Author: Editor TN Talks
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியிலும் திமுக வெற்றி வாகை சூடும் வகையில் தேர்தல் பணியாற்றுவோம். இந்த முறை கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட திமுக தோல்வியை சந்திக்காத அளவுக்கு களப்பணி இருக்கும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இடம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கூறியுள்ளனர். சட்டமன்ற தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க .ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் ஒன் டூ ஒன் சந்தித்து கருத்துக்களை கேட்டு அறிந்து வருகிறார். அந்த வகையில் இன்றைய தினம் (17.06.2025) கோவை மாவட்டத்தில் பரமத்திவேலூர், பரமக்குடி, கவுண்டம்பாளையம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து முதலமைச்சர் கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது நிர்வாகிகளிடம் எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது. மாவட்ட செயலாளர்கள்,பொறுப்பு அமைச்சர்களின் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது என்று முதலமைச்சர் கேட்டறிந்துள்ளார். அதேபோல் திமுக அரசின் சாதனைகள் பொதுமக்களிடம் எந்த அளவுக்கு சென்று…
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கான நீர்த்திறப்பு அதிகரிப்பால் லோயர்கேம்ப் நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி 159 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கியின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வலுத்து, தமிழகத்தின் நீர் ஆதாரமான முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடியை தாண்டி உயர்ந்து வருகிறது. இதனால் அணை நீரை வைகை அணையில் இருப்பு வைக்கும் பொருட்டு, அணையில் இருந்து தமிழகத்திற்கான நீர்த்திறப்பு விநாடிக்கு, 1,400 கன அடியில் இருந்து 1,622 கன அடியாகி, தற்போது 1,766 கன அடியாக மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முல்லைப் பெரியாறு அணை நீர் மூலம் மின் உற்பத்தி செய்யப்படும் குமுளி மலை அடிவாரம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில், தினசரி மின் உற்பத்தி 108 மெகவாட்டில் இருந்து 126 மெகாவாட்டாகி, தற்போது 159 மெகாவாட்டாக மேலும் அதிகரித்துள்ளது. மின் நிலையத்தின் நான்கு ஜெனரேட்டர்களும் இயக்கப்பட்டு தலா 39 மெகாவாட்…
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி முத்து, ஜஸ்டின் சுந்தர், சுசீலா, கார்மேல் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், “கேரள மாநிலம் கொச்சி துறைமுகம் அருகே எல்சா 3 என்ற சரக்கு கப்பல் விபத்துக்குள்ளானது. அந்த சரக்கு கப்பலில் 643 கண்டைனர்கள் இருந்த நிலையில் 54 கண்டைனர்கள் இதுவரை கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கரையோரங்களில் ஒதுங்கியுள்ளன. அவற்றில் கால்சியம், கார்பனேட் மற்றும் பிளாஸ்டிக் பெல்லெட்ஸ் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது கடலின் உணவுச் சங்கிலியில் கலப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இது உடல் நலனில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். கேரளா அரசு, இதனை மாநில பேரிடராக அறிவித்துள்ளது. ஆகவே இவ்விபத்தை பேரிடராக அறிவித்து, கடலில் கலந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட அபாயமான பொருட்களை அகற்ற உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு, “மத்திய, மாநில அரசுகள்…
கமல்ஹாசன் பேச்சு : போராட்டமும் : மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி உட்பட பல நடிப்பில் கடந்த ஜூன் 5-ம் தேதி தக் லைஃப் திரைப்படம் கர்நாடகா தவிர்த்து உலகம் முழுவதும் வெளியானது. அதற்கு முன்னதாக மே மாதம் 24-ம் தேதி நடந்த இசை வெளியீட்டு விழாவின் போது, நடிகர் கமல்ஹாசன், தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னட மொழி என பேசியிருந்தார். இதற்கு கன்னட அமைப்பினர் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்தோடு கமல்ஹாசன் மன்னிப்பு தெரிவித்தால் மட்டும் தான் படம் கர்நாடாவில் வெளியிடப்படும் என தெரிவித்தனர். ஆனால் கமல் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்தார். அதனால் ஜூன் 5-ம் தேதி தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை. கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி…
முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், வருகிற ஜூலை 23 ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வழக்கின் பின்னணி: திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாகக் குற்றம்சாட்டி, கடந்த 2015 ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. ஏழு ஆண்டுகள் விசாரணைக்குப்பின், ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மங்கள் டெக் பார்க் லிமிட்டட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி என நான்கு நபர்கள் மற்றும் இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக கடந்த 2023 ஆம் ஆண்டில் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையில், குற்றம் சாட்டப்பட்ட காலகட்டத்தில் ஆ.ராசா தனது…
தமிழகத்தில் தமிழ் இனத்தின் தொன்மை குறித்தும், அதற்கு எதிராக வரும் தடைகள் குறித்தும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழ் இனத்தின் தொன்மைக்கு எதிராக செயல்படும் மனங்களைத் திருத்தும் நோக்கத்துடன், மதுரை வீரகனூரில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் குறித்து வெளியாகியுள்ள தகவலில், “எத்தனை எத்தனையோ தடைகளை நம் தமிழினம் எதிர்கொண்டு வருகிறது. அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைகொண்டு நம் இனத்தின் தொன்மையை நாம் நிலைநிறுத்தி வருகிறோம். இருந்தும், சில மனங்கள் இதை ஏற்க மறுக்கின்றன. திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம்! இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை! நாளை…
ஆயிரம்கோடி ரூபாய் டாஸ்மாக் முறைகேடு வழக்கில், திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் ஆவணங்களை நாளை (ஜூன் 18, 2025) தாக்கல் செய்யும்படி அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்குத் தடை விதிக்கவும், சீலை அகற்றவும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், எதன் அடிப்படையில் இருவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது என்பதற்கான…
நடிகை ஆண்ட்ரியா நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில், கோபி நயினார் இயக்கத்தில் உருவாகியுள்ள மனுஷி திரைப்படத்தில் உள்ள ஆட்சேபகரமான காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்கினால், படத்திற்கு சான்றிதழ் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என சென்சார் போர்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டதை எதிர்த்தும், நிபுணர் குழு அமைத்து படத்தை மீண்டும் சென்சார் செய்யக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்கும்படி சென்சார் போர்டுக்கு உத்தரவிடக் கோரியும், படத் தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, படத்தில் உள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்கள் எவை என்பது குறித்து மனுதாரருக்கு (வெற்றிமாறன்) தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை நீக்கினால் சான்றிதழ் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், வெற்றிமாறன் தரப்பில்,…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிக வாகனங்கள் நகருக்குள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். அதிலும் விடுமுறை நாட்களில் அண்ணாமலையார் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய அதிகளவிலான பக்தர்கள் வருவர். அந்த வகையில் தற்போது திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. பக்தர்களின் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலால் சுவாமி தரிசனம் செய்ய பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சர் ஏ.வ. வேலு தலைமையில் 4 முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வெளி மாநில வாகனங்கள் மாடவீதிகளில் அனுமதிக்க கூடாது என்றும் பேருந்துகள் மாடவீதிகளில் செல்லாமல் மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. இதனால் எந்த பயனும் இல்லாமல் நகர் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி…
கனடாவில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி கனடாவின் கால்கரி நகருக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு கனடா அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி தனது X (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், “ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடாவின் கால்கரியில் தரையிறங்கினேன். மாநாட்டில் பல்வேறு தலைவர்களை சந்தித்து, முக்கியமான உலகளாவிய பிரச்சினைகள் குறித்து எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வேன். மேலும், ‘குளோபல் சவுத்’ (Global South) நாடுகளின் முன்னுரிமைகளையும் வலியுறுத்துவேன்” என்று குறிப்பிட்டிருந்தார். Landed in Calgary, Canada, to take part in the G7 Summit. Will be meeting various leaders at the Summit and sharing my thoughts on important global issues. Will also be emphasising the priorities of the Global South. pic.twitter.com/GJegQPilXe —…