Close Menu
    What's Hot

    தமிழகத்திலும் சிஜேபி தொடர் போராட்டம்; தீவிர கண்காணிப்பில் உளவுத்துறை

    திருப்பூரில் குவியும் ஜனநாயகன் T-Shirts ஆர்டர்கள்!. கொண்டாட்டத்தில் பனியன் உற்பத்தியாளர்கள்!

    ”தெரு நாய் பிரச்சனையில் நடவடிக்கை இல்லையே..?”: தமிழக அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»RCB வெற்றிப் பேரணி – கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி
    Featured

    RCB வெற்றிப் பேரணி – கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி

    Editor TN TalksBy Editor TN TalksJune 4, 2025Updated:June 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    8 people died at RCB victory rally. Many in distress due to stampede
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ஐபிஎல் கோப்பையை 18 ஆண்டுகளுக்கு பின்னர் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட வெற்றிப்பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வீழ்த்தியது. இதன்மூலம் 18 ஆண்டுகால சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஏக்கத்தை ஆர்சிபி தீர்த்துக் கொண்டது. இதனை நாடு முழுவதும் உள்ள ஆர்சிபி ரசிர்கள் நேற்றிரவு முதல் கொண்டாடி வந்தனர்.

    இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய ஆர்சிபி வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்த கர்நாடக அரசும், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கமும் திட்டமிட்டன. பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. முன்னதாக பெங்களூர் விதான் சௌதா கட்டிடத்தில் இருந்து சின்னசாமி ஸ்டேடியம் வரை வீரர்களை பேருந்தில் வைத்து ஊர்வலமாக கொண்டு வருவதும் என்றும் முடிவானது.

    ஆர்சிபி வீரர்களை பார்க்க காலை முதலே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் குவிய ஆரம்பித்தனர். குறிப்பாக கேட் 6,7,12 ஆகிய நுழைவு வாயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களை கட்டுப்படுத்த தடியடி நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

    அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். அவர்களை பெரும் போராட்டத்திற்கு பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பாராட்டு விழா நடத்த திட்டமிட்டு 11 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. முறையாக திட்டமிடாததே இந்த சோக நிகழ்வுக்கு காரணம் என கர்நாடக மாநில காங்கிரஸ் மீது எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

    Bengaluru crowd crush IPL celebration incident IPL fans tragedy RCB accident 2025 RCB celebration death toll RCB fan safety issue RCB fans dead RCB news Tamil RCB parade stampede RCB victory tragedy
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆடல்,பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் அனுமதி…
    Next Article மத்திய அமைச்சர் அமித் ஷா 8-ந் தேதி மதுரை வருகை
    Editor TN Talks

    Related Posts

    தமிழகத்திலும் சிஜேபி தொடர் போராட்டம்; தீவிர கண்காணிப்பில் உளவுத்துறை

    July 21, 2026

    திருப்பூரில் குவியும் ஜனநாயகன் T-Shirts ஆர்டர்கள்!. கொண்டாட்டத்தில் பனியன் உற்பத்தியாளர்கள்!

    July 21, 2026

    ”தெரு நாய் பிரச்சனையில் நடவடிக்கை இல்லையே..?”: தமிழக அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழகத்திலும் சிஜேபி தொடர் போராட்டம்; தீவிர கண்காணிப்பில் உளவுத்துறை

    திருப்பூரில் குவியும் ஜனநாயகன் T-Shirts ஆர்டர்கள்!. கொண்டாட்டத்தில் பனியன் உற்பத்தியாளர்கள்!

    ”தெரு நாய் பிரச்சனையில் நடவடிக்கை இல்லையே..?”: தமிழக அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி

    பரந்தூர் விமான நிலையம்:  தவெக அரசின் தற்போதைய நிலை என்ன?

    1 வருஷமா ஸ்கூலுக்கு போகல.. 2 குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றிய சிங்கப்பெண் படை! வால்பாறையில் நெகிழ்ச்சி சம்பவம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.