Author: Editor TN Talks
ஆஸ்திரேலியா நாட்டு பறவையான ஈமு கோழியை வளர்த்தால் அதில் நல்ல லாபம் கிடைக்கும் எனக்கூறி ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கடந்த 2011 ஆம் ஆண்டு மோசடி நடைபெற்றது. இதை நம்பி தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் ஈமு கோழி வளர்ப்பு தொடர்பான தொழில்களில் முதலீடு செய்தனர். ஆயிரக்கணக்கானோரிடம் முதலீடுகளை பெற்றுக் கொண்ட சுசி ஈமு கோழி உரிமையாளர் குருசாமி , பணத்தை கொடுக்காமல் மோசடி செய்தார். இது தொடர்பாக தமிழகம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பொருளாதார குற்றப்பிரிவில் பதியப்பட்டது. இதில் சேலத்தில் பதியப்பட்ட வழக்கில் 385 பேரிடம் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்த வழக்கு கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்றைய தினம் தீர்ப்பானது வழங்கப்பட்டது. மோசடி செய்த ஈமு கோழி உரிமையாளர் குருசாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அபராதமாக 7 கோடியே…
’தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த போதே தெரிவித்தது நான்’ எனச் சொல்லியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. சட்டமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சத்தமே இல்லாமல் கடந்த மார்ச் 25-ம் தேதி டெல்லியில் போய் பழனிசாமி எதற்காகப் போய் இறங்கினார்? டெல்லியில் செய்தியாளர்கள் கேட்ட போது, ’’பிரத்யோகமான நபரைப் பார்க்க வரவில்லை. டெல்லி அதிமுக அலுவலகத்தைப் பார்க்க வந்தேன்’’ என ஏன் பொய் சொன்னார்? கள்ளக் கடத்தல்காரர்கள் மாதிரி கார்கள் மாறி மாறி சென்று, பழனிசாமி இறங்கிய இடம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா வீடு. பாஜகவுடனான கள்ளக் கூட்டணியை நல்ல கூட்டணி ஆக்கப் போனவர், தொகுதி மறுசீரமைப்பு பற்றிப் பேசினாராம். இன்றைக்குப் புதுக்கதை எழுதுகிறார். ‘’ஒரு மனுஷன் பொய் பேசலாம். ஆனா, ஏக்கர் கணக்கில் சொல்லக் கூடாது. அது…
மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு ‘நாயகன்’ கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நேற்று (வியாழக்கிழமை) வெளியானது. கர்நாடகாவில் கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்ததால், அங்கு படம் வெளியாகவில்லை. இந்தச் சினிமா வெளியான முதல் நாளிலேயே எதிர்பார்ப்புக்கு மாறாக ரசிகர்களிடையே எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையும் விமர்சிக்கப்பட்டுள்ள நிலையில், பாடல்களே படத்தில் இல்லாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, இந்திய அளவில் இப்படம் முதல் நாளில் ரூ.17 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இது சமீபத்திய சில படங்களின் முதல் நாள் வசூலை ஒப்பிடும் போது குறைவாகும். உதாரணத்திற்கு: சூர்யாவின் ‘ரெட்ரோ’ – ₹19.25 கோடி கமலின் ‘இந்தியன் 2’ -…
இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த முத்துக்குமார், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், இந்து முன்னணி அமைப்பு சார்பில் வருகிற ஜூன் மாதம் 22-ம் தேதி மதுரை ரிங் ரோடு, பாண்டிகோவில் அருகில் உள்ள அம்மா திடலில் பக்தியை வளர்க்க ‘முருக பக்தர்களின் ஆன்மீக மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த வளாகத்திற்குள், முருக பெருமானின் அறுபடைவீடு திருக்கோவில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள் அமைக்கப்பட உள்ளது. முருக பெருமானின் அறுபடைவீடு திருக்கோவில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள் அமைத்து வருகிற 10 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை பக்தர்கள் வழிபாடு நடத்த உத்தரவிட வேண்டும் என , மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தோம். ஆனால் அவர்கள் அனுமதி மறுத்து உள்ளனர். எனவே முருக பெருமானின் அறுபடைவீடு திருக்கோவில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள் அமைத்து பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில்…
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் இரு இளைஞர்கள் ஒருவர் மற்றொருவரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த பகுதியில் வாகன நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படும்.. இன்று (06.06.2025) மதியம் 12 மணியளவில், இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் வந்த இரு இளைஞர்கள் வாகனம் மோதி ஏற்பட்ட சலசலப்பால் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் நேரில் சண்டையில் இறங்கினர். பத்து நிமிடங்களுக்கு மேலாக நடந்த சண்டையால் சுற்றுப்புறத்தில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அந்த வழியாக சென்ற போலீசாரில் ஒருவர் இருவரையும் தடுத்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். விசாரணையில், அவர்கள் பேகம்பூர் பகுதியைச் சேர்ந்த நசீர் மற்றும் அசார் என தெரியவந்தது. தற்போது இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்: ஆண்டு தோறும் ரூ.90 கோடி சுருட்டப்படுவது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும்! பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை 40% முதல் 50% வரை குறைத்துக் கொடுப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.90 கோடி ஊழல் நடைபெறுவதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஊழல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அதற்கு காரணமானவர்கள் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. குடிநீர் வாரியத்தில் மின்னியலாளர்கள் ( எலக்ட்ரீஷியன்கள்), நீரேற்றும் மோட்டார் இயக்குபவர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் என மொத்தம் 11, 597 பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் குடிநீர் வாரியத்தால் நேரடியாக நியமிக்கப்படாமல், ஒப்பந்ததாரர்கள் மூலம் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கான ஊதியம் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் மூலமாக பணியாளர்களுக்கு அனுப்பப்படுகிறது.…
திருவண்ணாமலை மலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள 1,535 கட்டிடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ள மலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றக் கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சட்டவிரோத கட்டுமானங்களை கண்டறிந்து அகற்ற, ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில், வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து, உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, எந்த அனுமதியும் பெறாமல் 1,535 கட்டுமானங்கள் கட்டப்பட்டு உள்ளதாகவும், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குழு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள 1,535…
இலங்கை வன்னி தொகுதியின் முன்னாள் எம்.பி திலீபன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ” 1990 ஆம் ஆண்டு இலங்கையில் அசாதாரண சூழல் ஏற்பட்டபோது இந்தியாவிற்கு அகதியாக வந்து விருதுநகர் அகதிகள் முகாமில் தங்கி இருந்தேன். பின்னர் 2019 ஆம் ஆண்டு இலங்கைக்கு சென்று, அங்கு வன்னி தொகுதியில் போட்டியிட்டு வன்னி தொகுதியின் எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டு 2024 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தேன். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி இலங்கையிலிருந்து வெளிநாடு சென்றபோது கொச்சி விமான நிலையத்தில் இந்திய பாஸ்போர்ட்டை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கிற்கும் எனக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. இந்த வழக்கில் ஜாமின் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தேன். அதனை விசாரித்த நீதிமன்றம் திருச்சி சிறப்பு அகதிகளின் முகாமில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளது.…
மாநிலங்களவைத் தேர்தலுக்காக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று தனது வேட்புமனு வை தாக்கல் செய்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்களான திமுகவின் வில்சன், எம்.எம்.அப்துல்லா, சண்முகம், மதிமுகவின் வைகோ, அதிமுகவின் சந்திரசேகரன், பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 15-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து வருகிற 19-ந் தேதி ஆறு இடங்களுக்கான தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்காக திமுக சார்பில் பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். கூட்டணி ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த ஒரு இடத்தில் கமல் போட்டியிடுவார் என்று மநீம செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதேபோன்று அதிமுக சார்பில் அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை, முன்னாள் எம்எல்ஏ தனபால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். கடந்த 2-ந் தேதி ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனுக்களை…
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீசனிஸ்வர பகவான் ஆலயத்தில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் செண்பக தியாகராஜர், அம்பாள் உள்ளிட்ட 5தேர்களை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த மே 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மேலும் இந்த ஆலயத்தில் ஸ்ரீசனிஸ்வர பகவான் அனுக்ரஹ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீசெண்பக தியாகராஜர் நேற்று நள்ளிரவு யதாஸ்தானத்திலிருந்து உன்மத்த நடனமாடி ஆலய பிரகாரங்களை வலம் வந்து நள்ளிரவு திருத்தேருக்கு எழுந்தருளினார். அதனை தொடர்ந்து அதிகாலை சிறப்பு பூஜைகளுடன் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீ செண்பக தியாகராஜர், ஸ்ரீ நீலோத்பலாம்பாள்…