Author: Editor TN Talks
கோவை – திருப்பூர் மாவட்டம் எல்லையில் கருமத்தம்பட்டி காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக பையுடன் ஒரு வாலிபர் வந்தார். அவரை மடக்கி பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அவரிடம் 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கட்டு, கட்டாக இருந்தன. ஆனால் கள்ள ரூபாய் நோட்டுக்கள் ஒரு பக்கம் மட்டும் அச்சிடப்பட்டு இருந்தது. கள்ள ரூபாய் நோட்டுகளின் இடையில் வெற்று தாள்கள் சொர்கப்பட்டு இருந்தது. இதை அடுத்து அந்த ஆசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் தர்மபுரியை சேர்ந்த இளவரசன் என்பதும், அவர் கருமத்தம்பட்டி சாரதா மில் சாலை அருகே ஒரு வீட்டில் தங்கி இருப்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவருடைய வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். அப்பொழுது அங்கும் கட்டு, கட்டாக 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள்…
எனது தலைப்பை சூட்டுவதற்கு பட நிறுவனங்கள் என்னிடம் அனுமதி கேட்பது நாகரிகம் ஆகாதா? – வைரமுத்து எனது பல்லவியில் இருந்து எத்தனையோ தலைப்புகள் உருவாகி இருக்கின்றன எனது வார்த்தைகள் படத்தின் பெயர் ஆனதற்கு நான் இதுவரை என்றுமே கேள்வி கேட்டதில்லை எனது தலைப்பை பயன்படுத்துவதற்கு கூட இதுவரை யாரும் என்னிடம் ஒரு மரியாதைக்கு கூட கேட்டதில்லை செல்வம் பொதுவுடமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடமை ஆகிறதே என்பதில் அகமகிழ்வேன் ஏன் என்னை கேட்காமல் பயன்படுத்தினீர்கள் என கேட்பது எனக்கு நாகரீகம் இல்லை டூரிஸ்ட் பேமிலி படத்தில் மலையூர் மம்பட்டியான் பாடல் வைப்பதற்கு உங்களிடம் அனுமதி கேட்கப்பட்டதா என தியாகராஜனிடம் சமீபத்தில் கேள்வி எழுந்தது முந்தைய பாடலுக்கு அனுமதி கேட்கப்படுகிறதா என அவ்வப்போது கேள்வி எழுந்த நிலையில் வைரமுத்து பதிவு
இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் அருகே தடை செய்யப்பட்ட தூவல் நீர்வீழ்ச்சியில், செல்ஃபி எடுக்கும் போது கால் வழுக்கி பாறையில் தொங்கிய மதுரை வாலிபர். கயிறு மூலம் உயிரோடு மீட்ட அப்பகுதி மக்கள் . வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் அருகே, தடை செய்யப்பட்ட தூவல் நீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுக்கும் போது கால் வழுக்கி பாறையில் தொங்கிய மதுரையை சேர்ந்த வாலிபரை அப்பகுதி மக்கள் கயிறு மூலம் உயிரோடு மீட்டனர். தமிழத்தின் மதுரையில் இருந்து சனிக்கிழமையான நேற்று (07.06.25) மாலை நான்கு பேர் கொண்ட நண்பர்கள் குழுவினர் கேரளாவிற்கு சுற்றுலா வந்துள்ளனர். தமிழக கேரள எல்லையை இணைக்கும் ராமக்கல்மேடு வந்த அவர்கள், அருகில் உள்ள தடை செய்யப்பட்ட தூவல் அருவிப் பகுதிக்கு சென்று விழிம்பில் நின்று செல்ஃபி எடுத்துள்ளனர். அதில் ஒருவர் கால் வழுக்கி அருவி நீர் வழிந்து செல்லும் பாறையை பிடித்தவாறு தொங்கிய…
மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத பாஜக ஆளும் மாநிலங்களின் எம்.பி களின் எண்ணிக்கையை அதிகரித்து தமிழ்நாடு உள்ளிட்ட மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க சதி செய்கிறது ஒன்றிய பாஜக அரசு ஒன்றிய பாஜக அரசு மக்களாட்சி என்ற மகத்தான அரணை புல்டோசர்களைக் கொண்டு இடித்து தள்ளி நாசம் செய்யும் காரியங்களைத் தொடர்ந்து செய்து வருகிறது. எந்தவித விவாதங்களுமின்றி மக்களைப் பாதிக்கும் சட்டங்களைக் கொண்டு வருவது, சர்வாதிகார போக்கோடு மாநிலங்களை வஞ்சிப்பது தொடர்கதையாகி வருகிறது. அதன் உச்சமாக அவர்கள் நிறைவேற்றத் துடிப்பது தான் 2027 மக்கள்தொகை அடிப்படையில் மேற்கொள்ள இருக்கும் மக்களவைத் தொகுதி மறுவரையறை. 84 வது அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தின் படி 2026 க்கு பின் எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள வேண்டும். இதை நிறைவேற்றி மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத பாஜக ஆளும் மாநிலங்களின் MP களின் எண்ணிக்கையை…
தமிழர்களைத் திருடர்கள் என்பது போல ஒடிசா சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசி, கொச்சைப்படுத்திவிட்டு மதுரையில் கீதா உபதேசம் நடத்திக் கொண்டிருக்கிறார் அமித்ஷா! தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை மணிப்பூராக மாற்றிவிடுவார்கள்! அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை. ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற பாஜகவின் அஜண்டாவை போல ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் ’ஒரே ஆள் ஒரே பேச்சு’ என ரீதியில் பேசி வருகிறார். ’’தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என வருத்தமாக இருக்கிறது’’ எனச் சொல்லியிருக்கிறார். கடந்த பிப்ரவரியில் கோவைக்கு வந்த போது இதே டயலாக்கைதான் பேசினார். தமிழ் மொழி மீதும் தமிழர்கள் மீதும் அமித்ஷா காட்டும் அக்கறை என்பது பசுந்தோல் போர்த்திய புலி. ’’ஒடிசா, ஹரியானா, மஹாராஷ்டிரா, டெல்லி போல தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சி மலரும்’’ எனச் சொல்லியிருக்கிறார் அமித்ஷா. கடந்த ஆண்டு நடந்த ஒடிசா சட்டமன்றத் தேர்தலைத் தமிழர்கள் எப்படி மறப்பார்கள்?…
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த சீத்தம்பூண்டி கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி நேற்றிரவு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தோட்டத்து வீடுகளில் தனியாக வாழும் மக்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையில், அவற்றைத் தடுக்கத் தெரியாமல் திமுக அரசு தடுமாறி வருவது கண்டிக்கத்தக்கது. அண்மைக்காலங்களில் தோட்டத்து வீடுகளில் தனியாக வாழ்ந்து வரும் பெரியவர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்படுகின்றனர். 6 மாதங்களுக்கு முன் நவம்பர் 28-ஆம் தேதி திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 78 வயது தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமாத்தாள், செந்தில்குமார் ஆகிய மூவரும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அதன்பின், கடந்த மே மாதத் தொடக்கத்தில் ஈரோடு மாவட்டத்தின் விளாங்காட்டு வலசு கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த முதிய இணையரான ராமசாமி,…
கோயம்புத்தூர் பாப்பநாயக்கன் பாளையம் சாலையில் உள்ள மகாலட்சுமி புத்தகக் கடையில் பணியாற்றும் இளைஞரிடம், பத்திரிகையாளர் என தன்னை அறிமுகப்படுத்தி, மதுபோதையில் இருந்து பிரபு என்ற நபர் ரூ.5,000 தொகை பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டு உள்ளார். கோவை, பி.என் பாளையத்தை சேர்ந்த ப்ரீவின் (25), இவர் மகாலட்சுமி புத்தகக் கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று மதுபோதையில் வந்த பிரபு (48), என்பவர், நான் பத்திரிகையாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, 5000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பணத்தைக் கொடுக்க மறுத்ததால், அவதூறான வார்த்தைகளில் பேசியும் , கடையில் விற்கப்படும் பொருட்கள் தடை செய்யப்பட்டவை என்று கூறி, பத்திரிகையில் எழுதுவதாகவும் மிரட்டி உள்ளார். இந்த சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில், Race Course காவல் துறையினர் பிரபுவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவையில் நடைபெறும் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி : பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்பு !!!” மக்களால் மட்டுமல்ல, மோடி ஐயா, கலைஞர் ஐயா, ஸ்டாலின் ஐயா அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அன்பு கொடுக்கக் கூடிய மனிதர் இளையராஜா – அண்ணாமலை புகழாரம்… கோவைக்கு இசை நிகழ்ச்சிக்காக வந்து உள்ள இசைஞானி இளையராஜாவினை பா.ஜ.க வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர் தங்கி இருந்த நட்சத்திர விடுதிக்கு சென்று சந்தித்து உரையாடினார். பின்னர் கோவையில் உள்ள கோவைப்புதூர் பகுதியில் அவர் நடத்திய இசை நிகழ்ச்சிக்கு சென்ற அவர், இளையராஜாவை பற்றி புகழாரம் சூட்டினார். அப்போது பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது :- இசைஞானி மேஸ்ட்ரோ என்னை பொறுத்த வரை இசை கடவுள் ஐயா இளையராஜா, அவர்களோடு இருந்து கொண்டு இருக்கிறோம், அவரைப் பார்ப்பதற்கு நாம் எல்லோரும், எல்லாத்தையும் மறந்து மனிதர்களாக, இசை பிரியர்களாக இருந்து…
பூஜை செய்தால் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி நூதன முறையில் மோசடி. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள T. கள்ளிப்பட்டியைச் சேர்ந்த சித்தார்த்தன் மற்றும் அவரது மகன் விசுவாமித்திரன் இருவரும் சேர்ந்து பணத்தை வைத்து பூஜை செய்தால் இரண்டு மடங்காக பணம் பெருகும் என்று ஆசை வார்த்தை கூறி மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமியிடம் ஒன்பது லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளனர். சித்தார்த்தன் மற்றும் அவரது மகன் விசுவாமித்திரன் ஆகிய இருவரும் சேர்ந்து அழகர்சாமி கொடுத்த பணத்தை தங்கள் வீட்டில் வைத்து பூஜை செய்து சூட்கேசில் கொடுத்துள்ளனர். அதை வாங்கிய அழகர்சாமி தனது வீட்டிற்கு கொண்டு சென்று சூட்கேசை திறந்து பார்த்தபோது சூட்கேஸ் முழுவதும் மல்லிகைப்பூ மட்டும் நிரப்பி இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தந்தையும், மகனும் சேர்ந்து தன்னை மோசடி செய்தது தெரியவந்ததைத் தொடர்ந்து பெரியகுளம் பகுதியில் உள்ள T.கள்ளிப்பட்டியில் உள்ள சித்தார்த்தனிடம் வந்து…
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கஞ்சா வாங்கி கம்பம்மெட்டு வழியாக கடத்தி வந்த குமுளியை சேர்ந்த 18 வயது நிரம்பிய இரு இளைஞர்கள் இடுக்கி கலால் துறையின் பறக்கும் படையினரால் கைது செய்யப்பட்டு தொடுபுழா சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழக -கேரள எல்லையை இணைக்கும் கேரள மாநிலம் இடுக்கி அடிமாலி கலால் துறையின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பறக்கும் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி கோதமங்கலத்தில் இருந்து குமுளி வந்த தனியார் பேருந்தை அடிமாலியில் சோதனையிட்டனர். அப்போது பேருந்தில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு கிலோ கஞ்சா வை இளைஞர்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த இரு இளைஞர்களையும் போலீசார் கைது செய்து,அவர்கள் வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் குமுளி பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய அப்சல் மற்றும் ஆஷிக்…