Author: Editor TN Talks
எழிலகத்தின் ஆவின் பாலகத்தில் பணியாற்றிய ஊழியர் பணி நீக்கம், காலாவதியான ஆவின் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை – ஆவின் நிர்வாகம் தமிழகத்தில் வாரம் இருமுறை ஆவின் பாலகத்தின் பொருட்களை ஆய்வு மேற்கொள்ளவும் ஆவின் மேலாண்மை இயக்குனர் அண்ணாதுரை உத்தரவு சென்னை எழிலகத்தில் செயல்படக்கூடிய ஆவின் பாலகத்தில் மணிகண்டன் என்பவர் மோர் பாக்கெட்டை வாங்கி குடித்துள்ளார் அப்போது அதிக புளிப்புடன் இருந்தவுடன் காலாவதியான தேதியை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் மோர் பாக்கெட்டு காலாவதியான தேதி முடிவடைந்தும் அரசு ஊழியர்கள் அதிகமாக இருக்கக்கூடிய சென்னை எழுலகத்தின் ஆவின் பாலகத்தில் காலாவதியான மோர் பாக்கெட் விற்பனை செய்யப்பட்டது மணிகண்டனுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ள நிலையில் எழிலகத்தின் ஆவின் பாலகத்தின் உரிமையாளர் மீதும் அங்கு பணியாற்றக்கூடிய ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி உணவு பாதுகாப்புத்துறையில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் ஆவின் நிர்வாகம் இதற்கு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது மேலும்…
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் கோலாகலம். ஆயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம். மதுரை ஜூன் 10: மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் ஆயிரகணக்கானோர் பங்கேற்று சுவாமி சுவாமி தரிசனம் செய்தனர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற ஸ்தலமுமான மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதனை தொடர்ந்து, பெருமாள், தாயாருடன் தினமும் பல்வேறு சிறப்பு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்ட வைபவம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு மதுரை டி.எம்.கோர்ட் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி. தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, நடைபெற்ற சிறப்பு பூஜைகளை தொடர்ந்து நூற்றுக்கணக்கான…
திமுக ஆட்சியில் தூய்மை பணியாளர்கள் முதல் அரசு உயர் பதவிகளில் பணியாற்றுபவர்கள் வரையிலும் தங்களது உரிமைகளை போராடி பெறவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், குப்பை வாகன ஓட்டுனர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு. மேலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்டவர்களை போலிசார் கைது செய்தனர். ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று இரண்டாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.. ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரப்படுத்துவார்கள் என்ற 2021-ம் ஆண்டு திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஒப்பந்த முறையை ரத்து செய்து மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என கோவை மாநகராட்சி நிர்வாகத்தை ண்டித்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கோவை மாநகராட்சியை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்…
திமுகவில் ஆயிரம் சாமிகள் இருந்தாலும் பெரியசாமி எனக்கு முக்கியமான சாமி, சிங்கத்தை வீழ்த்திய யானை பெரியசாமி என்றெல்லாம் கருணாநிதியால் பாராட்டு பெற்ற ஐ.பெரியசாமி இன்று திமுகவில் ஓரங்கட்டப்படுகிறாரோ என்ற சந்தேகம் கட்சியினர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் திமுக முகமாக வலம்வந்து கொண்டிருக்கும் ஐ.பெரியசாமி, அமைச்சராகவும் திமுக துணை பொதுச்செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். தற்போது ஆத்தூர் தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கினாலும் தனது தனி செல்வாக்கில் வெற்றி பெற கூடிய நபர். திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் விழாக்களின் பத்திரிக்கையாகட்டும், போஸ்டர்களாகட்டும் ஐ.பெரியசாமி பெயர் இல்லாமல் இருக்காது. அந்தளவிற்கு தனது ஆதரவாளர்களை பட்டி தொட்டியெல்லாம்வளர்த்து வைத்துள்ளார். அதற்கு சாட்சியாக 2021 தேர்தலில் தமிழ்நாட்டிலே அதிக வாக்குகள் அதாவது 1,45000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். சட்டமன்றத்திற்கு தந்தை மகன் சேர்ந்து சென்ற பட்டியலில் கருனாநிதி-ஸ்டாலின், வீரபாண்டி ஆறுமுகம்- ராஜாவுக்கு அடுத்தபடி ஐ.பெரியசாமியும் அவரதும் மகனுமான செந்தில்குமாரும் ஒரே நேரத்தில் சட்டமன்றத்திற்கு…
இன்று அதிகாலை புனேயில் இருந்து, 178 பயணிகளுடன் தரையிறங்க வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மீது, லேசர் லைட் ஒளி அடிக்கப்பட்டதால், தரை இறங்க வந்த விமானம், சிறிது நேரம் வானில் தத்தளித்துவிட்டு, அதன் பின்பு பத்திரமாக தரையிறங்கியது. இது குறித்து சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, பரங்கிமலை, கிண்டி போலீசுக்கும் தகவல் தெரிவித்து விசாரணை. சென்னை விமான நிலையத்தில், இரண்டு வாரங்களில் இது மூன்றாவது சம்பவம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு புனேயில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், 178 பயணிகளுடன் இன்று அதிகாலை சென்னையில் தரையிறங்க வந்து கொண்டு இருந்தது. விமானம் அதிகாலை 1.10 மணியளவில், சென்னையில் தரையிறங்குவதற்காக படிப்படியாக பறக்கும் உயரத்தை குறைத்து தாழ்வாகப் பறந்து கொண்டு இருந்தது. அப்போது கிண்டி பகுதியில் இருந்து சக்தி வாய்ந்த லேசர் லைட் ஒளிக்கதிர் விமானத்தை நோக்கி பீய்த்து அடிக்கப்பட்டது. இதை…
மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மறுதேர்வு நடத்தக் கோரி 16 மாணவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளில் தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4ம் தேதி நடத்தப்பட்டது. அன்றைய தினம் சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தங்களால் முறையாக தேர்வு எழுத முடியவில்லை எனக்கூறி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்களும், குன்றத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 2 மாணவர்களும், கே கே நகர் பத்ம ஷேசாச்திரி 1 மாணவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, மத்திய அரசு நடத்திய விசாரணையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு நியாயமானது என்றும் 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள நிலையில் மறுதேர்வு நடத்த…
போலீசார் அனுப்பும் இ சலான் போல் போலீஸ் சலான் அனுப்பி மோசடி செய்ததாக 20 புகார்கள் பெறப்பட்டு உள்ளது. டிஜிட்டல் பணப்பதிவர்த்தனைகள் அதிகரித்து உள்ள சூழலில், அது சார்ந்த சைபர் க்ரைம் குற்றங்களும் மோசடிகளும் அதிகரித்து உள்ளன. மோசடிகள் குறித்து காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஒரு மோசடி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால் மோசடி நபர்கள் அடுத்த மோசடியை அரங்கேற்ற துவங்குகின்றனர். தற்பொழுது போக்குவரத்து விதி மீறல்களுக்கு ஆன்லைன் வழியாக காவல்துறை அபராதம் விதித்து. இ சலான் வாகன ஓட்டிகளின் மொபைல் எண்ணுக்கு அனுப்புகின்றனர். அபராதத்தை செலுத்த அரசு பரிவாகன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நடைமுறையை பின்பற்றி காவல் துறையினர் அனுப்புவதை போலவே போக்குவரத்து விதி மீறிய வாகன ஓட்டிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்புகின்றனர். வாட்ஸ் அப்பில் மட்டுமே அனுப்பப்படும் இக்குறுஞ்செய்தியில் விதி மீறலில் ஈடுபட்டது போல் வாகனத்தின் புகைப்படம், இடம், நேரம் அபராத தொகை உள்ளிட்ட…
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 10 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெறும் வகையில் ரூ.1.85 கோடியில் மாபெரும் புத்தக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் திறந்து வைத்தார். வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புத்தக பூங்காக்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதையடுத்து, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ.1.85 கோடியில் மாபெரும் புத்தக பூங்கா தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. அகராதி, அரசியல், இலக்கியம், கல்வியியல், இயற்பியல், வேதியியல், கணிதவியல், தாவரவியல், விலங்கியல், உடற்செயலியல், உயிரியல், வேளாண்மை, மருத்துவம், பொருளாதாரம், பன்னாட்டு பொருளாதாரம், வணிகவியல், தமிழக, இந்திய, உலக வரலாறு, இங்கிலாந்து – ஐரோப்பிய வரலாறு, நிலவியல், மனையியல், சமூகவியல், உளவியல், வானியல், நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள், உயர்கல்வி நூல்கள், கீழடி நூல்கள், செவ்வியல் நூல்கள், சிறார் நூல்கள்,…
சட்டப்பேரவை அறிவிப்பை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தி அடைந்த ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ள 2000 தம்பதியர்களுக்கு சிறப்பு செய்ய ஆணையர் உத்தரவிட்டுள்ளார் புடவை, வேட்டி சட்டை, மாலை, பூ, பழம் என ஒருவருக்கு ரூ.2500 வீதம் நடத்த வலியுறுத்தல் இத்திட்டம் குறித்து பொது மக்களுக்கு அறிவிக்கும் வகையில் திருக்கோயில்களில் விளம்பரப்பதாகைகள் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து சமய அறநிலையத்துறை மேலும், சட்டமன்ற அறிவிப்பில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை எய்திட தொடர்புடைய மண்டல இணை ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் சுற்றறிக்கை
அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்களின் மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்ரமணியன் அவர்களை சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் இருப்பதாலும், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று தாங்கள் எதிர்த்து வருவதாலும் அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஏ மற்றும் பி வடிவங்களில் கையெழுத்திட எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அதிகாரம் இல்லை, எனவே அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ள இருவரின் வேட்பு மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று அதிமுக வழக்கறிஞர், எடப்பாடி பழனிச்சாமி எதிர்பாளருமான திண்டுக்கல் சூரியமூர்த்தி தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்பிரமணியன் அவர்களை சந்தித்து வலியுறுத்தினார்.