தாலும், ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம் என்பதை நிறுவுவோம்.” என சூளுரைத்துள்ளார்.
பொதுவாக அரசியல் தலைவர்கள், நிர்வாகிகள் தொண்டர்களின் செயல்களால் மேடைகளிலேயே கோபப்படுவது வழக்கம். அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் மேடையில் ரசிகரிடம் கோபப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்தவர் கமல்ஹாசன். 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் களம்கண்டு, 15 லட்சம் வாக்குகளை பெற்றது. தொடந்து 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்ட கமல் கோவை தெற்கு தொகுதியில் 1728வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். தொடர்ந்து கட்சியில் இருந்து முக்கிய தலைகள் விலகியதால், கட்சி சரியத் தொடங்கியது. கடந்த 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்றார். இதனால் இவர் காங்கிரஸ் உடன் கை கோர்க்க போகிறார் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A…
கரூர் – திருச்சி நெடுஞ்சாலையில் இளம் பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.- போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது கரூர் – திருச்சி நெடுஞ்சாலையில் இளம் பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், கைகலப்பும் ஏற்பட்டது. கரூர் அடுத்த வெண்ணைமலையை சேர்ந்த முருகராஜ் என்பவர் திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சேர்ந்த காவியா என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின் இருவருக்கும் சிறு சிறு பிரச்சனைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், காவியா நேற்று மதியம் திடீரென வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து…
தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், ஹீரோவாகவும் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2017-ம் ஆண்டு ’மாநகரம்’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிதாக போகவில்லை. அதனை தொடர்ந்து 2019-ம் ஆண்டு கார்த்தியை வைத்து இவர் இயக்கத்தில் வெளியான ’கைதி’ திரைப்படமானது மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதனை தொடர்ந்து அவர் இயக்கிய மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டை கொடுத்தது. லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற டிரெண்டை உருவாக்கிய லோகேஷ் அதன் கீழ் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார். இவரது அடுத்த படைப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ’கூலி’ படத்தை இயக்கி வருகிறார். ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு…
ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 212 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 138 ரன்களும் எடுத்தன. 74 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 2-வது நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 65 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. மிட்செல் ஸ்டார்க் 58 ரன்களுடன் (136 பந்து, 5 பவுண்டரி) களத்தில் இருந்தார். தென்ஆப்பிரிக்கா தரப்பில் ரபடா 4 விக்கெட்டும், லுங்கி இங்கிடி 3 விக்கெட்டும் கைப்பற்றினர். ஆஸ்திரேலிய அணிமுதல் இன்னிங்ஸ் முன்னிலையும் சேர்த்து 282 ரன்களை தென்ஆப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. லார்ட்ஸ் மைதானத்தில் 2004-ம் ஆண்டுக்கு பிறகு எந்த அணியும் 280 ரன்களுக்கு மேலான ஸ்கோரை விரட்டிப்பிடித்ததில்லை. சவாலான இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்காவுக்கு…
திருப்பூர் மாவட்டம் குமரானந்தபுரம் பகுதியில் மத்திய அரசின் 11 ஆண்டுகால சாதனை விளக்க சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று அண்ணாமலை கூறியுள்ளாரே என கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பதில் அளித்த அவர், அண்ணாமலை சொல்வது அவரது தனிப்பட்ட கருத்து என்றே சொல்லி உள்ளார். கட்சியின் நிலைப்பாடு ஒன்றே அதன்படியே செயல்படுவோம். எந்த குழப்பமும் கிடையாது. தேசிய தலைமை எடுக்கும் முடிவே இங்கு நடக்கும். பேச்சு நடத்தும் கட்சி குறித்து சொல்வார்களா? ஒரு கட்சி அல்ல பல்வேறு கட்சிகள் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒரு சில திட்டங்களை மத்திய மாநில அரசுகள் இணைந்தே நடத்த முடியும். இத்திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கி உள்ளது என ஸ்டாலின் எங்காவது சொல்லி உள்ளாரா. இது குறித்து தெரிவித்த உடன் மாப்பிள்ளை நியாபகம் வந்து…
நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், முதல் 100 இடங்கள் பிடித்த மாணவர்கள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர் இடம் பிடித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், அரசியல் ரீதியான அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து தங்களது அயராத உழைப்பினாலும் விடா முயற்சியினாலும் நீட் தேர்வினை எதிர்கொண்டவர்களுக்கும் தகுதி மதிப்பெண் பெற்று தேர்வானவர்களுக்கும் முதல் நூறு இடங்களைப் பிடித்து சாதித்தவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்! நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் தலைசிறந்த மருத்துவர்களாக மக்கள் சேவையில் சிறந்து விளங்கவும் இம்முறை வெற்றி வாய்ப்பைத் தவற விட்டவர்கள் மனம் தளராது மீண்டு முயற்சிக்கவும் வாழ்த்துகிறேன். பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுகையில், திமுக உள்ளிட்ட கட்சிகள் மேற்கொண்டு வரும் நீட் தேர்வுக்கெதிரான பொய் பிரசாரங்களை உடைத்து, ஒவ்வொரு ஆண்டும் தமிழக மாணவர்கள் நீட்…