Author: Editor TN Talks
கோவை, பேரூர் ஆதீனம் வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி பாரம்பரிய சிவவேள்வி பூஜையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொள்ள உள்ளார். பேரூர் ஆதீனத்தின் 24 -ம் குரு மகா சந்நிதானம் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா கோவை மாவட்டம் சிறுவாணி சாலையில் பேரூர் ஆதீன வளாகத்தில் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று நடைபெறும் பாரம்பரிய சிவவேள்வி பூஜையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொள்ள உள்ளார். பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் மற்றும் சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார் ஆகியோர் பங்கேற்று இந்நிகழ்ச்சி குறித்து பேசினர். இவர்களுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொள்ளாச்சி பகுதி நிர்வாகி கோபால் உடன் இருந்தார். இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது:- மேலைச் சிதம்பரம் எனும் புகழ் கொண்டதும் பேரூர் பேரூர் ஆதீனத்தைத் கி.பி 11-ம் நூற்றாண்டில்…
கோவை செட்டிபாளையம் பேரூராட்சி தி.மு.க தலைவர் மற்றும் துணைத் தலைவர் சேர்ந்து போர் போடும் இயந்திரம் இல்லாமல், போர் போட்டதாக காண்பித்து மூன்று லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டி உள்ளனர். கோவை மாவட்டம், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 2 – வது வார்டில் ஜேசிபி இயந்திரம் மூலமாக 7 அடிக்கு மட்டுமே போர் போட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கோவை, செட்டிபாளையம் பேரூராட்சி தலைவர் ரங்கசாமி மற்றும் துணைத் தலைவர் கனகராஜ் ஆகியோர் தி.மு.க கட்சியை சேர்ந்தவர்கள். மூன்று லட்சம் ரூபாய் அரசு நிதியில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 7 அடிக்கு மட்டுமே போர் போட்டு உள்ளதாகவும், குறிப்பாக போர் போடும் இயந்திரம் இல்லாமல் வெறும் ஜே.சி.பி வைத்து போர் போட்டு உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு ஒதுக்கிய மூன்று லட்சம் ரூபாய் நிதியில் இருந்து பொதுமக்களுக்கு…
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசேகரன் யார், யாரிடம் பேசினார் என்பது தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாக கூறியது குறித்து தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசேகரன் யார், யாரிடம் தொலைபேசியில் பேசினார் என்ற ஆதாரம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ஞானசேகரன் யார், யாரிடம் பேசினார் என்ற தொலைபேசி உரையாடல் தொடர்பான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக கூறிய அண்ணாமலை அதனை வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் வழங்கவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலையிடம் விசாரணை…
மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்வதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்திக்கு தற்போது அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகியுள்ளது. வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) மதுரை பாண்டி கோவிலில் அமைந்துள்ள அம்மா திடலில் இந்த முருக பக்தர்கள் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. அறுபடை வீடுகளை போல அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டில் கலந்துகொள்ளும் வாகனங்களுக்கு பாஸ் கட்டாயம் என விதிக்கப்பட்டிருந்த நிபந்தனை, நீதிமன்ற உத்தரவின்படி ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், வாகனங்களுக்கு பதிவு சான்று, காப்பீடு, ஓட்டுநர் உரிமம் ஆகியவை காவல்துறைக்கு சமர்ப்பிக்க வேண்டிய நிபந்தனை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர். இதன் பின்னணியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மாநாட்டில் கலந்து கொள்வார் என்ற செய்தி பரவியது. ஆனால், இந்த தகவல்…
தி.மு.க. ஆட்சியில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை திசை திருப்பவே தன்னைப் பற்றி கேலிச்சித்திரங்கள் வெளியிடப்படுகின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்படும் காலம் வரும் என்று கூறியது குறித்த கேள்விக்கு, “தாய்மொழி அனைவருக்கும் முக்கியம். தாய்மொழிக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை விட ஆங்கிலத்திற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்ற பொறுப்பில்தான் அமித் ஷா பேசியிருக்கிறார்” என்று எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு என்றும் அவர் கூறினார். கீழடி அகழாய்வு குறித்த கேள்விகளுக்கு, அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் ஏற்கனவே தெளிவாக விளக்கமளித்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். “அ.தி.மு.க. ஆட்சியில் கீழடி அகழாய்வுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் முழுமையாகத் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக” அவர் குறிப்பிட்டார். மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு குறித்த கேள்விக்கு, “ஒவ்வொரு அமைப்பும் அவரவர் விருப்பப்படும்…
சென்னையில் இன்று (ஜூன் 21) ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, ஒரு பவுன் தங்கம் ரூ.73,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.73,680-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, மற்றும் உலக நாடுகளின் வர்த்தக ரீதியான செயல்பாடுகள் ஆகியவை இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த காரணிகளின் அடிப்படையில் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. தற்போது, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் 9-வது நாளை எட்டியுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இது உலக அளவில் பொருளாதார ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என துறை சார்ந்த வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இச்சூழலில், தங்கம் விலை இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்: 22 காரட் ஆபரணத் தங்கம்:…
2025ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஆந்திரப் பிரதேசத்தின் துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தில் மாபெரும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர். இந்த பிரம்மாண்ட பங்கேற்பு கின்னஸ் சாதனையாக பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சனிக்கிழமை காலை 6.30 மணி முதல் 8 மணி வரை நடைபெற்ற இந்த யோகா நிகழ்ச்சி, விசாகப்பட்டினத்தின் ஆர். கே. கடற்கரையில் இருந்து போகபுரம் வரை சுமார் 26 கிலோமீட்டர் நீளமுள்ள நடைபாதையில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடியுடன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆகியோரும் யோகா பயிற்சிகளில் பங்கேற்றனர். கின்னஸ் சாதனை முயற்சி: ஆந்திர மாநில அரசு, இந்த பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்வதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பதிவு செய்துள்ள பங்கேற்பாளர்களுக்கு…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண்முன்னே நான்கு வயது சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காளியம்மன் கோவில் அருகே உள்ள தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் முண்டா மற்றும் மோனிகா தேவி தம்பதியரின் மகள் ரோஷிணியை, தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து தூக்கிச் சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் குழந்தையின் தாய் அலறி அடித்துக் கொண்டு சத்தம் போட்டு உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஓடி வந்து, குழந்தையை தேடும் பணியில், போலீசார் மற்றும் வனத்துறையுடன் இணைந்து ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதட்டத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் களமிறங்கினர். மிக நிதானமாக ஆடத்தொடங்கிய இருவரும் வாய்ப்புள்ள பந்துகளை மட்டும் ரன்களாக மாற்றினர். 42 ரன்கள் எடுத்திருந்த கே.எல்.ராகுல், கார்ஸ் பந்துவீச்சில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் டக் அவுட் ஆகி இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார். பின்னர் ஜெய்ஸ்வாலுடன், கேப்டன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். இந்த இணை பொறுப்புடனும், நிதானமாகவும் விளையாடியது. அதேசமயம், ஜெய்ஸ்வால் மிகச்சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினார்.…