Close Menu
    What's Hot

    அப்பாடா..!! ஒரு வழியா வாய்ப்பு கொடுத்தாங்களே..!! MLA பேச்சால் சிரித்த முதல்வர் விஜய்..!!

    அரசியலில் புதிய சகாப்தம்!. சட்டசபையில் முதலமைச்சர் விஜய்க்கு சபாநாயகர் புகழாரம்!

    தெருநாய் பிரச்சனை: 4 வாரங்களுக்கு அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»திமுக அரசின் முகமூடி கிழிந்தது: வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு?-அன்புமணி இராமதாஸ் குற்றச்சாட்டு
    அரசியல்

    திமுக அரசின் முகமூடி கிழிந்தது: வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு?-அன்புமணி இராமதாஸ் குற்றச்சாட்டு

    Editor TN TalksBy Editor TN TalksJune 8, 2025Updated:June 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbumani 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த சீத்தம்பூண்டி கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி நேற்றிரவு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தோட்டத்து வீடுகளில் தனியாக வாழும் மக்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையில், அவற்றைத் தடுக்கத் தெரியாமல் திமுக அரசு தடுமாறி வருவது கண்டிக்கத்தக்கது.

    அண்மைக்காலங்களில் தோட்டத்து வீடுகளில் தனியாக வாழ்ந்து வரும் பெரியவர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்படுகின்றனர். 6 மாதங்களுக்கு முன் நவம்பர் 28-ஆம் தேதி திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 78 வயது தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமாத்தாள், செந்தில்குமார் ஆகிய மூவரும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அதன்பின், கடந்த மே மாதத் தொடக்கத்தில் ஈரோடு மாவட்டத்தின் விளாங்காட்டு வலசு கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த முதிய இணையரான ராமசாமி, பாக்கியலட்சுமி ஆகியோரை கொள்ளையர்கள் அடித்துக் கொலை செய்து விட்டு, 15 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அடுத்தடுத்து நடந்த இந்தக் கொலைகளால் தமிழ்நாட்டு மக்களிடம் பெரும் அச்சம் ஏற்பட்டது.

    நவம்பர் மாதம் நடந்த மூவர் படுகொலைக்கு காரணமானவர்கள் 6 மாதங்களுக்கும் மேலாக கைது செய்யப்படாத நிலையில், மேலும் இருவர் படுகொலை செய்யப்பட்டதால், தமிழக காவல்துறையின் செயல்திறன் குறித்து வினாக்கள் எழுப்பப்பட்டன. அதனால், விளாங்காட்டு வலசு கொலை வழக்கில் தொடர்புடையதாக ஆச்சியப்பன், மாதேஸ்வரன் , ரமேஷ், ஞானசேகரன் ஆகிய நால்வரை கைது செய்த காவல்துறையினர், இவர்கள் தான் சேமலைக்கவுண்டன்பாளையத்தில் மூவரையும் கொலை செய்ததாகக் கூறி வழக்குகளை முடித்தனர். அப்போதே அவர்கள் தான் உண்மையான கொலையாளிகளா? என்பது குறித்து ஐயங்கள் எழுப்பப்பட்டன.

    இத்தகைய சூழலில் தான் பரமத்தி அருகே மேலும் ஒரு படுகொலை நிகழ்ந்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள் என்றால், இந்தக் கொலையை செய்தவர்கள் யார்? ஒருவேளை இந்தக் கொலையை செய்தவர்கள் புதிய கொலையாளிகள் என்றால், அதைத் தடுக்க அரசும், காவல்துறையும் தவறியது ஏன்? தோட்டத்துக் கொலைகளைத் தடுக்க பண்ணை வீடுகளை ஒட்டிய பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், காமிராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் காவல்துறை கூறியிருந்த நிலையில் அவற்றையும் தாண்டி இந்த படுகொலை எவ்வாறு நடந்தது? என்பதற்கு தமிழக அரசும், காவல்துறையும் விளக்கமளிக்க வேண்டும். மொத்ததில் குற்றவாளிகளைப் பிடித்துவிட்டதாக நாடகமாடிய திமுக அரசின் முகமூடி கிழிந்து விட்டது.

    தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிறகு இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு 5 பேர் படுகொலை செய்யப்படுகின்றன. சாலையில் சென்றாலும், வீடுகளில் இருந்தாலும் மக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. மொத்தத்தில் தமிழ்நாடு வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறி வருகிறது. இதற்கெல்லாம் காரணமான செயல் திறனற்ற திமுக அரசை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் வீட்டுக்கு அனுப்பப்போவது உறுதி.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவையில், பத்திரிகையாளர் எனக் கூறி புத்தக கடையில் பணம் கேட்டு மிரட்டியவர் கைது
    Next Article தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா?’’ எனக் கேட்ட அமித்ஷா, தமிழ், தமிழர்கள் என மதுரையில் வந்து …
    Editor TN Talks

    Related Posts

    அப்பாடா..!! ஒரு வழியா வாய்ப்பு கொடுத்தாங்களே..!! MLA பேச்சால் சிரித்த முதல்வர் விஜய்..!!

    June 22, 2026

    அரசியலில் புதிய சகாப்தம்!. சட்டசபையில் முதலமைச்சர் விஜய்க்கு சபாநாயகர் புகழாரம்!

    June 22, 2026

    தெருநாய் பிரச்சனை: 4 வாரங்களுக்கு அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு!

    June 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அப்பாடா..!! ஒரு வழியா வாய்ப்பு கொடுத்தாங்களே..!! MLA பேச்சால் சிரித்த முதல்வர் விஜய்..!!

    அரசியலில் புதிய சகாப்தம்!. சட்டசபையில் முதலமைச்சர் விஜய்க்கு சபாநாயகர் புகழாரம்!

    தெருநாய் பிரச்சனை: 4 வாரங்களுக்கு அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு!

    முதலமைச்சர் விஜய் பிறந்தநாள்!. அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

    சட்டசபையில் எங்களை பேச அனுமதிக்கல..!! வெளிநடப்பு செய்த இபிஎஸ் பகீர் குற்றச்சாட்டு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.