Author: Editor TN Talks

நடிகை சிம்ரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். “சந்திரமுகி” படத்தில் ஜோதிகா நடித்த முக்கியமான கதாபாத்திரத்தை, ஆரம்பத்தில் நான் செய்ய வேண்டியதுதான். ஆனால், குடும்ப காரணங்களால் அந்த வாய்ப்பை விட்டு விலக வேண்டி வந்தது. அதனால் ரஜினிகாந்த் சார் உடன் நடிக்கும் வாய்ப்பு என்னிடம் அந்த நேரத்தில் தவறி போனது,” என்று கூறியுள்ளார் சிம்ரன். அதன் பின்னர், “பேட்டை” திரைப்படம் மூலம் ரஜினிகாந்த் சார் உடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது என்றும் கூறினார். சிம்ரனின் இந்த தகவல் தற்போது ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Read More

பாசன கிணற்றில் அபாயகரமான ரசாயன கழிவுகளை கொட்டி, நிலத்தடி நீரை மாசடைய செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். கோவை, சூலூர் அருகே பீடம்பள்ளியில் உள்ள ஒரு பாசன கிணற்றில் கடந்த சில மாதங்களாக 500 லாரிகளுக்கு மேலாக பவுண்டரியில் இருந்து வெளியேறும் அபாயகரமான ரசாயன கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் அருகே உள்ள விவசாய நிலங்கள் சுற்றுப்புற கிராம மக்கள், கால்நடைகள் மற்றும் அருகில் செல்லும் நீரோடைகள் மாசடைந்து பாதிக்கப்பட்டு உள்ளன. ரசாயன கழிவுகள் காற்றில் கலந்து அருகில் உள்ள விவசாய நிலங்களில் பரவி மண்வளம், பாதிக்கப்பட்டு, விவசாய பணி மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. அண்மையில் பெய்த மழை நீரோடு இந்த ரசாயன கழிவுகள் கலந்து நிலத்தடி நீரை மாசுபடுத்தி உள்ளது. இந்த ரசாயன கழிவு நீர் கனமழை பெய்யும் காலங்களில் விவசாய நிலங்களில் உள்ள நீரோடை வழியாக…

Read More

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத சங்கராபுரம் காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 5 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக, திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டுவைச் சேர்ந்த சக்தி என்பவருக்கு எதிராக கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, சக்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் விரைவாக இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென 2024 மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி, அந்த உத்தரவுப்படி இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது குறித்து ஜூன் 4 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, விசாரணை அதிகாரியான சங்கராபுரம் ஆய்வாளருக்கு…

Read More

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தும் நிகழ்ச்சியை காண முடியாதவருக்கு, 50 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையம் உத்தரவு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி, மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் 2023 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட இந்த நிகழ்ச்சி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டடு பின்னர், செப்டம்பர் 10 ம் தேதி நிகழ்ச்சி நடத்தப்பட்டது செப்டம்பர் மாதம் நடந்த போது போக்குவரத்து நெரிசல் காரணமாக நிகழ்ச்சியை கண்டு ரசிக்க முடியாததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், டிக்கெட் கட்டணத்தை வட்டியுடன் திருப்பித் தர கோரியும் சென்னையை சேர்ந்த அர்ஜுன் என்பவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு

Read More

காவல்துறை தரப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்க வேண்டும்- நீதிபதி மனுதாரர் மனு குறித்து 12ஆம் தேதிக்குள் உரிய முடிவு எடுக்க வேண்டும் காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. காவல்துறை மனுவினை பரிசீலனை செய்யும் வரை நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை செய்யலாம் ஆனால் பூஜைகள் எதுவும் நடத்தக்கூடாது – நீதிபதி பெங்களூரு கிரிக்கெட் மைதானத்தில் நடந்த சம்பவம் போன்று நடந்தால் என்ன செய்வது – அரசு தரப்பில் வாதம். மதுரை முத்துகுமார் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு. இந்து முன்னணி அமைப்பு சார்பில் வருகிற ஜூன் மாதம் 22-ம் தேதி மதுரை ரிங் ரோடு, பாண்டிகோவில் அருகில் உள்ள அம்மா திடலில் பக்தியை வளர்க்க முருக பக்தர்களின் ஆன்மீக மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த வளாகத்திற்குள்,முருக பெருமானின் அறுபடைவீடு திருக்கோவில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள் அமைக்கப்பட உள்ளது. முருக பெருமானின் அறுபடைவீடு திருக்கோவில்களின் தற்காலிக…

Read More

திருவண்ணாமலை கோவில் தாமரை குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள கோவில் குளமான தாமரை குளத்தின் நான்கு பக்கங்களிலும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களில் இருந்த மனித கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள், குளத்தில் திறந்து விடப்படுவதாகவும் கூறி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு, ஆக்கிரமிப்புகளை அரசு கண்டறிந்து 46 வாரங்கள் கடந்தும் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்து, இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. பொதுவாக ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், திருவண்ணாமலை குளம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை கண்காணிக்க, உயர் நீதிமன்ற…

Read More

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரின் சகோதரர் அசோக் குமார், செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் பி. சண்முகம், உள்ளிட்ட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றபத்திரிகையுடன், சுமார் 50 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை காகித வடிவில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிடபட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட…

Read More

தமிழ் திரையுலகைக் காப்புரிமை விவகாரம் பெருமளவில் பாதித்து வருகிறது. தனது பாடல்களை அனுமதி இன்றி பயன்படுத்தும் ஒவ்வொரு இயக்குனர், தயாரிப்பாளர் மீதும், இளையராஜா இந்தக் காப்புரிமை கணையைத் தவறாமல் தொடுத்து வருகிறார். தற்போது, அவரது முன்னாள் நண்பரான கவிஞர் வைரமுத்துவும் அவருடன் சேர்ந்துகொண்டு, ”என்னிடம் தெரிவிக்காமல், என் பாட்டு வரிகளைக் கொண்டு படங்களுக்கு பெயர் வைத்துக் கொள்வது நியாயமா?” என்று ஆதங்கப்பட்டுள்ளார். வைரமுத்து ஏன் இப்படிச் செய்கிறார்? சினிமாவில் ஓரங்கட்டப்படும் வைரமுத்து? 1980 களிலிருந்து கவிஞர் வைரமுத்துவால் தமிழ் திரைப்படப் பாடல்களின் புதிய சகாப்தம் உருவானது. தமிழ் இலக்கியத்தின் ஆழமும், மண் மணம் மாறாத கிராமிய பாடல்களின் எளிமையும், உயர்தர கவிதையும் வைரமுத்துவின் பாடல்களில் எதிரொலித்தன. அவை அன்றைய ரசிகர்களின் பாடல்களில் தீராக் கொண்டாட்டங்களாக மாறிப் போயின. இளையராஜா – வைரமுத்து இணை பல வெற்றி பாடல்களைக் கொடுத்தது. பின்னர், இளையராஜா உடனான நட்பு முறிந்ததும், வைரமுத்துவுக்கு தேவா, வித்யாசாகர், ஏ…

Read More

2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி ராமதாஸ் மற்றும் சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, 6 இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கலுக்காக தமிழக சட்டப்பேரவைச் செயலக கூடுதல் செயலர் சுப்பிரமணியன் தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக பேரவைச் செயலக இணைச் செயலர் கே.ரமேஷ் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். திமுக சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோரும், அதிமுக சார்பில் தனபால், இன்பதுரை ஆகியோரும் அறிவிக்கப்பட்டனர். கடந்த 2ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் பத்மராஜன் உள்ளிட்ட 2 சுயேச்சைகள் மனு தாக்கல் செய்தனர். கடந்த 6-ம் தேதி திமுக வேட்பாளர்களான கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். அதேபோல, அதிமுக சார்பில் இன்பதுரை,…

Read More

கோவை, கந்தேகவுண்டன்சாவடி (க.க. சாவடி) அரசு உயர் நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் முருகனுக்கு எதிராக பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. அங்கு பயிலும் மாணவிகளை தவறான முறையில் தொடுதல், ஜாதி அடிப்படையில் பேதப் பிரிவு செய்து நடத்துதல் போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டதாக புகார்கள் கூறப்படுகின்றன. இந்தச் சம்பவம் மாணவர்கள் இடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் பள்ளியில் 11 வயதுடைய மாணவி, 6 ம் வகுப்பில் படித்து வருவதாகவும், அங்கு பணியாற்றும் முருகன் ஆசிரியர் அந்த மாணவியிடம், நீங்கள் எல்லாம் குப்பை வேலைக்குத் தான் தகுந்தவர்கள் என அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், சகோதரனின் தலைமுடியை பிடித்து மேஜையில் அடித்ததாகவும் தெரிவித்து உள்ளார். மேலும், நீங்கள் படிப்பது சரியில்லை என கூறி தனியாக வகுப்பறையில் கதவின் ஓரத்தில் உட்கார வைத்ததாகவும், மாணவி கூறி உள்ளார். இதுகுறித்து மாணவியின் குடும்பத்தினர் முதன்மை கல்வி அதிகாரியிடம் புகார் அளித்ததோடு, கோவை…

Read More