Close Menu
    What's Hot

    பரந்தூர் விமான நிலையத் திட்டம்..!! விஜய் அரசுக்கு சவால்..!! நடக்கப்போவது என்ன..??

    குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை நீட்டிப்பு!

    திமுக பாதையில் பயணிப்பதா..?? தவெக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மரக்காணம் கலவர இழப்பீட்டை பாமகவிடம் வசூலிக்கும் வழக்கு…
    தமிழ்நாடு

    மரக்காணம் கலவர இழப்பீட்டை பாமகவிடம் வசூலிக்கும் வழக்கு…

    Editor TN TalksBy Editor TN TalksJune 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pmk 1674471569
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த மரக்காணம் கலவரத்தை தொடர்ந்து ஏற்பட்ட இழப்பை, பா.ம.க.விடம் வசூலிப்பது தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்ற உத்தரவின்படியும், சட்டப்படியும் நடத்தி, எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மாமல்லபுரத்தில், கடந்த 2013ல் வன்னியர் சங்கத்தினர் நடத்திய சித்திரை திருவிழாவின்போது, மரக்காணத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் தீவைக்கப்பட்டன.

    பா.ம.க.வினர் போராட்டம் காரணமாக, 2013 ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 12 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

    இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை பா.ம.க.விடம் வசூலிப்பது தொடர்பாக, தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த விசாரணை, தமிழ்நாடு பொது சொத்து சேதம் தடுப்பு சட்டத்தை பின்பற்றி நடத்தப்படவில்லை எனக் கூறி, இதுசம்பந்தமாக இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை கோரி பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், இழப்பீட்டை தீர்மானிக்கும் முன், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதா என ஆரம்பகட்ட விசாரணை நடத்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ள போதிலும், அதை பின்பற்றாமல் இழப்பீடு குறித்து முடிவு செய்யும் விசாரணையை நடத்த கூடாது எனவும், இழப்பீடு கோரி டாஸ்மாக் நிர்வாகம், போக்குவரத்து கழகங்கள் அளித்த விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

    சட்ட விதிகளை பின்பற்றி விசாரணை நடத்தாமல் இழப்பீடு குறித்து இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, வெறும் அச்சத்தின் அடிப்படையில், வருவாய் நிர்வாக ஆணையரின் விசாரணையை தடுக்கும் நோக்கில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், சட்ட விதிகளின்படியும் விசாரணை நடத்தப்படும் என அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் உறுதியளித்தார்.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, உயர் நீதிமன்ற உத்தரவின்படி விசாரணையை நடத்தி, எட்டு வாரங்களில் இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேனி எம்.பி. தங்கதமிழ்ச்செல்வனுக்கு பாஜகவினர் எதிர்ப்பு..
    Next Article பிரதிஷ்டா தினத்தை முன்னிட்டு திறக்கப்பட்டது சபரிமலை நடை!!
    Editor TN Talks

    Related Posts

    பரந்தூர் விமான நிலையத் திட்டம்..!! விஜய் அரசுக்கு சவால்..!! நடக்கப்போவது என்ன..??

    June 2, 2026

    குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை நீட்டிப்பு!

    June 2, 2026

    திமுக பாதையில் பயணிப்பதா..?? தவெக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி..!!

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பரந்தூர் விமான நிலையத் திட்டம்..!! விஜய் அரசுக்கு சவால்..!! நடக்கப்போவது என்ன..??

    குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை நீட்டிப்பு!

    திமுக பாதையில் பயணிப்பதா..?? தவெக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி..!!

    அமித்ஷாவுடன் சந்திப்பு..!! பாஜகவில் இருந்து விலகியது ஏன்? காரணங்களை அடுக்கிய அண்ணாமலை..!!

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    Trending Posts

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    June 2, 2026

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    June 2, 2026

    இசைஞானி இளையராஜா பிறந்தநாள்..! வாழ்த்து தெரிவிக்க குவிந்த ரசிகர்கள்..!

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.