Close Menu
    What's Hot

    முதல்ல கரப்பான் பூச்சி.. இப்போ ‘பிராய்லர் கோழி’..!! வங்கதேசத்தில் உருவான புதிய கட்சி..!!

    எங்களுக்கு இனி ஒப்பந்தம் தேவையில்லை; அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்திலிருந்து ஈரான் விலகல்!

    மேகேதாது விவகாரம்: ஓசூருடன் நிறுத்தப்பட்ட தமிழக பேருந்துகள்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»ஈட்டி எறிதலில் புதிய சாதனை… நீரஜ் சோப்ராக்கு குவியும் பாராட்டு…
    விளையாட்டு

    ஈட்டி எறிதலில் புதிய சாதனை… நீரஜ் சோப்ராக்கு குவியும் பாராட்டு…

    Editor TN TalksBy Editor TN TalksMay 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    neeraj
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஹரியானாவை சேர்ந்த தடகள வீரரான நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதலில் சர்வதேச களத்தில் சிறந்து விளங்கி வருகிறார். 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற 2020 ஒலிம்பிக் போட்டியில் 87.58மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றவர் நீரஜ் சோப்ரா. அதனை தொடர்ந்து சர்வதேச விளையாட்டுத் திருவிழாவுக்கான 33-வது ஒலிம்பிக் போட்டி கடந்தாண்டு பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் நடைபெற்றது. 206 நாடுகளை சேர்ந்த 10,700 வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றிருந்தனர்.

    nee

    ஈட்டி எறிதலில் பங்கேற்றிருந்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, 89.45 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரரை, அவரும் தன்னுடைய மகன் தான் என்று நீரஜ் சோப்ராவின் தாய் கூறியிருந்தது அப்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அத்தோடு பெங்களூருவில் நடைபெற்ற ஈட்டி எறிதல் தொடருக்காக அவர் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமை அழைத்திருந்தார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் விரருடன் நட்புடன் இருப்பதாக நீரஜ் சோப்ராவை நெட்டிசன்கள் விளாச தொடங்கினர். இது தொடர்பாக அவர் விளக்கமும் அளித்திருந்தார்.

    இந்த நிலையில், ஈட்டி எறிதலில் தனது சாதனையை அவரே முறியடித்து அசத்தியுள்ளார். தோஹா டயமண்ட் லீக் தொடரில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, புதிய சாதனை படைத்துள்ளார். ஆண்டர்சன் பீட்டர்ஸ் மற்றும் ஜூலியன் வெபர் உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த விரர்களுடன் போட்டியிட்ட சோப்ரா, தனது மூன்றாவது எறிதலின் போது முதல் முறையாக 90 மீட்டரை தாண்டி முன்னிலை வகித்தார்.

    ne

    இந்தத் தொடரில் ஜெர்மனியின் ஜூலியன் வெபர் இறுதியில் 91.06 மீட்டர் தூரம் எறிந்து முதலிடத்தை பெற்றார். நீரஜ் சோப்ரா 90.20மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடத்தை பெற்றிருந்தாலும், அவரது செயல்திறன் விளையாட்டில் உலகளாவிய போட்டியாளராக அவரது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. நீரஜ்ஜின் இந்த சாதனைக்கு பிரதமர் மோடி உட்பட பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“ஆபரேஷன் சிந்தூர்” வெறும் ட்ரைலர் தான்’; இனிதான் படமே’.!
    Next Article புலிக்குட்டியை தொட்டுப் பார்த்தது குத்தமா? இளைஞர் மீது பாய்ந்தது வழக்கு…
    Editor TN Talks

    Related Posts

    உலகக்கோப்பை கனவு!. ஸ்பெயினுடன் மோதப் போவது யார்?. 24 ஆண்டுகளுக்கு பின் ஒரு வரலாற்று சந்திப்பு!

    July 15, 2026

    ஃபிஃபா உலகக்கோப்பை: 2வது அரையிறுதியில் அர்ஜென்டினா- இங்கிலாந்து இன்று மோதல்!

    July 15, 2026

    ஃபிஃபா உலகக் கோப்பை: பிரான்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின்!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்ல கரப்பான் பூச்சி.. இப்போ ‘பிராய்லர் கோழி’..!! வங்கதேசத்தில் உருவான புதிய கட்சி..!!

    எங்களுக்கு இனி ஒப்பந்தம் தேவையில்லை; அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்திலிருந்து ஈரான் விலகல்!

    மேகேதாது விவகாரம்: ஓசூருடன் நிறுத்தப்பட்ட தமிழக பேருந்துகள்

    முதல்வர் விஜய்யை சந்திக்க காரணம் இதுதான்..!! கேரள உள்துறை அமைச்சர் பரபரப்பு பேட்டி..!!

    சொத்துக்காக இப்படியா?. பார்வையற்ற தாயை எட்டி உதைத்த மகனின் கொடூர செயல்!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.