Author: Editor TN Talks
ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியை முன்னிட்டு குரு ஸ்தலங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். நவக்கிரகங்களில் சுப கிரகம் என அழைக்கப்படும் குரு பகவான், ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வு குருபெயர்ச்சியாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மே 11ம் தேதி பிற்பகல் 1.19 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி அடைந்தார். இதனை முன்னிட்டு, குரு பரிகார ஸ்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஸ்ரீ ஆபத்சகாயேசுவரர் ஆலயத்தின் மூலஸ்தான பிரகாரத்தில் எழுந்தருளி உள்ள குரு பகவானுக்கு சிறப்பு ஹோமங்களும், அபிஷேக ஆராதனையும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து வழிபட்டனர். தஞ்சாவூர் அருகே உள்ள திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் சுவாமி மற்றும் அம்மனுக்கு இடையே தனி சந்நிதியில் தனி விமானத்துடன்…
ஆபரேஷன் சிந்தூர் என்பது ஒரு ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் மன உறுதியின் அடையாளம் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியா- ரஷ்யா கூட்டு ஒத்துழைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகள் இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களின் முக்கிய தூணாக உள்ளது. 2018ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்தின் ஒரு பகுதியாக லக்னோவில் பிரமோஸ் ஏவுகணை தயாரிக்கும் புதிய அலகு திறக்கப்படும் என அறிவித்தார். அதன்படி 2021ல் அடிக்கல் நாட்டப்பட்டநிலையில், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பிரமோஸ் ஏவகணை உற்பத்திக்கான புதிய அலகு இன்று திறந்து வைக்கப்பட்டது. இதனை டெல்லியில் இருந்து வீடியோ கான்பிரன்சிங் மூலம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவின் பெருமை என்றார். நமது விஞ்ஞானிகள் மற்றும்…
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறினால் அதற்கான பதிலடி மிகவும் பேரழிவு தரக்கூடியதாகவும், வலுவானதாகவும் இருக்கும் என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை துவங்கி பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. இதனால் போர் பதற்றம் ஏற்பட்டநிலையில், முக்கிய திருப்பமாக, இந்தியா- பாகிஸ்தான் இடையே சனிக்கிழமை மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால் அதற்கான பதிலடி மிகவும் பேரழிவு தரக்கூடியதாகவும், வலுவானதாகவும் இருக்கும் என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்சிடம் பேசிய பிரதமர் மோடி இதனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போர் நிறுத்தம் ஏற்பட்ட இரவு 26 இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும் இதற்கு தக்க…
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் தெரிவித்துள்ளார். பஹல்காம் சம்பவத்துக்கு பதிலடியாக நடத்தப்பட்ட இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, லெப்டினண்ட் ஜெனரல் ராஜீவ், வைஸ் அட்மிரல் பிரமோத், மேஜர் ஜெனரல் ஷர்தா ஆகியோர் கூட்டாக இணைந்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். பயங்கரவாதிகளையும், பயங்கரவாத முகாம்களையும் அழிக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் குறிப்பிட்டார். 9 பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்திய ராணுவத்தின் தாக்குதலில் யூசுப் அசார், அப்துல் மாலிக் ராப் மற்றும் விமான கடத்தல், புல்வாமா தாக்குதலுக்கு காரணமான முதாசிர் அஹமது உள்ளிட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் ஜெனரல் ராஜீவ் குறிப்பிட்டார். பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் குறித்து இந்திய…
பத்மஸ்ரீ விருது பெற்ற வேளாண் விஞ்ஞானி சுப்பண்ணா அய்யப்பன் (70) மாண்டியாவில் உள்ள காவிரி ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானியான சுப்பண்ணா அய்யப்பனுக்கு கடந்த 2022ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. மைசூரு விஸ்வேவரய்யா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் விஞ்ஞானி சுப்பண்ணா அய்யப்பன் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்தநிலையில், கடந்த 7ம் தேதி முதல் சுப்பண்ணா அய்யப்பனை காணவில்லை என குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மாண்டியாவில் உள்ள காவிரி ஆற்றில் சுப்பண்ணா அய்யப்பன், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சுப்பண்ணா அய்யப்பன் சடலத்தை கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் சுப்பண்ணா அய்யப்பன் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், தற்கொலைக்கான காரணம் என்ன என்பது…
இந்தியா – பாகிஸ்தான் போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ள போதிலும் ராஜீய விவகாரங்களில் பல்வேறு கேள்விகளை இது உண்டாக்கி உள்ளது. போருக்கான மூலகாரணம்… கடந்த 40 ஆண்டுகளாக இந்தியா – பாகிஸ்தான் இடையே ஜம்மு காஷ்மீரை மையமாக வைத்து ஏராளமான ஊடுருவல் முயற்சிகள் நடந்துள்ளன. அவை சிறிய சண்டைகளாகவும், உயிர் பலிகளும் கூட ஏற்பட்டுள்ளன. ஆனால் அவை எல்லாமே தீவிரவாத குழுக்களால், ராணுவ நிலைகளை குறிவைத்து நடத்தப்பட்டவை. எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இது வழக்கமான ஒன்றுதான் என்ற நிலைக்கு இரு நாடுகளுமே கூட வந்து விட்டன. ஆனால் பெஹல்காம் தாக்குதல் அப்படியல்ல. வேண்டுமென்றே பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல். அதாவது இந்தியா, ஆத்திரப்பட வேண்டும், எல்லை தாண்டி நாட்டுக்குள் வந்து தாக்குதல் நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் போன்று காணப்பட்டது. இதற்கு தோதாகவே சிறிய தீவிரவாத குழு ஒன்றை சில ஆண்டுகளாக வளர்த்து அதனை வைத்து இந்த…
கள்ளழகருக்கு கோலாகல வரவேற்பு… புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வைகையாற்றில் எழுந்தரும் நிகழ்ச்சிக்காக அழகர்கோயிலில் இருந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடமணிந்து புறப்பட்டு, மதுரை நகருக்கு வருகை தந்துள்ளார். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் விசேஷ வாகனங்கள் சுவாமி மற்றும் அம்மாள் எழுந்தருளி மாசி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கடந்த 6ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 8ம் தேதி மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 9ம் தேதி திருத்தேரோட்டமும் விமர்சையாக நடைபெற்றது. இந்தநிலையில், புகழ்பெற்ற மதுரை அழகர்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 8ம் தேதி தொடங்கியது. மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக 10ம் தேதி மாலை சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடமணிந்து தங்கப்பல்லக்கில் மதுரை மாநகர் நோக்கி புறப்பட்டார். வழியெங்கும் அமைக்கப்பட்டுள்ள மண்டகபடிகளில் எழுந்தருளும் கள்ளழகர் பக்தர்களுக்கு…
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்து பயணம் செய்யப்போகும் குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு எட்டு, 10 மற்றும் 12ஆம் வீடுகளின் மீது விழுகிறது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். தொழில் ஸ்தானத்தை குரு பகவான் பார்வையிடுவதால் நல்ல வேலை கிடைக்கும். இது யோகமான குரு பெயர்ச்சியாக உள்ளது. அதிர்ஷ்ட மழையில் நனையப்போகிறீர்கள்.
உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து பயணம் செய்யும் குரு பகவான் உங்கள் ராசியை பார்வையிடுகிறார், குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் குபேர யோகம் தேடி வரப்போகிறது. வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரும். புதிய கௌரவப் பதவிகள் தேடி வரும்.
குரு பகவான் ருண ரோக சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் பயணம் செய்வதால் நோய்கள் நீங்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் அரசு வேலையில் இருப்பவர்களுக்கு கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். புரமோசனும் சம்பவ உயர்வும் கிடைக்கும். பணவருமானம் அபரிமிதமாக இருக்கும். `குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடு, பத்தாம் வீடு, 12ஆம் வீட்டினை பார்வையிடுகிறார். சுப காரியங்கள் கை கூடி வரும். சுப விரையங்கள் ஏற்படும்.