Author: Editor TN Talks
மார்ச் 2 – திண்டிவனம் இந்துமதி மார்ச் 28 – கிளாம்பாக்கம் தர்ஷினி ஏப்ரல் 3 – பெரியமுத்தியம்பட்டி சத்யா ஏப்ரல் 4 – புதுப்பாக்கம் சக்தி புகழ்வாணி மே 20 – சேலம் நரசோதிப்பட்டி கௌதம் நீட் தேர்வுக்கு அஞ்சி இரண்டு மாத காலத்தில் 5 மாணவச் செல்வங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டின் சட்டப்போராட்டங்கள் கடலில் கரைத்த பெருங்காயமாக உள்ளன. மத்திய அரசோ, உயிரைப் போக்கிக் கொள்ளும் மாணவ-மாணவிகளை வெறும் எண்ணிக்கையாக பார்க்கிறது. மருத்துவப் படிப்புதான் பெரிது என்று பிள்ளைகளுக்கு நெருக்கடி கொடுக்கும் பெற்றோரை குறைசொல்வதா? பெரியண்ணன் மனோபாவத்தில் இருக்கும் மத்திய அரசைக் குறை சொல்வதா? கையறு நிலையில் இருக்கும் தமிழக அரசை நொந்து கொள்வதா? கடைசியில் இழப்பு என்னவோ? ஆசை, ஆசையாய் வளர்த்த பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோருக்குத் தான்.
சென்னை மக்களின் பயணத்திற்கு ஏதுவாக மின்சார ரயில் மற்றும் பறக்கும் ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை கடற்கரையில் இருந்து செல்லக் கூடிய மின்சார ரயிலில் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரயிலின் 6-வது பெட்டியில் புகை வந்துள்ளது. இதனால் பல்லாவரம் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. மறுபுறம் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற ரயில் தண்டவாளத்தில் கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கி சென்ற ரயிலும் திருப்பி விடப்பட்டதால், இரண்டு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் வந்து நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பதட்டமடைந்தனர். 30 நிமிடங்களுக்கு மேலாக ரயில் சேவை நிறுத்தப்பட்டு புகை வந்ததற்கான காரணம் குறித்து ரயில்வே பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பிரேக் ஷூவில் ஏற்பட்ட குளறுபடியை சரி செய்து ரயிலை அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்படி பிரிவு வருகே தனபால் என்பவர் டீ கடை நடத்தி வருகிறார். இங்கு நேற்று (20.05.25) இரவு 11 மணி அளவில், அம்பாத்துறையைச் சேர்ந்த சின்னபாண்டி என்பவர் சிகரெட் வாங்கியுள்ளார். அதற்கான பணத்தை கூகுள் பே-ல் செலுத்தியதாக கூறப்படுகிறது. பணம் அனுப்பியது தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக சின்னபாண்டி தனது காரில் இருந்த அரிவாளை எடுத்து தனபாலை தாக்க முற்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கடையின் உரிமையாளர் தனபால், மற்றும் அவரது கடையில் டீ மாஸ்டராக இருந்த முருகேசன் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாழைக்காய் பஜ்ஜி போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த கட்டையை வைத்து தனபால் சின்னபாண்டியை தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்தார். அருகேயிருந்தவர்கள் சின்னபாண்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக சின்னாளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார், சின்னப்பாண்டி எடுத்து வந்த அரிவாள்,…
தமிழ் சினிமாவில் சினிமா பின்புலம் இல்லாமல் அடிமட்டத்திலிருந்து படிபடியாக உயர்ந்த நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. சிறு சிறு வேடங்களில் நடித்து பீட்சா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகானவர், தனது எதார்த்த நடிப்பால் அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். குறிப்பிட்ட வருடங்களில் கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டிற்கும் சென்றுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ”ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” படத்தை ஆறுமுக குமார் என்பவர் இயக்கி இருந்தார். இத்திரைப்படம் பெரிய வரவேற்பு இல்லாமல் சென்ற நிலையில், 5 ஆண்டுகள் கழித்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. விஜய் சேதுபதியின் 51-வது படத்தில் இணைந்த இந்த கூட்டணி, விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தியது. மலேசியாவில் மொத்த படப்பிடிப்பையும் முடித்த படக்குழு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் முழு வீச்சில் செய்தது. ’ஏஸ்’ என பெயரிடப்பட்ட இந்தப் படத்தில், யோகிபாபு, ருக்மிணி…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகராட்சியில் ரூ.300.51 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் கழிவுநீர் கால்வாய் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதேப் போல ரூ.188 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு நகராட்சியில் கழிவுநீர் கால்வாய் திட்டம் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் ரூ.188 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெற்று வரும் பணிகள் மந்த கதியில் நடைபெறுவதாகவும், இதனால் சாலைகளில் ஆங்காங்கே சேதம் ஏற்பட்டு, விபத்துகள் எற்படும் அபாயம் நிலவுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதில் குறிப்பாக செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் சாலைகளின் நடுவில் பள்ளம் தோண்டி அதில் பாதாள சாக்கடை இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பைப்லைன் இணைப்பதற்காக சாலைகளின் நடுவே பள்ளம் தோண்டி குழாய்கள் இணைக்கப்படுகிறது. பள்ளத்தை தோண்டி குழாய்களை புதைத்து பணி முடிந்த பிறகு கூட, தோண்டிய பள்ளத்தை மூடாமல் மண்ணை வாரி இறைத்துவிட்டு சென்றுள்ளனர்…
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வரும் ஜூன் 12-ஆம் தேதி காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவது உறுதியாகி விட்ட நிலையில், குறுவை சாகுபடி செய்ய உழவர்களை ஊக்குவிப்பதற்கான குறுவைத் தொகுப்புத் திட்டம் இன்று வரை அறிவிக்கப்படவில்லை. காவிரி பாசன மாவட்ட உழவர்களின் நலனில் தமிழக அரசு அக்கறையின்றி செயல்படுவது கண்டிக்கத்தக்கது”. ”மேட்டூர் அணையிலிருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறந்து விடப்படாத ஆண்டுகளில், நிலத்தடி நீரை பயன்படுத்தி உழவர்களை ஊக்குவிக்கு நோக்குடன் தான் குறுவைத் தொகுப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது என்றாலும் கூட, பல்வேறு காரணங்களால் குறுவை பருவத்தில் உழவர்கள் இழப்பை சந்திப்பது வாடிக்கையாகி விட்ட நிலையில், அதைக் கருத்தில் கொண்டு அனைத்து ஆண்டுகளும் குறுவைத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், நடப்பாண்டிற்கான குறுவைத் தொகுப்பு இன்னும் அறிவிக்கப்படாதது உழவர்களிடையே பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது”. ”குறுவை பாசனத்திற்காக…
பிரபல ஹாலிவுட் நடிகர் டென்ஸல் வாஷிங்டன், பல்வேறு பிரம்மாண்டமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். எ சோல்ஜர்ஸ் ஸ்டோரி, க்ரை ஃபிரீடம், மால்கம் எக்ஸ், ஃபிளைட், த டிராஜடி ஆஃப் மெக்பத், அமெரிக்கன் கேங்ஸ்டர், கிளாடியேட்டர் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார். குளோரி மற்றும் ட்ரெயினிங் டே திரைப்படங்களில் வெளிப்படுத்திய மிக சிறந்த நடிப்பிற்காக அவர் இரண்டு முறைகள் ஆஸ்கர் விருது பெற்றுள்ள பெருமையுடையவர். இந்நிலையில், டென்ஸல் வாஷிங்டன் நடித்துள்ள சமீபத்திய திரைப்படமான ‘ஹையஸ்ட் டு லோயஸ்ட்’ கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. ஸ்பைக் லீ இயக்கியுள்ள இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த விழாவில், டென்ஸல் வாஷிங்டனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதாக தங்கப்பனை விருது வழங்கப்பட்டது. இந்த மரியாதையை அவரது நெருங்கிய நண்பரும் பிரபல இயக்குநருமான ஸ்பைக் லீ வழங்கிய போது, நிகழ்வில் கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று, கைதட்டிப் பெரும் வரவேற்பை அளித்தனர். விழா தொடக்கத்தில்,…
2026 சட்டமன்ற தேர்தல் வேலைகளை திமுக ஏற்கனவே தொடங்கியுள்ளது. தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் திமுக குழு நியமித்துள்ளது. தமிழகம் முழுவதும் இருக்கக் கூடிய மாவட்டங்களை 7 மண்டலங்களாக பிரித்து மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு தமிழகம் முழுவதும் மண்டல பொறுப்பாளர்கள் தேர்தல் சம்பந்தமாக திமுக நிர்வாகிகளை சந்தித்து கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மண்டல பொறுப்பாளராக திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 23ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நிர்வாகிகளுடன் ஆ.ராசா ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தெற்கு, தென்மேற்கு, கிழக்கு, மேற்கு, வடக்கு, வடகிழக்கு, திருவள்ளூர் கிழக்கு, மத்திய, மேற்கு, மற்றும் காஞ்சிபுரம் வடக்கு ஆகிய மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற தொகுதி வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து நாளை (22.05.2025) முதல் ஜூன் 10-ம் தேதி வரை கலந்துரையாட உள்ளனர்.…
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், பி.எம். ஸ்ரீ, சமக்ரா சிக்ஷா திட்டத்தின் நிதியை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம். புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தாததால் நிதியை நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல. கல்வி திட்டத்துக்கான நிலுவை நிதி வழங்கப்படவில்லை. சமக்ரா திட்டத்துக்கான நிதியை 6% வட்டியுடன் ரூ.2,291 கோடி வழங்க உத்தரவிட வேண்டும், அத்தோடு தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்தினால் தான் நிதி தருவோம் என மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பதாகவும் தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றும், நாளையும் (21,22) ஆகிய தேதிகளில் இரட்டை இலை தொடர்பான வழக்கு இந்திய தேர்தல் ஆணையத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இரட்டை இலை மற்றும் பொதுச்செயலாளர் வழக்கு சம்பந்தமான தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக ஆகிய உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க தடையில்லை என்று உத்தரவிட்டிருந்தது. மேலும் இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி, பொதுச்செயலாளர் ஆகிய விவகாரம் குறித்து சூர்யமூர்த்தி, புகழேந்தி, கே.சி.பழனிசாமி, ஓ.பி.ரவீந்திரநாத், ஓ.பன்னீர்செல்வம், ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் தனித்தனியாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக அதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழுவில் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் இது…