Author: Editor TN Talks
நடிகர் ரவி மோகன் கடந்த 2009-ம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் என்பவரது மகள் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக ரவி மோகன் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அறிக்கை வெளியிட்டு இருந்தார். ஆனால் ரவிமோகனுடன் இணைந்து வாழவே விரும்புவதாக ஆர்த்தி அறிக்கை வெளியிட, அதன் பிறகு தனக்கு விவகாரத்து பெற்றுத் தரக்கோரி ரவி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனக்கு மரியாதை இல்லை எனவும், பொம்மைப் போல் நடத்தப்படுவதாகவும் ரவி, ஆர்த்தி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கிடையில் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் இல்ல திருமண விழாவில் பாடகியும், மனநல மருத்துவருமான கெனிஷாவுடன் ஜோடியாக ரவி மோகன் பங்கேற்றது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. புதிதாக வந்தவர்களால் அழகாக தெரிந்த வாழ்க்கை தற்போது கசக்க ஆரம்பித்து விட்டதாக ஆர்த்தி, தனது மௌனத்தை கலைத்து…
இந்த மாத தொடக்கத்தில் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா வேகமெடுப்பதாக வெளியான தகவல் உலகம் முழுவதும் மீண்டும் கலக்கத்தை உண்டாக்கியது. ஆசிய நாடுகளிலும் அவ்வகை கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இந்த வகை கொரோனாவால் உயிருக்கு பாதிப்பு எதுவும் இல்லை என கூறி வந்த நிலையில், கர்நாடகாவில் உடல்நல பாதிப்பால் உயிரிழந்த 85 வயது முதியவருக்கு கொரோனா இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனால் மக்களிடம் ஒருவிதமான அச்சம் பரவத் தொடங்கியது. மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து விடுமோ?, ஊரடங்கு போடப்படுமோ?, ஆக்சிஜனுக்காக காத்துக்கிடக்க நேரிடுமோ? உயிர் போய்விடுமோ? என்ற பயத்தால், சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் உலா வந்தன. இவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ”பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம்” வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”புதிய வகை கொரோனா தொற்று எதுவும் இல்லை எனவும் ஒமைக்கரன் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 10-15 நபர்கள் நாள் ஒன்றுக்கு கொரோனா தொற்றால்…
2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை திமுக முன்னேடுத்து பல்வேறு பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில், வரும் ஜூன் 1 ஆம் தேதி திமுக பொதுக்குழுக் கூட்டம் மதுரை உத்தங்குடியில் நடைபெற உள்ளது. இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. திமுக பொதுக்குழுக் கூட்டம் பெரும்பாலும் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் அல்லது சென்னைக்குள் இருக்கக்கூடிய ஏதேனும் ஒரு இடத்தில் தான் நடைபெறுவது வழக்கம்… ஆனால், 48 ஆண்டுகளுக்குப் பின்னர் மதுரையில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கு முன்பு 1977-ஆம் ஆண்டு மே 15-ம் தேதி மதுரை செல்லூர் நந்தவனம் பகுதியில் திமுக பொதுக்குழு நடைபெற்றது. அதில் திமுக பொதுச்செயலாளராக பேராசிரியர் அவர்களும், பொருளாளராக சாதிக் பாட்சா அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதற்கு பின்பு இப்போதுதான் மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முன்பு நடைபெறக்கூடிய பொதுக்குழுவாக இது அமைந்திருக்க…
சென்னை வியாசர்பாடி முல்லைநகர் பகுதியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கச் சென்ற தவெக பெண் நிர்வாகிகள், காவலர்களால் தாக்குதலுக்கு உள்ளான சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு… சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று செயல்பட்டதால், உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு, பல குடிசைகள் தப்பியுள்ளன. தீவிபத்தில் குடிசைகளை இழந்த மற்றும் முன்னெச்சரிக்கையாக அப்புறப்படுத்தப்பட்ட மக்கள், தற்காலிகமாக அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். இந்தத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் சென்று அங்கிருந்தவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் உடை, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் உணவும் வழங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களும் தாமாக முன்வந்து பெற்றுக்கொண்டனர். இதனைப் பார்த்த காவல் துறையினர், த.வெ.க. நிர்வாகிகளைத் தடுத்து நிறுத்தியதுடன், அவர்களை…
பெருநகர சென்னை மாநகராட்சியின் நிதிப் பத்திரங்கள் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இம்முயற்சி, பொருளாதார நிபுணர்களால் வரவேற்கப்பட்டு வரும் நிலையில், இவற்றை வாங்கலாமா? வேண்டாமா என்பதை சில அடிப்படைக் கேள்விகளுடன் அணுகலாம். தமிழக வரலாற்றில் முதன்முறையாக சென்னை மாநகராட்சியின் நிதிப் பத்திரங்கள் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. நவீன வழிமுறைகள் மூலம் மாநகராட்சிக்கு நிதி திரட்டும் முன்னெடுப்பாகப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணி அடித்துத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் நகராட்சிப் பணிகளுக்காக நிதி திரட்டப்படும் எனக் கூறப்படுகிறது. நகராட்சி நிதிப்பத்திரங்கள் என்றால் என்ன? நகராட்சிகளின் உட்கட்டமைப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பணிகளுக்காக நிதி திரட்டும் நோக்கில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் வெளியிடும் நிதிப் பத்திரங்களே நகராட்சிப் பத்திரங்கள் ஆகும். இவை அந்த நகராட்சியின் நிதி செயல்திறனைப் பொறுத்து பங்குச் சந்தையில் மதிப்பைப் பெறுகின்றன. நகராட்சிகளின் நிதி சுயாட்சியை மேம்படுத்தி,…
திமுக கவுன்சிலர் ஒருவர் துப்பாக்கி வைத்திருப்பதாகவும், அரக்கோணம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியின் தாயார் திமுகவினரால் மிரட்டப்படுவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி!” என்று கடுமையாகச் சாடியுள்ளார். பழனிசாமியின் குற்றச்சாட்டுகள் அனுமதியின்றி துப்பாக்கிகள்: அரக்கோணம் திமுக கவுன்சிலர் பாபு உட்பட இருவர் அனுமதியின்றி 2 துப்பாக்கிகள் வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவிக்கு மிரட்டல்: அரக்கோணம் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி, தான் திமுக அரசின் காவல்துறையால் மிரட்டப்படுவதாக கண்ணீருடன் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். காவல்துறை மீது குற்றச்சாட்டு: திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் மாணவியை ஏமாற்றி, பல திமுகவினரின் பாலியல் இச்சைக்கு இணங்குமாறு துன்புறுத்துவதாகவும், புகார் அளித்த மாணவியை காவல்துறை மிரட்டுவதாகவும், திமுக இளைஞரணியின் ஏவல்துறையாக காவல்துறை செயல்படுவதால் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடகாவில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வரும் 1-ம் தேதி போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். சம்பள உயர்வு, 2020-ம் ஆண்டு நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள், அரசு கழக போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் சார்பில் முன் வைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே அரசுடன் போக்குவரத்து கழக சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இதனால் அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில், போக்குவரத்து ஊழியர்கள் நூதன முறையில் போராட இருப்பதாகவும், வரும் 1-ம் தேதி முதல் போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. போராட்டத்தின் ஒரு பகுதியாக அரசு பேருந்துகளில், பணிக்கும் ஆண்களுக்கு இலவச டிக்கெட் வழங்கி நூதன முறையில் தங்களின் போராட்டத்தை நடத்த போக்குவரத்து கழக ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த மாத இறுதிக்குள்…
தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர், சாலை விதிகளை மீறுவோரை அத்துமீறி பிடித்து விதிக்கப்பட்ட அபராதத்தை விட கூடுதல் அபராதம் விதிப்பது, வண்டியை கைப்பற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அப்படி கர்நாடகாவில் போக்குவரத்து காவல்துறையினர் செய்த செயலால், சிறுமி உயிரிழந்த விவகாரம் பேசு பொருளாக மாறியுள்ளது. கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மத்தூர் அருகே கோரவனஹள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் அசோக்-வாணி தம்பதி. இந்த தம்பதிக்கு 4 வயதில் ஹிருதிஷா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. நேற்று (26.05.2026) காலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கிருந்த தெரு நாய் ஒன்று சிறுமியை கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த சிறுமியை பெற்றோர் சிகிச்சைக்காக இருசக்கர வாகனத்தில் மண்டியாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது மண்டியா நகர் நந்தா ரவுண்டானாவில் பணியில் இருந்து போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தடுத்து…
கோவை மாவட்டம், சோமனூரை சேர்ந்த ரவிக்குமாரின் என்பவரின் மகன் வருண்காந்த் மனநலம் பாதித்தவர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சி முல்லை நகரில் உள்ள ’யுதிரா சாரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற தனியார் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். காப்பக நிர்வாகிகள் ஊழியர்கள் சேர்ந்து வருண் காந்தை அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் காப்பக நிர்வாகிகளான கிரிராம், ஷாஜுவின் தந்தை செந்தில் பாபு, நிதிஷ், பணியாளர்கள் ரங்கநாயகி, சதீஷ், ஷீலா ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் காப்பக நிர்வாகிகள் லட்சுமணன், மனநல ஆலோசகர் கவிதா உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர். இதற்காக 3 தனிப்படைகள் அமைத்து தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தில் தேடுதல் நடக்கிறது. அதே நேரம் அவர்கள் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அவர்களின் போட்டோ, பாஸ்போர்ட் உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கிய லுக் அவுட்…
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல சுழற்சியின் தாக்கத்தால், அதே பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை இதன் காரணமாக, இன்று (மே 27) முதல் வரும் மே 30-ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது. பிற மாநிலங்களுக்கு எச்சரிக்கை இன்றைய தினம் கடலோர கர்நாடகா, தெற்கு உள் கர்நாடகா, கோவா, மத்திய மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.