Author: Editor TN Talks
மின் தடையால் பாதிக்கப்பட்ட நீட் தேர்வு மாணவர்களுக்கு மறு- தேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4ம் தேதி நடத்தப்பட்டது. ஆவடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுதினர். பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் 2.45 மணிக்கு துவங்கிய கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின் தடை ஏற்பட்டதால் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை எனக் கூறி, மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரி, திருவள்ளூரை சேர்ந்த சாய் ப்ரியா, காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரிஹரன் மற்றும் ராணிப்பேட்டையை சேர்ந்த அக்ஷயா உள்ளிட்ட 13 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், மின் தடை காரணமாக குறைவான வெளிச்சத்தில்…
ருமேனியாவில் நடைபெற்ற ‘சூப்பர்பெட் கிளாசிக் செஸ்’ தொடரில் இந்தியாவின் ‘பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம்’ வென்று அசத்தி உள்ளார். செஸ் உலகில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர் பிரக்ஞானந்தா. புகரெஸ்ட் நகரில் நடைபெற்று வந்த இந்த தொடரில் இந்தியாவின் சார்பில் டி.குகேஷ், பிரக்ஞானந்தா உட்பட பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். தொடக்கம் முதலே பிரக்ஞானந்தா சிறப்பாக விளையாடினார். அதேப் போல மற்ற வீரர்களான அலிரேசா பிருஸ்ஜா, மாக்சிம் வச்சியர்-லாக்ரேவ் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 3 பேரும் 9 சுற்றுகள் முடிந்த பின்னர் 5.5 புள்ளிகள் எடுத்து இருந்ததால், வெற்றியாளரை தேர்வு செய்ய டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற இறுதிச்சுற்றில் மாக்சிம் வச்சியர்-லக்ரேவை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார். அவருக்கு கோப்பையுடன் ரூ.65 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது. இந்த தொடரில் டி.குகேஷ் 6வது இடம்பிடித்தார். சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலரும் வாழ்த்துகளை…
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில், பொருளாதார குற்றப் பிரிவுக்கு எதிராக நடிகர் ஆர்.கே.சுரேஷ் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிக வட்டி தருவதாக கூறி, சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம், 2,438 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக, ஆருத்ரா நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் உள்பட 21 பேருக்கு எதிராக பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் இந்த மோசடியில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஒபிசி பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பிருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து, ஆர்.கே.சுரேஷின் எட்டு வங்கிக் கணக்குகளை முடக்கம் செய்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டனர். வங்கிக் கணக்குகள் முடக்கத்தை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், வழக்கு எண்ணின்…
டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டி அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், அதில் தொடர்புடைய தொழிலதிபர் ரத்தீஷ் என்பவர் தலைமறைவாகி உள்ளார். டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான வழக்குகளை பதிவு செய்தது. இதில் சட்டவிரோத பணபரிமாற்றமும் அடக்கம். இதன்பேரில் கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டர். 2 நாட்கள் நடைபெற்ற சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பணியிட மாற்றம், பார் உரிமம், மதுபானங்களின் விலையை 10 ரூபாய் கூடுதலாக விற்பது, குறிப்பிட்ட நிறுவனங்களிடம் மட்டும் அதிகம் கொள்முதல் செய்வது போன்றவற்றால் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டியது. டாஸ்மாக்கில் நடத்தப்பட்ட சோதனை சட்டவிரோதம் என்று அறிவிக்கக்…
இயக்குநர் இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், நிஹாரிகா, வைபவ், சாந்தினி, சுனில் உட்பட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ’பெருசு’. 18+ காமெடி திரைப்படமாக உருவாகியிருந்தது இப்படம். பாக்ஸ் ஆபிசில் பின்னடைவை சந்தித்தாலும் கூட, விமர்சன ரீதியாக இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடித்திருந்த நிஹாரிகா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் உடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் ’மிஷன்-இம்பாசிபிள் தி பைனல் ரெக்கனிங்’ படத்தின் பிரீமியர் ஷோவில் நிஹாரிகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் டாம் குரூஸுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நிஹாரிகா அதனை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ”கனவில் கூட இப்படி நடக்கும் என்று நினைக்க தைரியம் இல்லாத எனக்கு, அதனை சாத்தியப்படுத்தியதற்கு நன்றி” என பதிவிட்டுள்ளார் நிஹாரிகா.
நேற்று (16) மாலை காங்கேசன் துறைமுகத்தில் 4 கிலோ குஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் இந்தியாவில் இருந்து நாகபட்டினம் துறைமுகம் வழியாக கப்பலில் போதைப்பொருளை கடத்தி வந்துள்ளார். அவரை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து அதிகாரிகள் கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் போதைப்பொருள் போலீஸ் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது காங்கேசன்துறைமுக போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். விசாரணைக்கு பிறகு அந்நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்படவுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் 1.80லட்சத்திற்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றனர். நாள்தோறும் இந்த தெருநாய்கள் சாலையில் விளையாடும் சிறுவர்கள் முதல் நடமாடும் முதியவர்கள் வரை கடித்து காயம் ஏற்படுத்துகிறது. இதனை தடுக்கும் பொருட்டு சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேப் போல சென்னை மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளாலும், நாள்தோறும் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். சாலையில் நடந்து செல்பவர்களை சில நேரம் முட்டி விடுவதாலும், சாலையின் குறுக்கே திடீரென செல்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், சென்னை திருவொற்றியூர் பெரியார் நகர் பழைய கிணறு தெருவை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவர் மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இரவு 8 மணிக்கு பணியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில்வீடு திரும்பும் போது, மணலி எம் ஜி ஆர் நகர் அருகில் சாலையில் குறுக்கே வந்த எருமை மாடு அவரது…
வட இந்தியாவின் மிகப்பெரிய தேசியப் பூங்காக்களில் ஒன்று ரந்தம்பூர் தேசிய பூங்கா. ராஜஸ்தான் மாநிலம் சவார் மாதோபூர் மாவட்டத்திலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலும், ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 180 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது இந்த பூங்கா. ரந்தம்பூர் காடானது 1,334 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலானது. இங்கு அதிகளவு ராயல் பெங்கால் புலிகள் வசித்து வருவது தனிச்சிறப்பு. சுற்றுலாப் பயணிகளை காடுகளுக்குள் சஃபாரி அழைத்துச் செல்வர் வனத்துறையினர். இயற்கையின் அழகில் புலிகளை நேரடியாக பார்கும் அனுபவத்தை அனுபவிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர். அந்த வகையில் இந்தப் பூங்காவிற்கு வருகை தந்த நபர் ஒருவர் பூங்காவில் இருந்த புலிக் குட்டிகளை தொட்டு பார்த்து அவைகளுடன் விளையாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. ஒரு தேசியப் பூங்காவில் பயணிகளின் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்ற பல்வேறு கேள்விகளை எழுப்பியது இந்த சம்பவம். அதேப் போல புலிகளின்…
ஹரியானாவை சேர்ந்த தடகள வீரரான நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதலில் சர்வதேச களத்தில் சிறந்து விளங்கி வருகிறார். 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற 2020 ஒலிம்பிக் போட்டியில் 87.58மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றவர் நீரஜ் சோப்ரா. அதனை தொடர்ந்து சர்வதேச விளையாட்டுத் திருவிழாவுக்கான 33-வது ஒலிம்பிக் போட்டி கடந்தாண்டு பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் நடைபெற்றது. 206 நாடுகளை சேர்ந்த 10,700 வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றிருந்தனர். ஈட்டி எறிதலில் பங்கேற்றிருந்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, 89.45 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரரை, அவரும் தன்னுடைய மகன் தான் என்று நீரஜ் சோப்ராவின் தாய் கூறியிருந்தது அப்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அத்தோடு பெங்களூருவில் நடைபெற்ற ஈட்டி எறிதல் தொடருக்காக அவர் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமை அழைத்திருந்தார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் விரருடன்…
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் ட்ரைலர் தான் என்றும் இனிமேல் தான் படமே இருப்பதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் புஜ் விமானப்படை தளத்திற்கு சென்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப் படை வீரர்களை சந்தித்து பாகிஸ்தான் உடனான தாக்குதலில் சிறப்பாக செயல்பட்டதற்கு பாராரட்டு தெரிவித்தார். பின்னர் பேசிய ராஜ்நாத் சிங், இந்தியா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் 14 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளதாக குற்றம்சாட்டினார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை முழுமையாக அழிக்கும் வரை இந்தியா ஓயாது என்றும் அவர் தெரிவித்தார். சர்வதேச செலாவணி நிதியம் கொடுத்த நிதியை பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் வழங்கி உள்ளதாகவும், நிதி கொடுப்பதை பரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்திய ராணுவ வீரர்களின் கண்காணிப்பின் கீழ் நமது எல்லைகள் பாதுகாப்பாக உள்ளதாகவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை…