Author: Editor TN Talks
கோவையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால், செல்வபுரம், முத்துசாமி காலனி பகுதியில் உள்ள எஸ்.ஜெ.கார்டன் குடியிருப்புப் பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நீர் வழித்தடங்களைச் சீரமைக்காததால் அவலம்: பருவமழைக்கு முன்பாக கோவை மாவட்ட நிர்வாகம் நீர் வழித்தடங்களை முறையாகத் தூர்வாராததாலும், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததாலும் இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எஸ்.ஜெ.கார்டன் பகுதியில் மழைநீர் வெளியேற வழியின்றித் தேங்கி நிற்பதால், அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். மாநகராட்சி மீது புகார்: இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்குப் பலமுறை தகவல் அளிக்கப்பட்டும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக வெளியேற்றவும், இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை…
தமிழ்நாட்டில் வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், அவர் ஜூன் 2ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பதவிக்காலம் நிறைவு, தேர்தல் அறிவிப்பு: தமிழ்நாட்டில் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாநிலங்களவைப் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து, காலியாகும் இந்த இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதையும் படிக்க: 6 ராஜ்யசபா எம்.பி.க்கள்.. ஜூன் 19-ல் தேர்தல்.. கூட்டணி ஒப்பந்தத்தின் வெளிப்பாடு: கடந்த 2024 மக்களவைத் தேர்தலில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெற்றது. அத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு மக்களவைத் தொகுதிகள் எதுவும் ஒதுக்கப்படாத நிலையில், 2026ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு இடம் வழங்கப்படும் என தி.மு.க.-ம.நீ.ம. இடையே…
கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், வெளிநாடுகளில் வேலை தேடியபோது சமூக வலைத்தளத்தில் வந்த விளம்பரத்தை நம்பி ரூ.64 லட்சம் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடி தொடர்பாக குஜராத்தைச் சேர்ந்த ஒருவரை கோவை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைத் தேடி முகநூலை (Facebook) பயன்படுத்தி வந்த அந்தப் பெண், உக்ரைன், குரோஷியா, போலந்து, செர்பியா போன்ற நாடுகளுக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்துள்ளார். இதைத் தொடர்ந்து, அந்த விளம்பரம் அளித்தவர்களைத் தொடர்பு கொண்டபோது, குறைந்த செலவில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். குஜராத்தில் உள்ள ‘சன்ஸ்டீலர் பிரைவேட் லிமிடெட்’ என்ற போலி நிறுவனத்தின் பெயரில் அந்தப் பெண்ணுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனை நம்பிய அந்தப் பெண், பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூபாய் 64 லட்சத்தை அவர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். நீண்ட நாட்கள் ஆகியும்…
திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே உள்ள பூதமரத்துப்பட்டி கிராமத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான 100 ஆண்டுகள் பழமையான காளியம்மன், மாரியம்மன், பகவதி அம்மன் கோவில் நிலத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததற்குக் கண்டனம் தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். ஆக்கிரமிப்பு விவகாரம்: ஒவ்வொரு வருடமும் நடைபெறும் கோவில் திருவிழாவின்போது, கோவில் நிலத்தில் உள்ள நாடக மேடையில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 20-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. வரும் 28-ஆம் தேதி வள்ளி திருமணம் நாடகம் நடைபெற உள்ளது. இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த குணசேகரன் உட்பட 5 பேர், இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு அறக்கட்டளையைத் தொடங்கி, கோவில் நாடக மேடை தங்களுக்குச் சொந்தமான இடத்தில் இருப்பதாகக் கூறி, அங்கு நாடகம் நடத்தக் கூடாது…
மக்களவை, மாநிலங்களவை என்ற இரு அவைகளை கொண்டது தான் நாடாளுமன்றம். மக்களவையில் 545 இடங்களும், மாநிலங்களவையில் 250 இடங்களும் உள்ளன. 238 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். 12 பேர் குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட சிறப்புப் பிரிவு உறுப்பினர்கள் ஆவர். மக்களவைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களும், மாநிலங்களவைக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களும் (எம்.எல்.ஏ.க்கள்) வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களும் இடம்பெறுவார்கள். ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு மக்களவையில் 39 இடங்களும், மாநிலங்களவையில் 18 இடங்களும் உள்ளன. தற்போது, மொத்தம் உள்ள 18 மாநிலங்களவை உறுப்பினர்களில் 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்தல் ஜூன் 19ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில்…
தமிழ்நாட்டில் நிதி மேலாண்மையை வலுப்படுத்துவதில் திராவிட மாடல் அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளார். அதன் ஒரு புதிய மைல்கல்லாக, சென்னை மாநகராட்சியின் 200 கோடி ரூபாய் மதிப்பிலான நகர்ப்புற நிதிப் பத்திரங்கள் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ளா தகவலில், “பொறுப்புமிக்க, திறன்மிக்க நிதி மேலாண்மையின் மூலம் தமிழ்நாட்டின் நிதிநிலையை நாம் சீர்செய்து வருகிறோம். அதன் ஒரு புதுமுயற்சியாக, நமது சென்னை மாநகராட்சியின் வளர்ச்சிக்காக, 200 கோடி ரூபாய் மதிப்பிலான நகர்ப்புற நிதிப் பத்திரங்கள் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுகின்றன,” என்று குறிப்பிட்டார். பொறுப்பான, திறன்மிக்க நிதி மேலாண்மையால் தமிழ்நாட்டின் நிதிநிலையைச் சீர்செய்து வரும் திராவிட மாடல் அரசின் புதுமுயற்சியாக, சென்னை மாநகராட்சியின் 200 கோடி ரூபாய் மதிப்பிலான நகர்ப்புற நிதிப் பத்திரங்கள் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுகின்றன. இதனால் கடனுக்கான வட்டி செலுத்துவது……
அனகாபுத்தூர் காயிதே மில்லத் நகர் மற்றும் ஸ்டாலின் நகர் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக CPM மாநிலச் செயலாளர் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் குடியிருப்புகள் நீர்நிலை வகைப்பாட்டில் வரவில்லை என்றும், எனவே அம்மக்களை அரசு அப்புறப்படுத்தக் கூடாது என்றும் CPM மாநிலச் செயலாளர் இன்று காலை அமைச்சர் கே.என். நேரு மற்றும் துறைச் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும், பெரும்பாலான மக்கள் இஸ்லாமியர்கள் என்பதால் வரவிருக்கும் பக்ரீத் பண்டிகையைக் கருத்தில் கொண்டு, தற்போது மக்களை அப்புறப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அமைச்சர் தரப்பிலிருந்து, மக்கள் தாங்களாகவே முன்வந்து வெளியேறுவதாகவும், அரசு யாரையும் பலவந்தப்படுத்தி வெளியேற்றவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காவல்துறையினர் பலவந்தமாக வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் என்று திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோது அவரே கூறி இருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சென்னை திருவான்மியூரில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று பேசியதாவது. “ஒரே நாடு, ஒரே தேர்தல்” முறை அமல்படுத்தப்பட்டால் அது ஒரே கட்சி தொடர்ந்து ஆட்சி அரியணையில் அமர்வதற்கு தோதாக அமைந்துவிடும் எனக் கூறுகிறார், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால் அவரின் தந்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களோ தனது சுயசரிதையான “நெஞ்சுக்கு நீதி” என்ற புத்தகத்தில், “அரசு இயந்திரங்களின் செயல்பாடு, நேரம் மற்றும் வளங்களை மீதப்படுத்தும்…
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் குற்றம்சாட்டினார். சென்னை திருவான்மியூரில் பா.ஜ.க சார்பில் நடந்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான கருத்தரங்கில் ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பங்கேற்றார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாடு சித்தர்களின் பூமி என்றார். ஒரே நாடு , ஒரே தேர்தல் குறித்து பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக பவன் கல்யாண் குற்றம்சாட்டினார். இந்த விஷயத்தில் சிலர் இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் தெரிவித்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைருமான கருணாநிதி ஆதரித்ததாகவும், ஆனால் தற்போதை முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் அதனை எதிர்ப்பதாகவும் பவன் கல்யாண் குற்றம்சாட்டினார். இந்த முரண்பாடு ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். நெஞ்சுக்கு நீதியில் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கருணாநிதி ஆதரித்து…
உலகில் வளர்ச்சி அடைந்த நாடாக நமது நாட்டை மாற்றுவதற்கு இந்தியர்கள் 140 கோடி பேரும் பாடுபடுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் ரயில் என்ஜின் உற்பத்தி தொழிற்சாலையை பிரதமர் மோடி இன்று (மே 26) நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, உலகளவில் உற்பத்தி துறையில் இந்தியா முன்னேறி வருவதாக பெருமிதம் தெரிவித்தார். நமது நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கு உள்கட்டடைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றார். 2014ல் இதே நாளில் (மே 26) முதன்முறையாக பிரதமராக பதவியேற்றதை குறிப்பிட்ட மோடி, குஜராத் மக்கள் முதலில் தன்னை ஆசிர்வதித்ததாகவும், பின்னர், கோடிக்கணக்கான இந்திய மக்கள் தன்னை ஆசிர்வதித்து வருவதாகவும் தெரிவித்தார், இந்திய உற்பத்தி பொருட்களுக்கு மக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, முக்கிய பண்டிகைகளின் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும்…