Author: Editor TN Talks
அதிமுக முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 30 ஆம் தேதி குண்டு வெடிப்பு நடத்தபட உள்ளதாகவும், அதில் உங்களை கொலை செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டு, கோவை காளப்பட்டி பகுதியில் இருந்து கடிதம் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் குறிப்பிட்ட இடத்தில் ரூ.1கோடி பணத்தை வைக்கவேண்டும், இல்லை என்றால் மூன்று மாதத்தில் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை கொலை செய்ய உள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து கோவை புறநகர் மாவட்ட கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தாமோதரன் தலைமையில் மாவட்ட காவல் ஆணையாளரிடம் புகாரளிக்கப்பட்டது.
திருப்பதி திருமலையில் இந்து மத வழிபாடு தவிர மற்ற மதங்கள் தொடர்பான வழிபாடுகள், செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு முழு தடை அமலில் உள்ளது. இந்த நிலையில் திருமலையில் உள்ள மெகா கல்யாண மண்டபத்தில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவர் நமாஸ் செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அந்த நபரை தேடி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துகின்றனர்.
மத்திய கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 12 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலை தெற்கு கொங்கன் மற்றும் கோவா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடல் பரப்புகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழையுடன் தொடங்கிய கத்தரி வெயில், தற்போது சுட்டெரிக்கும் வெப்பமாக மாறியுள்ளது. கடந்த மே 16 முதல் லேசான மழை தொடர்ச்சியாக பெய்து வந்த நிலையில், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பதிவாகி வெப்ப நிலை சற்று குறைந்துள்ளது. இதற்கிடையில், தென்மேற்கு பருவமழை பொதுவாக மே 27-ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அது சில நாட்கள் முன்னதாகவே – அதாவது மே 25-க்குள் தொடங்கும் சாத்தியம் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடக்கத்தில் இது…
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகத்திற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 40 வது கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது, காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் நீர் இருப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கர்நாடகா காவிரியில் இருந்து தரவேண்டிய நீர் விவகாரம் மற்றும் நீர்த்திறப்பு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதையும் படிக்க: இனி இந்தியாவின் பதிலடி பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்- பிரதமர் மோடி கூட்டத்தின் முடிவில் தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் திறந்து விட வேண்டிய 9.19 டி.எம்.சி தண்ணீர், ஜூலை மாதத்திற்கான 31.24 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டுமென கர்நாடகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து டெல்லி செல்கிறார். நாளை பிரதமர் மோடி தலைமையில் 10 வது நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் முதல்வர்களும் கலந்து கொள்ள அழைப்பதில் விடுக்கப்பட்டுள்ளது இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று காலை 9:30 மணி அளவில் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் சென்று டெல்லி செல்ல உள்ளார். பிற்பகல் 12. 50 மணிக்கு டெல்லி செல்லும் முதலமைச்சருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு அளிக்க உள்ளனர் அதனை தொடர்ந்து முதலமைச்சர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார். தொடர்ந்து நாளை காலை எட்டு முப்பது மணி அளவில் தமிழ்நாடு இல்லத்திலிருந்து புறப்பட்டு ஒன்பது மணிக்கு பாரத் மண்டபம் சென்று…
மாஸ்கோ விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் காரணமாக கனிமொழி கருணாநிதி எம்.பி பயணித்த விமானம், தரையிறங்க முடியாமல், வானில் சிறிது நேரம் வட்டமடித்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த மே 7ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டது. இதற்கிடையே, பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து வெளிநாடுகளுக்கு விவரிக்கும் வகையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை ஒன்றிய அரசு அறிவித்தது. இந்த நிலையில், கனிமொழி கருணாநிதி தலைமையிலான எம்.பி-க்கள் குழு நேற்று ரஷ்யாவுக்குப் புறப்பட்டனர். இந்த நிலையில், நள்ளிரவில் மாஸ்கோ விமான நிலையத்தில் ட்ரோன்கள் ஏவப்பட்ட தாக்குதல்கள் நடைபெற்றது. இதனால், சில நேரம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் தற்காலிகமாக…
கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வைஷ்ணவி திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். கடந்த மே 3 ம் தேதி த.வெ.க வில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, சமூக பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். பதவிக்கு ஆசைப்படாமல், மக்களுக்கு உதவுவதே தனது நோக்கமாக வைத்துக் கொண்டு செயல்பட்டு வந்ததாகவும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார். பல்வேறு கட்சிகளிடம் இருந்து அழைப்புகள் வந்த போதும், எந்தவொரு தவறான முடிவையும் எடுக்காமல், நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு தி.மு.க வின் வளர்ச்சி பணிக்கே தன்னையும் குடும்பத்தையும் அர்ப்பணிக்க முடிவெடுத்ததாக அவர் தெரிவித்தார். தி.மு.க வின் வளர்ச்சியும், மு.க. ஸ்டாலின் அவர்கள் வழிநடத்தும் சமூகநல அரசியலும் தான் தேர்வு செய்யக் காரணமாக அமைந்ததாகவும் கூறி உள்ளார். தி.மு.க வில் தனது அம்மா கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்ததையும், தன்னுடைய அரசியல் பயணத்திற்கு உறுதுணையாக இருந்ததையும்,சமூக ஊடகங்களில் சிலர் மேற்கொண்ட தரக்குறைவான விமர்சனங்களும் தன்னையும், குடும்பத்தையும் பாதித்து உள்ளதாகவும் அவர்…
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வைஷ்ணவி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இன்று அதிகாரப் பூர்வமாக இணைந்தார். கடந்த மே 3 ம் தேதி த.வெ.க வில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, சமூக பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். பதவிக்கு ஆசைப்படாமல், மக்களுக்கு உதவுவதே தனது நோக்கமாக வைத்துக் கொண்டு செயல்பட்டு வந்ததையும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார். பல்வேறு கட்சிகளிடம் இருந்து அழைப்புகள் வந்த போதும், எந்தவொரு தவறான முடிவையும் எடுக்காமல், நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு தி.மு.க வின் வளர்ச்சி பணிக்கே தன்னையும் குடும்பத்தையும் அர்ப்பணிக்க முடிவெடுத்ததாக அவர் தெரிவித்தார். தி.மு.க வின் வளர்ச்சியும், மு.க. ஸ்டாலின் அவர்கள் வழிநடத்தும் சமூக நல அரசியலும் தான் தேர்வு செய்யக் காரணமாக அமைந்ததாகவும் கூறி உள்ளார். தி.மு.க வில் தனது அம்மா கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்ததையும், தன்னுடைய அரசியல் பயணத்திற்கு உறுதுணையாக இருந்ததையும்,சமூக ஊடகங்களில் சிலர் மேற்கொண்ட தரக்குறைவான விமர்சனங்களும்…