Author: Editor TN Talks

கடன் வாங்கி விட்டு பின்னர் அதை அடைப்பதற்குள் படும்பாடு இருக்கிறதே… அது வார்த்தைகளால் சொல்லி விட முடியாத ஒன்று. கடன் பிரச்சினை தீர தேய்பிறை அஷ்டமியில் காலபைரவரை வணங்க வேண்டும். செவ்வாய்கிழமை தேய்பிறை அஷ்டமி திதி வருவது சிறப்பான நாள் இன்றைய தினம் பைரவருக்கு அரளிப்பூ மாலை சாற்றி வழிபட தீராத கடனும் தீரும் என்பது நம்பிக்கை. வாழும் வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். ஆனால் இந்த காலத்திற்கு கடன் இல்லாத வாழ்க்கையே சிறப்பான வாழ்க்கை என்று சொல்லும் அளவிற்கு உள்ளது. தொழில் செய்வதாக இருந்தாலும் சரி, குடும்ப முன்னேற்றத்திற்காக இருந்தாலும் கடன் வாங்காமல் எதையும் செய்ய முடியாத நிலை. இன்று நடுத்தர மக்கள் மட்டுமின்றி பெரும் பணக்காரர்கள் வரை வாட்டி வதைப்பது கடன் பிரச்னைதான். பணப்பிரச்னை என்பது எல்லோருக்கும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் வந்து விடுகிறது. ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் சுமை ஏற்பட்டு…

Read More

செவ்வாய்க்கிழமை ஒரு புனிதமான கிழமையாகும். மங்களவாரம் என அழைக்கப்படும் இந்த நாளைத்தான் பலரும் விரதமிருக்க தேர்ந்தெடுக்கின்றனர். இந்தக் கிழமை முருகனுக்கும், அம்மனுக்கும் உகந்த கிழமையாகும். சொந்த வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த நாட்களில் விரதம் இருந்து வணங்கினால் பூமி யோகம் தேடி வரும் என்பது நம்பிக்கை. செவ்வாய்கிழமை எப்படி விரதம் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம். பூமாதேவியின் மைந்தன் மகாவிஷ்ணுவின் மனைவியான பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவர் செவ்வாய் என புராணம் தெரிவிக்கிறது. பொறுமையின் இலக்கணமான பூமாதேவியின் ஆசியைப் பெற்றால் வாழ்வு சிறக்கும். சொந்தவீடு அமையவும், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சேரவும் செவ்வாயை வழிபடலாம். செவ்வாய் வருவாய் என்று சொல்லுவார்கள். செவ்வாய்கிழமை அன்று மட்டும் நமது வேண்டுதலை எந்த தெய்வத்திடமும் வைத்தாலும் அந்த வேண்டுதலை உடனே நிறைவேற்றிக்கொடுக்கும். மங்களகாரகன் என்று அனைவராலும் போற்றப்படுவது செவ்வாய். வீரத்தின் நாயகன் செவ்வாய்க்கு உகந்த நாள் செவ்வாய்கிழமை. புனிதமான இந்த கிழமையைத்தான் பலரும் விரதமிருக்க…

Read More

தமிழ் சினிமாவில் உயரமான ஆக்சன் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் விஷால். தயாரிப்பாளர் கிருஷ்ணா ரெட்டியின் மகனான விஷால், 2004-ம் ஆண்டு ‘செல்லமே’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் உட்பட ஒரு நட்சத்திர பட்டாளமே சேர்ந்து நடித்திருந்த ‘சண்டக்கோழி’ திரைப்படம் அவரது திரை வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது எனலாம். இந்தப் படத்திற்கு பிறகு தான் அவர் ஆக்‌ஷன் ஹீரோ என்றும் அழைக்கப்பட்டார். தொடர்ந்து ‘திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்தியம்’ என ஆக்‌ஷன் கலந்த காதல் திரைப்படங்களில் நடித்து வந்த விஷால், ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தில் ஒரு சக்லேட் பையனாக நடித்திருந்தார். தொடர்ந்து அவன் -இவன் படத்தில் ஒரு மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார். கிட்டத்தட்ட 23 படங்களுக்கும் மேல் நடித்துள்ள விஷால், ‘பூஜை, ஆம்பள’ ஆகிய திரைப்படங்களை தயாரிக்கவும் செய்தார். இவரது நடிப்பில் 2015-ம் ஆண்டு உருவான…

Read More

இட்லி, தோசை என்று தினமும் ஒரே மாதிரியான காலை உணவால் சற்று சலிப்பாக இருக்கிறதா? அப்படியானால், உங்கள் சமையலறையில் சற்றே புதுமையாகவும் சத்தானதாகவும் ஒரு டிபனை தயார் செய்யலாம். உங்கள் வீட்டில் ஓட்ஸ் இருக்கிறதா? அதையும், சிறிது பசலைக்கீரையும் சேர்த்தால், உடனே 15 நிமிடத்தில் சூப்பரான “ஓட்ஸ் பசலைக்கீரை பணியாரம்” ரெடியாகும்! பசலைக்கீரின் சத்து, ஓட்ஸின் நன்மை, காய்கறிகளின் கலவை— குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் இந்த ஹெல்தி டிபன், தேங்காய் சட்னி அல்லது கார சட்னியுடன் நன்றாகச் சேரும். தேவையான பொருட்கள்: ஓட்ஸ் பொட்டுக்கடலை அரிசி மாவு தயிர் பசலைக்கீரை பச்சை மிளகாய் கொத்தமல்லி இஞ்சி வெங்காயம் கார்ன் பட்டாணி கேரட் நெய் கடுகு உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு செய்முறை: ஓட்ஸ், பொட்டுக்கடலை, தயிர், பசலைக்கீரை உள்ளிட்டவற்றுடன் தண்ணீர் சேர்த்து…

Read More

தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக வலம் வந்து பாடகர், நடிகர், இயக்குநர் என பல பரினாமங்கள் எடுத்தவர் விஜய் ஆண்டனி. தமிழ் சினிமாவில் ராப் இசையை கலந்தவர் இவர். இவரது பல பாடல்களின் சில வரிகள் யாருக்குமே புரியாத வகையில் இருக்கும். அது தான் அவரது ஸ்பெஷல். அது எதனால் என அவரது பாடலிலேயே கேள்வி கேட்கப்பட்டு அதில் பதிலும் சொல்லப்பட்டு இருக்கிறது. கன்னியாகுமரி மாவடம் நாகர்கோவிலை சேர்ந்தவர் விஜய் ஆண்டனி. சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்தவர், தானே ஆடியோ பைல்ஸ் என்ற ஒலியரங்கை அமைத்து, ஒலி பொறியாளராக பணியாற்றி வந்தார். தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரங்கள், ஆவணப்படங்கள் என சில ஜிங்கில்ஸ் அமைத்தார். தொடர்ந்து சில தொலைக்காட்சி தொடர்களுக்கும் இசையமைத்தார் விஜய் ஆண்டனி. சன் டிவியில் ஒளிப்பரப்பான ’சின்ன பாப்பா, பெரிய பாப்பா’, 2006-ம் ஆண்டு வெளியான ’கனா காணும் காலங்கள்’, 2007-ம் ஆண்டு ’காதலிக்க நேரமில்லை’ போன்ற…

Read More

“உலக அளவில் இருந்து அகதிகளை வரவேற்க இந்தியா ஒரு சத்திரமல்ல” எனக் கூறி இலங்கைத் தமிழரின் மனுவை நிராகரித்துள்ளது உச்சநீதிமன்றம். பார்ப்பதற்கு சிறப்பான தீர்ப்பு போல தோன்றலாம்.. ஆனால் ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்று மத்திய அரசைப் போல் உச்சநீதிமன்றமும் பார்ப்பது வேதனை அளிக்கிறது. சீனாவில் 1959-ல் புரட்சி ஏற்பட்ட போது 14-வது தலாய்லாமா உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான திபெத்தியர்கள் இந்தியாவில் அடைக்கலம் தேடி வந்தனர். அப்போது பிரதமராக இருந்த பண்டித ஜவஹர்லால் நேரு, இமாச்சலப்பிரதேசத்தின் தர்மசாலா என்ற நகரத்தையே ஒதுக்கித் தந்தார். நாடுகடந்த அரசாங்கத்தை அமைத்துக் கொள்ளவும் அனுமதி அளித்தார். கர்நாடகாவின் பைலுகுப்பே, முண்ட்கோடு, டெல்லியில் மஜ்னு-கா-தில்லி ஆகிய இடங்களில் அதிக அளவில் திபெத்தியர்கள் குடியேறினர். தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் உதகை, கொடைக்கானல் ஆகிய இடங்களிலும் திபெத்தியர்களை நீடக்தற்போது வரை இந்தியாவில் ஏறத்தாழ ஒரு லட்சம் திபெத்தியர்கள் வசிக்கின்றனர். இதுபோதாதென்று 1950 முதல் 1987-க்கு இடையில் இந்தியாவில்…

Read More

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு அவசரகால மேலாண்மை மற்றும் காவிரியில் நீர்ப்பாசனத்திற்கான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முக்கிய அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, ராமச்சந்திரன், சேகர் பாபு, சிவசங்கர், பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முக்கிய அதிகாரிகள் முருகானந்தம் (தலைமைச் செயலாளர்), சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், டிஜிபி சங்கர் ஜீவால், அமுதா ஐஏஎஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  அலுவலர்கள் மற்றும் அமைச்சர்களிடம் முதல்வர் கூறியதாவது, “மாவட்ட ஆட்சியர்கள் தங்களது பணிகளில் முழுமையாக தயாராக இருக்க வேண்டும். கடலோர மாவட்டங்கள் புயல் மற்றும் கனமழையால் நேரிடும் பாதிப்புகளை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை இப்போது துவங்க வேண்டும்.” என்றும், அவசர செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், “இந்த பருவமழையில் இயல்பான மழை…

Read More

உலக அளவில் இருந்து அகதிகளை வரவேற்க இந்தியா ஒரு சத்திரமல்ல எனக் கூறி இலங்கைத் தமிழரின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம். சட்டவிரோத தடுப்பு காவலில் தமிழ்நாடு கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் சுபாஷ்கரன் என பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கடந்த 2018ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தண்டனையை ரத்து செய்யக்கோரிய அவரது மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த சுபாஷ்கரனின் சிறை தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்தது. மேலும் தண்டனை காலம் முடிவடைந்ததும் அவர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இலங்கை தமிழரான சுபாஷ்கரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,” இவர் ஒரு…

Read More

சாம்சங் நிறுவனத்தின் பணி நீக்கம் செய்யப்பட்ட 23 தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க அரசு அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் சாம்சங் நிறுவனம் இதில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பணி பாதுகாப்பு ஊதிய உயர்வு தொழிற்சங்கம் அமைக்க வேண்டும் என்று பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் . அது தொடர்ந்து அரசின் சார்பில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது தொடர்ந்து போராடும் கைவிடப்பட்டது . இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 25க்கும் மேற்பட்ட ஊழியர்களை சாம்சங் நிறுவனம் பணிநீக்கம் செய்ததால் அவர்களை மீண்டும் பணி வேண்டும் என்று சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர் . தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி.வி கணேசன் தலைமையில் சாம்சங் நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள்…

Read More

கல்லூரி மாணவியை திருமணம் செய்த திமுக நிர்வாகி ஒருவர், திமுக பிரமுகர்களுக்கு தன்னை இரையாக்க முயற்சிப்பதாக அம்மாணவி பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். திரைப்பட பாணியில் நடந்துள்ள இச்சம்பவம் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த10-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ் பிறந்தநாள் விழா அரக்கோணத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ ரவியை, நட்டநடு சாலையில் சந்தித்த மாணவி, தனக்கு நீதி பெற்றுத் தரவேண்டும் எனக் கூறி கண்ணீர் விட்டுள்ளார். இது தொடர்பாக அப்பெண் கொடுத்த மனுவில், ”அரக்கோணம் காவனூர் பகுதியை சேர்ந்த தெய்வசாயல் என்பவர் திமுக ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளராக உள்ளார். ஏற்கனவே திருமணமான அவர், தன்னை காதலிப்பதாக ஏமாற்றி கடந்த ஜனவரி 31-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். 2…

Read More