Close Menu
    What's Hot

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    நீட் தேர்வு தேவையில்லை; மாணவர்களுக்காக மனம் திட்டம் – அமைச்சர் அருண்ராஜ்

    தவறுகளை மறைக்க புது பிரச்சனைகளை திமுக உருவாக்குகிறது – அமைச்சர் விஜய்பாலாஜி குற்றச்சாட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மழையால் மின்தடை – NEET மறுதேர்வு கோரிய மாணவர்கள் வழக்கு: சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
    தமிழ்நாடு

    மழையால் மின்தடை – NEET மறுதேர்வு கோரிய மாணவர்கள் வழக்கு: சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

    Editor TN TalksBy Editor TN TalksJune 10, 2025Updated:June 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    neet 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மறுதேர்வு நடத்தக் கோரி 16 மாணவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளில் தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4ம் தேதி நடத்தப்பட்டது. அன்றைய தினம் சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தங்களால் முறையாக தேர்வு எழுத முடியவில்லை எனக்கூறி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்களும், குன்றத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 2 மாணவர்களும், கே கே நகர் பத்ம ஷேசாச்திரி 1 மாணவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, மத்திய அரசு நடத்திய விசாரணையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு நியாயமானது என்றும் 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள நிலையில் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இதனை எதிர்த்து மாணவர்கள் சார்பில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், குறிப்பிட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய
    470 மாணவர்களில் 13 பேர் மட்டுமே நீதிமன்றத்தை நாடியுள்ளதாக கூறினார்.

    மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எத்தனை மாணவர்கள் என்று பார்க்காமல் ஒரு மாணவர் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென கூறினார்.

    மேலும் , தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

    இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஜூன் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கவும் மறுப்பு தெரிவித்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇ சலான் பேரில் மோசடி : கோவையில் ஒரு மாதத்தில் 20 புகார்கள்
    Next Article தரையிறங்கும் விமானங்கள் மீது லேசர் லைட் தாக்கம் – மூன்றாவது முறையாக மீண்டும் அதே சம்பவம்!
    Editor TN Talks

    Related Posts

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    June 20, 2026

    நீட் தேர்வு தேவையில்லை; மாணவர்களுக்காக மனம் திட்டம் – அமைச்சர் அருண்ராஜ்

    June 20, 2026

    தவறுகளை மறைக்க புது பிரச்சனைகளை திமுக உருவாக்குகிறது – அமைச்சர் விஜய்பாலாஜி குற்றச்சாட்டு

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    நீட் தேர்வு தேவையில்லை; மாணவர்களுக்காக மனம் திட்டம் – அமைச்சர் அருண்ராஜ்

    தவறுகளை மறைக்க புது பிரச்சனைகளை திமுக உருவாக்குகிறது – அமைச்சர் விஜய்பாலாஜி குற்றச்சாட்டு

    ஈரான்: ஹிஜாப் அணியாமல் பாடிய பாடகிக்கு 74 சவுக்கடி தண்டனை..!! வலுக்கும் எதிர்ப்பு..!!

    ஒரே பவுலர்… ஒரே ஃபீல்டர்… ஹாட்ரிக் கேட்ச்!. ரோகித் – பிரசித் கிருஷ்ணா அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.