Author: Editor TN Talks

47 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டு மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. மதுரை உத்தங்குடியில் இதற்காக மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கட்சியின் கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைக்க, பொதுக்குழு முறைப்படி தொடங்கியது. பெரியார், அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோரது உருவப்படங்களுக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இங்கிலாந்து ராணி எலிசபெத், போப் பிரான்சிஸ், முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரெங்கன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் திமுகவில் மேலும் 2 புதிய அணிகள் உருவாக்கிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி ஆசிரியர்கள், கல்வியாளர்களை உள்ளடக்கிய கல்வியாளர்கள் அணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் அணி என 2 அணிகள் அறிவிக்கப்பட்டன. இதன்மூலம் திமுகவின் சார்பு அணிகள் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்துள்ளது. இதன் பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.…

Read More

தாய்லாந்தைச் சேர்ந்த Opal Suchata மிஸ் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 72-வது ‘மிஸ் வேர்ல்ட்’ உலக அழகிப் போட்டி மே 10-ஆம் தேதி இந்தியாவின் தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் 109 நாடுகளில் இருந்து அழகிகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் நந்தினி குப்தா கலந்து கொண்டார். போட்டியின் நடுவே ஒரு சர்ச்சை ஏற்பட்டது. இங்கிலாந்து சார்பில் பங்கேற்ற மில்லா மாகி என்ற அழகி உடல்நலக் குறைவு காரணமாகப் போட்டியில் இருந்து விலகினார். அவரை சொந்த ஊர் அனுப்பி வைத்த பிறகு, போட்டி அமைப்பாளர்கள் தன்னை கண்ணியமாக நடத்தவில்லை என்றும், பாலியல் தொழிலாளி போல நடத்த முயற்சித்ததாகவும் மில்லா மாகி குற்றம்சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுகளை போட்டி ஏற்பாட்டாளர்கள் மறுத்தாலும், இங்கிலாந்து அழகியின் புகார் குறித்து விசாரிக்க தெலுங்கானா அரசு ஒரு குழுவை அமைத்தது. மில்லா மாகி விலகிய நிலையில், இங்கிலாந்து சார்பில் மற்றொரு அழகி போட்டியில் பங்கேற்றார். சர்ச்சைகளுக்கு…

Read More

கேரளாவில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் எதிரொலியாக கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக கோவை, நீலகிரி போன்ற மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களில் தமிழ்நாட்டில் இயல்பை விட 97% அதிகளவு மழை பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா செய்தியாளார்களிடம் பேசும் போது, ”கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் 6 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் தென்மேற்குபருவமழை தீவிரமாக உள்ளது. நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பதிவாகி உள்ளதாக” தெரிவித்துள்ளார். தேனி, விருதுநகர் மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை பதிவாகியது.…

Read More

சென்னையில் மெட்ரோ குடிநீர் ஒப்பந்த லாரிகள் சுமார் 450 லாரிகள் இயங்குகின்றன. இந்த லாரிகள் 6,000 முதல் 12,000 லிட்டர் வரை கொள்ளவு கொண்டவை. மெட்ரோ குடிநீர் வாரிகள் சென்னை மாநகர் முழுவதும் மக்களுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. அவ்வாறு இயக்கப்படக் கூடிய லாரிகளின் உரிமையாளர்கள் ஒப்பந்தம் அடிப்படையில் லாரிகளை இயக்கி வருகின்றனர். மூன்றாண்டுகளுக்கு இருமுறை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒப்பந்தம், 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெற்றது. மீண்டும் புதிய ஒப்பந்தத்தை அறிவிப்பதிலும், அதனை இறுதி செய்வதிலும் தாமதம் ஏற்பட்டதாகவும், தற்போது டெண்டர் இறுதி செய்யப்பட்ட பின்பும், பணி ஆணைகளை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், நவம்பரில் ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இதுவரை அது இறுதி செய்யப்படவில்லை என மெட்ரோ குடிநீர் லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஒப்பந்தத்தை நம்பி புதிதாக வாங்கிய லாரிக்கான முதலாம் ஆண்டு காப்பீடு கட்டணத் தொகை செலுத்துவதற்கான…

Read More

சமூக வலைதளங்கள் முழுக்க ‘வேடன்’ என்ற பெயர் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கேரளாவைச் சேர்ந்த சொல்லிசைக் கலைஞரான வேடன் மீது அவதூறுகள் பரவி வருகின்றன. அவரைத் தரக்குறைவாக விமர்சித்த இதழ் ஆசிரியர்  ஒருவர் கைதாகியுள்ளார். அவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை விசாரனை நடத்த வேண்டும் என்று என்று கேரள பாஜக பிரமுகர் ஒருவர் கடிதம் எழுதியிருக்கிறார். இத்தனை நெருக்கடிகளில் சிக்கும் அளவு என்ன செய்துவிட்டார் வேடன்?  சொல்லிசைக் கலைஞர் வேடன்  கேரளாவின் திருச்சூரில் பிறந்து வளர்ந்த வேடன், மலையாள சொல்லிசைக் கலைஞராகப் புகழ்பெற்றவர். சொல்லிசைக்காக ஹிரந்தாஸ் என்ற அவர், வேடன் என்று புனைப்பெயர் சூட்டிக் கொண்டார். கொரோனா காலத்தில் குரலற்றவர்களின் குரல் (Voice of Voiceless) என்ற அவரது ஆல்பம் ஹிட்டானது. அது அவருக்குத் திரைத்துறை உட்பட பல வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது. அதன் தொடர்ச்சியாக அரசியல் தன்மை வாய்ந்த பாடல்களைத் தொடர்ந்து பாடி வருகிறார் வேடன்.  அரசியல் கட்சிகளின் ஆதரவு சாதிய…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுகவின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதுரையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், இன்று காலை மதுரை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 11:45 மணிக்கு புறப்பட்ட அவர், மதியம் 1:05 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு அமைச்சர்கள் பெரியசாமி, நேரு, தங்கம் தென்னரசு, மூர்த்தி, சாத்தூர் ராமச்சந்திரன், தியாகராஜன், எம்.பி. டி.ஆர். பாலு, மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் மாநகராட்சி ஆணையர் சித்ரா ஆகியோரும் வரவேற்பு வழங்கினர். முதலமைச்சர் தொண்டர்கள் அளித்த வேஷ்டி மற்றும் சால்வைகளை அன்புடன் பெற்றுக் கொண்டார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தப் பொதுக்குழு கூட்டத்தில், 6,500 பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என…

Read More

தமிழக அரசுத் துறைகளில் இருந்து ஆண்டுக்கு சுமார் 50,000 பேர் ஓய்வு பெறும் நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவிலான நியமனங்களே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், இது வேலை தேடும் இளைஞர்களுக்கு திமுக அரசு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் என்றும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இன்று (மே 31) ஒரே நாளில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 8,144 ஊழியர்கள் ஓய்வு பெறுவதைச் சுட்டிக்காட்டி அவர் வெளியிட்ட அறிக்கையில், மே மாத இறுதியில் அதிக எண்ணிக்கையிலான அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவது இயல்பானதுதான் என்றும், ஆனால் அவ்வாறு ஏற்படும் காலி இடங்களை நிரப்ப தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் மே மாதம் வரை பணி நீட்டிப்பு பெறுவதால், இந்த மாதத்தில் ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும், மற்ற மாதங்களில்…

Read More

இந்தியா முழுவதும் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் தற்போதுள்ள நிலவரம் மற்றும் அரசின் தயார்நிலைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அமைச்சரின் முக்கியக் கருத்துகள்: பாதிப்பு நிலவரம்: இந்தியாவில் 1,800-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. வைரஸ் வகை: தற்போது பரவி வரும் கொரோனா, வீரியம் இல்லாத ஒமைக்ரான் வகையைச் சேர்ந்தது. இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. பதற்றப்படத் தேவையில்லை: மத்திய சுகாதார அமைச்சகமே பதற்றப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது. எனவே, மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகியவை அவசியம். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது. முகக்கவசம் அணிவது…

Read More

நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் சூரி, ’விடுதலை’ படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். ’விடுதலை’ படத்திற்கு கடைநிலை காவலராக பக்காவாக பொருந்தியிருந்தார் சூரி. அப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இரண்டாம் பாகத்தில் சூரியின் கதாபாத்திரம் அதிகளவு இல்லை என்ற அப்செட் ரசிகர்களிடம் இருந்தது. தொடர்ந்து ’கொட்டுக்காளி’, ’கருடன்’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக வலம் வந்துக் கொண்டு இருக்கும் சூரியின் அடுத்தப் படமாக வெளிவந்தது ’மாமன்’ திரைப்படம். விலங்கு வெப் சீரிஸை இயக்கி இருந்த பிரசாந்த் பாண்டிராஜ் இப்படத்தை இயக்கி இருந்தார். இதில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண் உட்பட பலர் நடித்திருந்தனர். முழுக்க முழுக்க குடும்ப உறவுகளை குறிப்பாக தாய்மாமன் என்ற உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படம், குடும்ப ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த 26-ம் தேதி வெளியான இப்படம், ரூ.10கோடியில் எடுக்கப்பட்டது. ஆனால்…

Read More

தேச விரோத செயலில் ஈடுபட்டதாகக் கூறி தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன மாணவர் அஸ்லாம், தேர்வெழுத சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் படித்து வந்த அஸ்லாம், சயீத், நஹல் இப்னு ஆகிய மூன்று மாணவர்கள், தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, தேர்வுக்கு முந்தைய நாள் கல்லூரியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர். இந்த நடவடிக்கையை எதிர்த்து மாணவர் அஸ்லாம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், நிறுவனத்தின் உதவிப் பதிவாளரான அவினவ் தாக்கூர் மீது பாலியல் புகார் இருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதாலேயே, பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி தான் நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் அஸ்லாம் குறிப்பிட்டிருந்தார். சமூகப் பணி இரண்டாம் ஆண்டு படித்து வரும் நிலையில், தனது தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் நீக்கப்பட்டதாகவும் மனுவில் அவர் தெரிவித்திருந்தார். இந்த…

Read More