Author: Editor TN Talks

திரையரங்குகளுக்குச் சென்று படங்கள் பார்த்தது அந்த காலம். எந்த ஓடிடியில் என்ன படம் பார்க்கலாம் என்று தேடுவது இந்த காலம். அப்படிப்பட்டவர்களுக்காக, இந்த வாரம் என்னென்ன படங்கள் வெளியாகின்றன என்ற பட்டியலை பார்க்கலாம். சன் நெக்ஸ்ட்டில் தமிழில் வெளிவந்த தி வெர்டிக்ட், தெலுங்கில் வெளிவந்த ஒக்க பதக்கம் பிரகாரம், மராத்தி மொழியில் வெளிவந்த ஆசாதி படங்கள் வெளியாகி உள்ளன. நெட்பிளிக்சில் இந்தியில் வெளிவந்த ரெய்டு-2, உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் அடித்த கொரிய மொழியில் வெளிவந்த ஸ்குவிட் கேம்-3, ஆங்கிலத்தில் வெளிவந்த ட்ரெய்ன் ரெக் பூப் க்ரூஸ் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. அமேசான் ப்ரைமில் இந்தியில் வெளிவந்த பஞ்சாயத்து-4, தெலுங்கில் வெளிவந்த கடிகாச்சலம், மராத்தியில் வெளிவந்த பரிவார், ஆங்கிலத்தில் வெளிவந்த கவுண்ட் டவுன்-1, ஆங்கிலத்தில் வெளிவந்த ஹவ் டூ ஹாவ் செக்ஸ் ஆகியவை வெளிவந்துள்ளன. ஜியோ ஹாட் ஸ்டாரில், இந்தியில் வெளிவந்த மிஸ்ட்ரி ஆங்கிலத்தில் வெளிவந்த தி ப்ரூட்டலிஸ்ட், தி…

Read More

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு அரசே வீடு ஒதுக்கீடு செய்து விட்டு அதை ரத்து செய்தது இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயல் என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் வர் கலைஞரின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு, ஞானபீடம், சாகித்திய அகாடமி விருதுகள் பெற்று, தமிழுக்கு தொண்டாற்றிய எழுத்தாளர்களை கவுரவிக்கும் வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு கனவு இல்லம் எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், கல்மரம் என்ற நாவலுக்கு சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு, சென்னை அண்ணா நகரில் 1409 சதுர அடி வீடு கடந்த 2022 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளதாக கூறி, கனவு இல்லம் திட்டத்தின் கீழ் திலகவதிக்கு வீடு…

Read More

திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் எம்பி ராபர்ட் குரூஸுக்கு எதிராக தொடர்ந்த தேர்தல் வழக்கில், பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, சுமார் ஒரு மணி நேரம் சாட்சியம் அளித்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சி.ராபர்ட் புரூஸ், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ராபர்ட் புரூஸ் தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களையும், வழக்கு விவரங்களையும் மறைத்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில், கடன்த 19 ம் தேதி நேரில் ஆஜராகி, ராபர்ட் புருசுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள், சான்று ஆவணங்களாக பதிவு செய்தார். வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்…

Read More

நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் போதைப் பொருள் விற்பனையாளர் பிரதீப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவிற்கும் காவல்துறை 25 ஆம் தேதி சம்மன் அனுப்பியது. கேரளாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் கிருஷ்ணா சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நேற்று ஆஜரானார். திரைப்பட பணிகளுக்காக கிருஷ்ணாவின் நண்பரிடம் பிரசாத் 50 லட்சம் பெற்றதாகவும், மோசடி பேர்வழி தெரிந்ததும் தொடர்பை துண்டித்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.நடிகர் ஸ்ரீகாந்தின் திரைப்படம் தயாரிப்பதால் அவர் தான் தன்னை பிரசாத்திடம் அறிமுகம் செய்து வைத்ததாகவும், மற்றப்படி நேரடி பழக்கமில்லை எனவும் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். அவரிடம் விடிய விடிய போலீசார் மேற்கொண்டனர். நடிகர் கிருஷ்ணா தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்றும் எனக்கு சில உடல் நல கோளாறுகள் உள்ளது அதன் காரணமாக என்னால் போதைப்பொருள் பயன்படுத்த முடியாது என தெரிவித்தார். ஆனால் நடிகர் கிருஷ்ணாவின் செல்போனில் கடந்த 2020 ஆம் ஆண்டு…

Read More

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் சண்முகம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “இந்தியாவின் பெரிய கட்சியாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சி கிடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் நலன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னமான அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே எங்களது கொடியை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் நிறுவி உள்ளோம். உயர் நீதிமன்ற உத்தரவின் பெயரில் எங்களது கட்சி கொடிக் கம்பங்களை அந்தந்த மாவட்டங்களில், அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். ஒரு சில இடங்களில் எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி கொடிக்கம்பங்களை அகற்றி வருகின்றனர். இது எங்களின் உரிமையை பறிப்பதாக உள்ளது. ஆகவே, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) கொடிக்கம்பங்களை அகற்ற தடை விதிக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தோம். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி…

Read More

இலங்கை குடிமகன் கைது குறித்து, அந்நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா என விளக்கமளிக்க புழல் சிறை நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்கில் கடந்த 2020ம் ஆண்டு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடுக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சுஜாந்தன் என்பவர், தனது கைது குறித்து இலங்கை தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கவில்லை என்பதால், இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்ய மத்திய,மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இலங்கையைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டது குறித்து அந்நாட்டு தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்காதது வியன்னா ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று தெரிவிக்கப்பட்டது. கைது குறித்து இலங்கை தூதரத்திற்கு மத்திய அரசு தான் தகவல் தெரிவிக்க வேண்டுமென, சிறை நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள்,…

Read More

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோன்று நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி, கோவை மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று தொடங்கி 3 நாட்களுக்கு கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் தங்கள் பயணத் திட்டங்களை அதற்கு தக்கவாறு திட்டமிட்டுக் கொள்ளலாம்.

Read More

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டு கூட்டுஅறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் நடைபெறும் ஹாங்காங் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் கூட்டு அறிக்கையில் பஹல்காம் தாக்குதல் குறித்து கண்டிக்காததற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஹாங்காங் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், சீனா, பாகிஸ்தான், ரஷியா, ஈரான் உள்பட 10 நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்று உரையாற்றினர். இதில் பேசிய ராஜ்நாத் சிங், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்தும் ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் விளக்கம் அளித்தார். மேலும், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் எந்த நாட்டையும் வெளிப்படையாக எஸ்சிஓ விமர்சிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து குறிப்பிடாததாலும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் வலுவான நிலைப்பாட்டை அறிக்கை பிரதிபலிக்கவில்லை எனக் கூறியும் கையெழுத்திட ராஜ்நாத் சிங் மறுத்துவிட்டார். மேலும், அந்த அறிக்கையில், பலுசிஸ்தான் பிரச்னையைக் குறிப்பிட்டு,…

Read More

இனி தமிழகம் முழுவதும் ஒரே விலையில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்யும் முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. முட்டை விலை எவ்வாறு மாநிலம் முழுவதும் ஒரே அளவில் நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதோ அதேபோன்று ஆடு மற்றும் கோழி இறைச்சிக்கான விலையை ஒரே அளவில் நிர்ணயம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசின் சார்பில் தினமும் விற்பனை விலையை அறிவிக்கும் வகையில் புதிய போர்ட்டல் தயாராகி வருகிறது. இந்த தனி போர்ட்டலில் ஆட்டிறைச்சி, நாட்டுக்கோழி இறைச்சி விலையை நிர்ணயம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆடு மற்றும் கோழி உயிருடன் என்ன விலை எனவும் தினசரி அப்டேட்டில் சொல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தினமும் முட்டை விலை நிர்ணயம் செய்யப்படுவது போல ஆடு மாடு கோழிகளின் விலை நிர்ணயம் செய்யும் வகையில் இந்த போர்ட்டல் உருவாகி வருவதாக கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் சுப்பையன் கூறியுள்ளார்.

Read More

ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யும் பொருட்களை கடையின் முன்பு எடை போட்டு, விற்பனை முனைய கருவியில் பதிவு செய்ய உத்தரவிட கோரிய மனுவிற்கு பதிலளிக்கும்படி மத்திய – மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நாட்டின் எந்த பகுதிகளில் இருந்தாலும் நியாய விலை கடைகளில் உணவு பொருட்களை வாங்க முடியும். இதற்காக அனைத்து நியாய விலை கடைகளிலும் மின்னணு விற்பனை முனைய கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மேம்படுத்தும் வகையில் உணவு பொருள் வினியோகத்தில் உள்ள குறைபாடுகளை களையவும், சரியான எடையில் பொருட்களை வழங்க மின்னணு விற்பனை கருவியுடன், மின்னணு எடை தராசை இணைக்க வேண்டுமென அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, நியாய விலை கடைகளில் உள்ள…

Read More