Author: Editor TN Talks

அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்தே முதலமைச்சர் ஸ்டாலின் தில்லி சென்றதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைக்குப் பயந்தே நேற்றைய நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார். கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தால், நிதியைக் கேட்டுப் பெற்றிருக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, மோதியின் தமிழக வருகையின்போது கருப்பு பலூன் விட்டதாகவும், ஆளுங்கட்சியான பிறகு வெள்ளைக்குடை பிடிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். தமிழகத்தில் சிறுமிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத அவல ஆட்சி நடந்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Read More

கேரளாவில் கொச்சி துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த லைபீரியா நாட்டைச் சேர்ந்த கண்டெய்னர் கப்பல் ஒன்று எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கியது. விழிஞ்ஞத்தில் இருந்து பெட்ரோலிய பொருட்களை ஏற்றிக்கொண்டு கொச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த சரக்குக் கப்பல், கொச்சியிலிருந்து தென்மேற்கு திசையில் சுமார் 38 மைல் தொலைவில் வந்தபோது திடீரென ஒருபக்கம் சாய்ந்து மூழ்கத் தொடங்கியது. உடனடியாக கப்பல் நிர்வாகம் உதவி கோரியதை அடுத்து, இந்திய கடலோர காவல்படை மீட்புப் பணிக்காக இரண்டு கப்பல்களையும், ஒரு ராணுவ ஹெலிகாப்டரையும் விரைந்து அனுப்பியது. கப்பலில் இருந்த 24 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனிடையே, கப்பலில் இருந்து கசிந்த ரசாயனப் பொருட்கள் காரணமாக அப்பகுதி ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், கரை ஒதுங்கியுள்ள எந்தப் பொருட்களையும் பொதுமக்கள் தொட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

இந்தியப் படைகளின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் புதிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று ஒலிபரப்பான மனதின் குரல் நிகழ்ச்சியில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியப் படையினர் வெளிப்படுத்திய வீரமும், துல்லிய தாக்குதலும் இந்தியர்களைப் பெருமிதம் கொள்ளச் செய்துள்ளதாக அவர் கூறினார். மக்களுடன் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளும் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 122-வது பதிப்பு இன்று ஒலிபரப்பானது. அதில் பிரதமர் நரேந்திர மோடி கூறிய முக்கிய அம்சங்கள்: பயங்கரவாதத்திற்கு எதிராக நாடு முழுவதும் ஒன்றுபட்டு உறுதியோடு உள்ளது. பயங்கரவாதத்தை ஒழிப்பதுதான் அனைத்து இந்தியர்களின் உறுதிப்பாடு. ஆபரேஷன் சிந்தூரின் துல்லியம், தீவிர தாக்குதல் ஆகியவை எல்லை தாண்டிய பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களை அழித்து ஒழித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் ஒரு ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, இது மாறிவரும் இந்தியாவின் காட்சியாக அனைவரது மனதிலும் தேசபக்தி உணர்வை ஊட்டியுள்ளது. நாட்டின்…

Read More

கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் இன்று (மே 25) தொடங்கியது. ஜூன் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தத் தொடரில் உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களும் வீராங்கனைகளும் சாம்பியன் பட்டத்திற்காக மோதவுள்ளனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. 22 வயதான அவர் இந்த ஆண்டில் களிமண் தரை ஆடுகளத்தில் விளையாடிய 16 போட்டிகளில் 15-ல் வெற்றி பெற்று சிறப்பான ஃபார்மில் உள்ளார். இவருக்கு உலகின் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் கடும் சவால் அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 18 மாதங்களாக டென்னிஸ் உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஜன்னிக் சின்னர், ஊக்க மருந்து சர்ச்சைக்குப் பிறகு சமீபத்தில் களத்திற்குத் திரும்பினார். சமீபத்தில் நடைபெற்ற இத்தாலி ஓபன் தொடரின் கால் இறுதிப் போட்டியில் அவர்…

Read More

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதி கனமழை வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும் (மே 25) நாளையும் (மே 26) அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. இதன் காரணமாக இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தென் தமிழக மாவட்டங்களான திருநெல்வேலி, தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக கடலோர…

Read More

பொன்னியின் செல்வன் என்ற மிகப்பெரிய படைப்புக்கு பிறகு மணிரத்னம் ’தக் லைஃப்’ என்ற படத்தை இயக்கத் தொடங்கினார். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனை வைத்து மணிரத்னம் இயக்குகிறார் என்ற செய்தி காட்டுத் தீயாய் பரவிய நிலையில், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பும் எகிறது. அதற்கு தீனி போடும் விதமாக படத்திலிருந்து ஒவ்வொரு அப்டேட்டாக படக்குழு அறிவித்துக் கொண்டிருந்தனர். ஒரு வழியாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (24.05.2025) பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமாரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிம்பு, ”பீப் சாங்” சர்ச்சை எழுந்தபோது ஏ.ஆர்.ரகுமான் தனக்கு உறுதுணையாக இருந்ததாகவும், ஏ.ஆர்.ரகுமான் வாய்ப்பளித்ததால் பல மொழிகளில் தாம் 150 பாடல்களை பாடியுள்ளதாக சிலம்பரசன் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தனது பெற்றோருக்கு நன்றி தெரிவிக்கும்போது குரல் தழுதழுத்தார்”. நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய கமல்ஹாசன், ”தாம் ஒரு சினிமா ரசிகன் என்றார். தாம் திரைப்படங்களை தயாரிக்கும்போது…

Read More

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் வரும் 28-ம் தேதி வரை உள்ள நிலையிலும், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ம் தேதி கேரளாவில் தொடங்கி ஜூலை 8ம் தேதி இந்தியா முழுவதும் பரவக்கூடும். இந்த முறை 16 ஆண்டுகளுக்கு பிறகு முன்கூட்டியே பருவமழை தொடங்கியிருப்பதால், கேரளாவை ஒட்டியுள்ள தமிழ்நாடு மாவட்டங்களிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நாட்டின் 80% மழைப் பொழிவு தென்மேற்கு பருவமழை காலத்தில் கிடைக்கும். தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும்(25.05.2025) நாளையும் (26.05.2025) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், உதகைக்கு கேரளாவை சேர்ந்த குடும்பத்தினர் சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் இன்று உதகையில் உள்ள ஃபைன்…

Read More

கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை உட்பட 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி கடந்த 2 தினங்களாக கோவையில் மழை பெய்து வருகிறது. இதனால், கோவை – பாலக்காடு சாலை, குனியமுத்தூர் பகுதியில் சாலையோரம் இருந்த ஒரு மரம் சாய்ந்த சி.சி.டி.வி காட்சி வெளியாகியுள்ளது. மரம் சாய்ந்த சமயத்தில் அவ்வழியே வந்த ஒரு கார், சரியான நேரத்தில் நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மழைக்காலத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மரம் விழுதல் அல்லது மின்சார வயர்கள் அறுந்து விழுதல் போன்ற சம்பவங்கள் நடந்தால், உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த குழுவினர் தயாராக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையின் பல்வேறு பகுதிகளில் தற்போது சாரல்…

Read More

காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலாத் தளத்தில் கடந்த மாதம் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பதிலடி கொடுத்தது. காஷ்மீரில் இயங்கி வந்த 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த சம்பவத்திற்கு பின்பு இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் மூண்டது. எல்லையில் 4 நாட்களுக்கு இருநாட்டு படைகளுக்கு இடையே தாக்குதல் நீடித்தது. பின்னர் மோதல் நிறுத்தம் தொடர்பான புரிந்துணர்வு ஏற்பட்டதை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல் முடிவுக்கு வந்தது. இருப்பினும் ஆபரேஷன் சிந்தூர் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டதாக மத்திய அரசு கூறியது. இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்கு போர்குணம் இல்லை என பாஜக எம்.பி ராம் சுந்தர் ஜங்ரா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவின் பிவானி பகுதியில் மகாராஷ்டிர ராணி அஹில்யாபாய்…

Read More

டைட்டானிக்.. இது ஒரு திரைப்படம் மட்டுமே அல்ல.. இது ஒரு காதல் காவியம் எனலாம். காதல் காவியங்கள் ஒருவரின் கற்பனையால் மட்டுமே தோன்றுவதில்லை. அது சில சமயம் உண்மை சம்பவங்களாகவும் இருக்கலம். அப்படியான ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படம் தான் டைட்டானிக். 1997-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. ரோமியோ-ஜூலியட், அம்பிகாவதி-அமராவதி போன்ற காதலர்களின் வரிசையில், படமாக எடுக்கப்பட்டாலும் ஜாக்-ரோஸ் ஜோடி என்றென்றும் போற்றப்படுபவர்கள். இவர்களது காதல் கதை, இன்றைய இளைஞர்கள் வரை ஃபேவரைட் கதை. இந்த காதல் ஒரு பக்கம் இருந்தாலும், டைட்டானிக் கப்பல் மூழ்கிய அந்த ஒரு சம்பவம் எப்படி, ஏன், எதனால் என்ற பல கேள்விகளை நம்முள் ஏற்படுத்தியிருக்கிறது. இதனை பற்றி தெரிந்து கொள்ள நாம் 113 ஆண்டுகளுக்கு முன்பு செல்ல வேண்டும். 1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி பல்லாயிரம் பேரின்…

Read More