Author: Editor TN Talks

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை காரணமாக லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர். இலவச தரிசன டோக்கன்கள் இல்லாமல் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளனர். அதனால், வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள அறைகள் அனைத்தும் நிரம்பி அதற்கு வெளியே சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவு வரை பக்தர்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் சுமார் 20 மணி நேரம் காத்திருந்தால் மட்டுமே ஏழுமலையானை வழிபட முடியும் என்ற நிலை நிலவுகிறது. திருப்பதி மலையில் தங்கும் அறைகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இருப்பதால் ஏராளமான பக்தர்களுக்கு அறைகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை…

Read More

அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த கண்டராதீர்த்தம் கிராமத்தை சேர்ந்தவர் வேதியராஜ். இவரது மகள் லாராக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேதியராஜ் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த வேதியராஜை பார்ப்பதற்காக அவரது மனைவி மற்றும் மகள் லாரா ஆகியோர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று (22.05.2025) அதிகாலை சுமார் 5 மணியளவில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவறைக்கு லாராவும், அவரது தாயும் சென்றனர். அங்கு லாரா மட்டும் கழிவறைக்குள் சென்ற நிலையில், அவரது தாய் வெளியில் நின்றுள்ளார். கழிவறைக்கு சென்ற லாரா அங்கேயே 3 மணி நேரம் இருந்துள்ளார். அப்போது தனக்குத்தானே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பின்னர் அந்த குழந்தையை கழிவறையின் கோப்பையில் தலை உள்ளே செல்லுமாறு அழுத்தியுள்ளார்.…

Read More

டாடா குழுமத்தின் LCC நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், செப்டம்பர் 2023-இல் தனது உள்நாட்டு விமான சேவைகளைத் தொடங்கியது. இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 111 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதே போல் தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கு குறுகிய தூர சர்வதேச விமானங்களையும் இயக்குகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தென்னிந்தியாவில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் விமான சேவைகளைத் தொடங்கியுள்ளது. ஆனால் தென்னிந்தியாவின் 7வது பெரிய விமான நிலையமான கோயம்புத்தூருக்கு இன்னும் விமான சேவைகளைத் தொடங்கவில்லை. 100 மற்றும் அதற்கு மேற்பட்ட விமானங்களைக் கொண்ட இந்தியாவின் முதல் விமான நிறுவனத்திற்கான சாதனையையும் AIXகொண்டுள்ளது. ஆனால் இன்னும் கோயம்புத்தூருடன் இணைக்கப்படவில்லை. கோயம்புத்தூரில் உள்ள சங்கங்கள், உள்நாட்டு மற்றும் குறுகிய தூர சர்வதேச சேவைகளில், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரத்திற்கு சேவைகளைத் தொடங்க ஏர் இந்தியா எக்ஸ்பிரஸை பலமுறை கேட்டுக் கொண்டிருந்தன. கோயம்புத்தூரில் இருந்து சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூருக்கு…

Read More

அதிமுக முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 30 ஆம் தேதி குண்டு வெடிப்பு நடத்தபட உள்ளதாகவும், அதில் உங்களை கொலை செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டு, கோவை காளப்பட்டி பகுதியில் இருந்து கடிதம் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் குறிப்பிட்ட இடத்தில் ரூ.1கோடி பணத்தை வைக்கவேண்டும், இல்லை என்றால் மூன்று மாதத்தில் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை கொலை செய்ய உள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து கோவை புறநகர் மாவட்ட கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தாமோதரன் தலைமையில் மாவட்ட காவல் ஆணையாளரிடம் புகாரளிக்கப்பட்டது.

Read More

திருப்பதி திருமலையில் இந்து மத வழிபாடு தவிர மற்ற மதங்கள் தொடர்பான வழிபாடுகள், செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு முழு தடை அமலில் உள்ளது. இந்த நிலையில் திருமலையில் உள்ள மெகா கல்யாண மண்டபத்தில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவர் நமாஸ் செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அந்த நபரை தேடி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துகின்றனர்.

Read More

மத்திய கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 12 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலை தெற்கு கொங்கன் மற்றும் கோவா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடல் பரப்புகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழையுடன் தொடங்கிய கத்தரி வெயில், தற்போது சுட்டெரிக்கும் வெப்பமாக மாறியுள்ளது. கடந்த மே 16 முதல் லேசான மழை தொடர்ச்சியாக பெய்து வந்த நிலையில், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பதிவாகி வெப்ப நிலை சற்று குறைந்துள்ளது. இதற்கிடையில், தென்மேற்கு பருவமழை பொதுவாக மே 27-ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அது சில நாட்கள் முன்னதாகவே – அதாவது மே 25-க்குள் தொடங்கும் சாத்தியம் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடக்கத்தில் இது…

Read More

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகத்திற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 40 வது கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது, காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் நீர் இருப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கர்நாடகா காவிரியில் இருந்து தரவேண்டிய நீர் விவகாரம் மற்றும் நீர்த்திறப்பு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதையும் படிக்க: இனி இந்தியாவின் பதிலடி பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்- பிரதமர் மோடி கூட்டத்தின் முடிவில் தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் திறந்து விட வேண்டிய 9.19 டி.எம்.சி தண்ணீர், ஜூலை மாதத்திற்கான 31.24 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டுமென கர்நாடகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Read More

இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து டெல்லி செல்கிறார்.  நாளை பிரதமர் மோடி தலைமையில் 10 வது நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் முதல்வர்களும் கலந்து கொள்ள அழைப்பதில் விடுக்கப்பட்டுள்ளது இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று காலை 9:30 மணி அளவில் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் சென்று டெல்லி செல்ல உள்ளார். பிற்பகல் 12. 50 மணிக்கு டெல்லி செல்லும் முதலமைச்சருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு அளிக்க உள்ளனர் அதனை தொடர்ந்து முதலமைச்சர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார். தொடர்ந்து நாளை காலை எட்டு முப்பது மணி அளவில் தமிழ்நாடு இல்லத்திலிருந்து புறப்பட்டு ஒன்பது மணிக்கு பாரத் மண்டபம் சென்று…

Read More

மாஸ்கோ விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் காரணமாக கனிமொழி கருணாநிதி எம்.பி பயணித்த விமானம், தரையிறங்க முடியாமல், வானில் சிறிது நேரம் வட்டமடித்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த மே 7ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டது. இதற்கிடையே, பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து வெளிநாடுகளுக்கு விவரிக்கும் வகையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை ஒன்றிய அரசு அறிவித்தது. இந்த நிலையில், கனிமொழி கருணாநிதி தலைமையிலான எம்.பி-க்கள் குழு நேற்று ரஷ்யாவுக்குப் புறப்பட்டனர். இந்த நிலையில், நள்ளிரவில் மாஸ்கோ விமான நிலையத்தில் ட்ரோன்கள் ஏவப்பட்ட தாக்குதல்கள் நடைபெற்றது. இதனால், சில நேரம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் தற்காலிகமாக…

Read More