Author: Editor TN Talks
திண்டுக்கல்லில் சினிமா பாணியில் இருசக்கர வாகனங்களை திருடிச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல்லில் தொடர்ந்து ஹீரோ ஸ்பிளெண்டர் வகை இருசக்கர வாகனங்கள் திருடு போனதாக வடக்கு காவல்நிலையத்தில் புகார்கள் வந்துள்ளது. தொடர் புகார்களை தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக தனிப்படை போலீசார் இருசக்கர வாகனங்கள் திருடு போன இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளைக் கொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது வத்தலகுண்டு, தெற்கு தெரு பகுதியை சேர்ந்த சூரிய பிரகாஷ் (வயது 35) என்பது தெரியவந்தது. பின் திண்டுக்கல் சைபர் கிரைம் காவலர்கள் உதவியுடன் தனிப்படையினர் சூரிய பிரகாஷை கைது செய்தனர். மேலும் அவர் திருடிய 4 ஹீரோ ஸ்பிளெண்டர் வகை இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது. பின் சூரிய பிரகாஷை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அதன் பின் பிரதமர் மோடியை தனியே சந்தித்து பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி நிதியை உடனே விடுவிக்கமாறு வலியுறுத்தியதாகவும், அதனை மத்திய அரசு தரும் என நம்புவதாகவும் தெரிவித்திருந்தார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள த.வெ.க தலைவர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில், மாநிலத்தை ஆளுகின்ற ஊழல் கபடதாரி தி.மு.க. அரசியல் எதிரி என்றும், மத்தியத்தை ஆளுகின்ற பிளவுவாத பா.ஜ.க. கொள்கை எதிரி ன்றும் தீர்க்கமாக அறிவித்திருந்தோம். ஆட்சியில் இருக்கும் இவ்விரு கட்சிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து சுட்டிக் காட்டியும் வருகிறோம். அ.தி.மு.க. பா.ஜ.க. இடையே பழைய கூட்டணி மீண்டும் புதுப்பிக்கப்பட்ட போதே தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் உள்ள மறைமுகக் கூட்டணி பற்றியும் நாம் தெரிவித்திருந்தோம். அதே போல், ஊழல் செய்தவர் மீது நடவடிக்கை பாயும்போது. உடனடியாக அவர் டெல்லிக்குப் பயணம்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குடும்ப விழாவில் கலந்து கொள்வதற்காக இணை அமைச்சர் எல்.முருகன் கோவை வந்தடைந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”இன்றைக்கு தமிழ்நாட்டில், ஒரு பினாமிகளின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருப்பதாக குற்றம்சாட்டினார்”. ”தமிழ்நாட்டினுடைய ஆட்சியை நடத்துவது முதலமைச்சரா அல்லது இந்த தம்பிகளா ? என்பது பொதுமக்கள் இடத்தில் ஒரு பெரிய கேள்விக்குறி? இருந்து கொண்டு இருக்கிறது. முதலில் இந்த தம்பிகள் யார்? இவர்களுக்கு அதிகாரத்தை கொடுத்தது யார்? அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு போடும் அளவுக்கு ஒரு அதிகாரம் மிக்கவர்களாக அவர்கள் எந்த தைரியத்தில் வலம் வருகிறார்கள்? அதிகாரிகளுக்கு கட்டளை இடும் அளவிற்கு ஒரு பவர் சென்டராக இருந்து ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்”. ”தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் இருக்கிறதா ? என்பதை மறந்து விட, இன்றைக்கு இந்த தம்பிகள் தமிழகத்தை சுரண்டி கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் உடைய…
தென்மேற்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2 தினங்களுக்கும் மேலாக இரு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். இதற்கிடையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், கோவை வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் ஏற தற்காலிக தடை விதிக்கப்பட்டது. மறுஅறிவிப்பு வரும் வரை பக்தர்கள் மலைக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியிருந்தது. மேலும், பரளிக்காடு, பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலா தலங்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வெள்ளியங்கிரி மலை ஏறிய இரண்டு பக்தர்கள் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 7 வது மலையில் காரைக்கால் பகுதியை சேர்ந்த கௌசல்யா என்பவரும், 5-வது மலையில் ஒருவரும் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் வெள்ளியங்கிரி மலையேறி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது. இருவரின் உடல்களையும் டொலி தூக்கும்…
நான்கு நாடுகளுக்கான மகளிர் ஹாக்கி தொடரில் இந்திய அணி, சிலி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது. ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு தயாராகும் விதமாக இந்திய மகளிர் அணி இந்த நான்கு நாடுகள் ஹாக்கி தொடரில் விளையாடி வருகிறது. அர்ஜெண்டினா, உருகுவே, சிலி மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகள் பங்கேற்கும் இந்தத் தொடர் இன்று (மே 25) தொடங்கி ஜூன் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. அர்ஜெண்டினாவின் ரொசாரியோ நகரில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் சிலி அணிகள் மோதின. போட்டியின் 20-வது நிமிடத்தில் சிலியின் ஜாவேரியா சாயின்ஸ் கோல் அடித்து அந்த அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார். இருப்பினும், இந்திய வீராங்கனை சுக்வீர் கவுர் 39-வது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி…
அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்தே முதலமைச்சர் ஸ்டாலின் தில்லி சென்றதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைக்குப் பயந்தே நேற்றைய நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார். கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தால், நிதியைக் கேட்டுப் பெற்றிருக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, மோதியின் தமிழக வருகையின்போது கருப்பு பலூன் விட்டதாகவும், ஆளுங்கட்சியான பிறகு வெள்ளைக்குடை பிடிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். தமிழகத்தில் சிறுமிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத அவல ஆட்சி நடந்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
கேரளாவில் கொச்சி துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த லைபீரியா நாட்டைச் சேர்ந்த கண்டெய்னர் கப்பல் ஒன்று எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கியது. விழிஞ்ஞத்தில் இருந்து பெட்ரோலிய பொருட்களை ஏற்றிக்கொண்டு கொச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த சரக்குக் கப்பல், கொச்சியிலிருந்து தென்மேற்கு திசையில் சுமார் 38 மைல் தொலைவில் வந்தபோது திடீரென ஒருபக்கம் சாய்ந்து மூழ்கத் தொடங்கியது. உடனடியாக கப்பல் நிர்வாகம் உதவி கோரியதை அடுத்து, இந்திய கடலோர காவல்படை மீட்புப் பணிக்காக இரண்டு கப்பல்களையும், ஒரு ராணுவ ஹெலிகாப்டரையும் விரைந்து அனுப்பியது. கப்பலில் இருந்த 24 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனிடையே, கப்பலில் இருந்து கசிந்த ரசாயனப் பொருட்கள் காரணமாக அப்பகுதி ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், கரை ஒதுங்கியுள்ள எந்தப் பொருட்களையும் பொதுமக்கள் தொட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியப் படைகளின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் புதிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று ஒலிபரப்பான மனதின் குரல் நிகழ்ச்சியில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியப் படையினர் வெளிப்படுத்திய வீரமும், துல்லிய தாக்குதலும் இந்தியர்களைப் பெருமிதம் கொள்ளச் செய்துள்ளதாக அவர் கூறினார். மக்களுடன் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளும் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 122-வது பதிப்பு இன்று ஒலிபரப்பானது. அதில் பிரதமர் நரேந்திர மோடி கூறிய முக்கிய அம்சங்கள்: பயங்கரவாதத்திற்கு எதிராக நாடு முழுவதும் ஒன்றுபட்டு உறுதியோடு உள்ளது. பயங்கரவாதத்தை ஒழிப்பதுதான் அனைத்து இந்தியர்களின் உறுதிப்பாடு. ஆபரேஷன் சிந்தூரின் துல்லியம், தீவிர தாக்குதல் ஆகியவை எல்லை தாண்டிய பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களை அழித்து ஒழித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் ஒரு ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, இது மாறிவரும் இந்தியாவின் காட்சியாக அனைவரது மனதிலும் தேசபக்தி உணர்வை ஊட்டியுள்ளது. நாட்டின்…
கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் இன்று (மே 25) தொடங்கியது. ஜூன் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தத் தொடரில் உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களும் வீராங்கனைகளும் சாம்பியன் பட்டத்திற்காக மோதவுள்ளனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. 22 வயதான அவர் இந்த ஆண்டில் களிமண் தரை ஆடுகளத்தில் விளையாடிய 16 போட்டிகளில் 15-ல் வெற்றி பெற்று சிறப்பான ஃபார்மில் உள்ளார். இவருக்கு உலகின் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் கடும் சவால் அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 18 மாதங்களாக டென்னிஸ் உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஜன்னிக் சின்னர், ஊக்க மருந்து சர்ச்சைக்குப் பிறகு சமீபத்தில் களத்திற்குத் திரும்பினார். சமீபத்தில் நடைபெற்ற இத்தாலி ஓபன் தொடரின் கால் இறுதிப் போட்டியில் அவர்…
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதி கனமழை வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும் (மே 25) நாளையும் (மே 26) அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. இதன் காரணமாக இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தென் தமிழக மாவட்டங்களான திருநெல்வேலி, தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக கடலோர…