Author: Editor TN Talks

இளநிலை மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் – சுகாதாரத்துறை தகவல் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, ‘நீட்’ தேர்வு முடிவுகள் வரும் 14ம் தேதி வெளியாக உள்ள நிலையில், முன்கூட்டியே விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவு வெளியாவதில் தாமதமாவதால் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் குறைவதைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை விளக்கமளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2025-26-ம் கல்வியாண்டுக்கான தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான (இளங்கலை மருத்துவ படிப்புகள்) இடப்பங்கீட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த ஆண்டு வரை நீட் தேர்வு முடிவு வெளியான பிறகு தான் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் வெளியிட்டு பெறப்பட்டன. பல்வேறு காரணங்களால் நீட் தேர்வு முடிவு…

Read More

Thug Life திரைப்படம் வெளியான நிலையில் கோவையில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்… இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர்கள் கமலஹாசன் சிம்பு திரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள Thug Life திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. பல்வேறு இடங்களில் ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் பூ மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கிற்கு முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சியினர், கமல் மற்றும் சிம்பு ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில துணைத்தலைவர் தங்கவேலு இதில் கலந்துகொண்டு கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் மாற்றுத்திறனாளி ஜெயபிரபா என்பவரது மகள் ஷாலினிக்கு பத்தாயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டது. திரையரங்கிற்கு முன்பு கூடிய ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் ஜமாப் செண்டை மேள்ம் மற்றும் மேலும் கமல் சிம்பு ஆகியோரின் திரைப்படப் பாடல்களுக்கு நடனமாடி…

Read More

2027-ம் ஆண்டுக்கு மக்கள்தொகை கணக்கெடுப்பை ஒத்தி வைத்துள்ளதன் மூலம் தமிழ்நாட்டிற்கு மத்திய பாஜக அரசு சதி செய்துள்ளதாக திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள செய்தி வருமாறு.. 2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளது. தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணைபோகிறவராகவும் இருக்கிறார். டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது. நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்!…

Read More

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக நடத்தப்பட்ட வெற்றிப்பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு பதவி விலக வேண்டும் கர்நாடக பாஜக வலியுறுத்தி உள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வீழ்த்தியது. இதன்மூலம் 18 ஆண்டுகால சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஏக்கத்தை ஆர்சிபி தீர்த்துக் கொண்டது. இதனை நாடு முழுவதும் உள்ள ஆர்சிபி ரசிர்கள் நேற்றிரவு முதல் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய ஆர்சிபி வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்த கர்நாடக அரசும், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கமும் திட்டமிட்டன. பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. முன்னதாக பெங்களூர் விதான் சௌதா கட்டிடத்தில் இருந்து சின்னசாமி ஸ்டேடியம் வரை வீரர்களை பேருந்தில் வைத்து ஊர்வலமாக கொண்டு வருவதும் என்றும் முடிவானது. ஆர்சிபி வீரர்களை பார்க்க…

Read More

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு.. தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பலர் குடியைக் கெடுக்கும் டாஸ்மாக்கில் எப்படி வருமானம் ஈட்டலாம் என்பதை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசு, தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்பும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்து தராமல் பல கோடிக்கணக்கான முதலீடுகளையும், பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் பிற மாநிலங்களுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளது. சமீபத்தில் கூட தமிழகத்திற்கு வர வேண்டிய பாக்ஸ்கான், HCL நிறுவனங்களின் சுமார் ரூ.3,700 கோடி மதிப்பிலான முதலீடுகளும் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு கைமாறி விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த ஏமாற்றமளிப்பதோடு, ஆளும் அறிவாலய அரசின் நிர்வாக லட்சணம் என்ன என்பதையும் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஆனால் கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு ஊரெல்லாம் நெய்க்கு அலையும் கதையாக, தமிழகத்திற்கு தானாகக் கிடைக்கும் முதலீடுகளைத் தக்க வைப்பதில் கவனம் செலுத்த…

Read More

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாட்டின் மக்கள்தொகை 2027 -ம் ஆண்டு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2021-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டியது, கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன் அலை ஓய்ந்துள்ள நிலையில் எப்போது நடத்தப்படும் என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன. கூடவே மக்கள்தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் என பல கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. அதில் பதிலளித்த மத்திய அரசு அவ்வாறே செய்யப்படும் என்று கூறியிருந்தது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன் ஒருபகுதியாக 2027-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி 2027-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் மக்கள்தொகை…

Read More

சட்டமன்ற தேர்தலில் தமிழக பாஜகவின் பிரசார பணிகளை முன்னெடுப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 8-ந் தேதி மதுரை வரவுள்ளார். தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற இன்னும் 10 மாதங்களே உள்ளன. இதனால் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக ஆளுங்கட்சியான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டதாக அறிவித்து இருந்தார். சமீபத்தில் ஜுன் 1-ந் தேதி மதுரையில் மிக பிரம்மாண்டமாக திமுக பொதுக்குழுவை நடத்திக் காண்பித்தார். அதில் 200 தொகுதிகளில் வெல்வதே திமுகவின் இலக்கு என்று கூறியிருந்தார். மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் 30 சதவித வாக்காளர்களை கொண்டு வருவதே இலக்கு என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மறுபுறம் எதிர்க்கட்சியான அதிமுக, 2026 தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயலாற்றி வருகிறது. இதற்காக பல்வேறு மனக்கசப்புகளைத் தாண்டி, பாரதிய ஜனதாவுடன்…

Read More

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ஐபிஎல் கோப்பையை 18 ஆண்டுகளுக்கு பின்னர் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட வெற்றிப்பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வீழ்த்தியது. இதன்மூலம் 18 ஆண்டுகால சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஏக்கத்தை ஆர்சிபி தீர்த்துக் கொண்டது. இதனை நாடு முழுவதும் உள்ள ஆர்சிபி ரசிர்கள் நேற்றிரவு முதல் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய ஆர்சிபி வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்த கர்நாடக அரசும், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கமும் திட்டமிட்டன. பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. முன்னதாக பெங்களூர் விதான் சௌதா கட்டிடத்தில் இருந்து சின்னசாமி ஸ்டேடியம் வரை வீரர்களை பேருந்தில் வைத்து ஊர்வலமாக கொண்டு வருவதும் என்றும் முடிவானது. ஆர்சிபி…

Read More

ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு ஆடல், பாடல் நடைபெtuறும் உள்ளாட்சி அமைப்புகளின் செயலாளரிடம், ரூ.25 ஆயிரம் மனுதாரர் செலுத்த வேண்டும். இந்த 25 ஆயிர ம் . கொண்டு, அந்த கிராமத்தில்நீர் நிலைகளை தூர் வார வேண்டும்/நீதிபதி .உயர்நீதிமன்றம் கிளைக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் கோவில் திருவிழா வை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி 7 க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் நீதிபதி புகழேந்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள், கடந்த பல ஆண்டுகளாக ஆடல் பாடல் நிகழ்ச்சி திருவிழாவின் போது நடத்தப்பட்டு வருகிறது.சட்டம், ஒழுங்கு, பிரச்சினை உள்ளிட்ட காரணங்களை காட்டி அனுமதி மறுக்கின்றனர்.அனுமதி வழங்க வேண்டும் என கூறினர். நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,சமூக ஊடக காலம் இது. இந்த சூழலில், ஆடல்…

Read More

சபரிமலையில் ஐயப்பன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட தினத்தை முன்னிட்டு திறக்கப்பட்டது சபரிமலை நடை!! சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு , கண்டரரு பிரம்மதத்தன் தலைமையில் மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து கற்பூர ஆழியில் தீபம் ஏற்றினார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கேரளாவில் உள்ள உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மற்றும் மகர விளக்கு காலங்களை தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். இது தவிர ஓணம்,சித்திரை விசு, வைகாசி விசாகம், நிறை புத்தரிசி திருவிழா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு தினங்களிலும் நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்படும். அந்த வகையில் நாளை பிரசித்தி பெற்ற”பிரதிஷ்டா தின” சிறப்பு பூஜைகள் நடைபெறுவதை ஒட்டி இன்று மாலை சபரிமலை நடை திறக்கப்பட்டது.சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு , கண்டரரு பிரம்மதத்தன் தலைமையில் மேல்…

Read More