Close Menu
    What's Hot

    கெத்து காட்டும் பிரதமர் நரேந்திர மோடி..!! நேருவின் சாதனை முறியடிப்பு..!!

    கறுப்பர் இனவெறியா?. சோமாலிய நடுவரை நாட்டை விட்டு விரட்டிய அமெரிக்கா!. வெடித்த சர்ச்சை!

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்புமனு ஆவணங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் ஆர்டர்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தனக்குத் தானே பிரசவம்.. குழந்தையை கழிவறையில் அழுத்தி கொன்ற தாய்…
    தமிழ்நாடு

    தனக்குத் தானே பிரசவம்.. குழந்தையை கழிவறையில் அழுத்தி கொன்ற தாய்…

    Editor TN TalksBy Editor TN TalksMay 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    8 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த கண்டராதீர்த்தம் கிராமத்தை சேர்ந்தவர் வேதியராஜ். இவரது மகள் லாராக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேதியராஜ் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த வேதியராஜை பார்ப்பதற்காக அவரது மனைவி மற்றும் மகள் லாரா ஆகியோர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று (22.05.2025) அதிகாலை சுமார் 5 மணியளவில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவறைக்கு லாராவும், அவரது தாயும் சென்றனர். அங்கு லாரா மட்டும் கழிவறைக்குள் சென்ற நிலையில், அவரது தாய் வெளியில் நின்றுள்ளார். கழிவறைக்கு சென்ற லாரா அங்கேயே 3 மணி நேரம் இருந்துள்ளார். அப்போது தனக்குத்தானே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பின்னர் அந்த குழந்தையை கழிவறையின் கோப்பையில் தலை உள்ளே செல்லுமாறு அழுத்தியுள்ளார்.

    9 1

    இதில் அந்த குழந்தையின் உடல் முழுவதும் உள்ளே செல்லாமல் கால்கள் மட்டும் வெளியில் நீட்டிக்கொண்டு இருந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக மருத்துவமனையில் வேலை செய்யும் பெண் தூய்மை பணியாளர் ஒருவர் கழிவறைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வித்தியாசமான சத்தம் கேட்டதால் அவர் சந்தேகம் அடைந்து, மருத்துவமனையில் பணியில் இருந்த போலீசார் மற்றும் ஊழியர்களிடம் இதுபற்றி தெரிவித்தார்.

    இதனால் அங்கு கூட்டம் திரண்டது. பின்னர் கதவை திறந்து பார்த்தபோது கழிவறை கோப்பையினுள் திணித்த நிலையில், குழந்தை இறந்து கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அரியலூர் நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கழிவறை கோப்பையை உடைத்து குழந்தையின் சடலத்தை வெளியில் எடுத்தனர். உடனடியாக பிரேத பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர்.

    10

    இதற்கிடையே லாரா அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்ற நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை பிடித்தனர். தற்போது லாரா அரியலூர் பழைய அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக அரியலூர் நகர போலீசார், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், குழந்தையை கொன்றதற்கான காரணம் என்ன?, அவர் கர்ப்பமடைய யார் காரணம்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவையில் ஏர் இந்தியா விமான சேவை எப்போது? வலுக்கும் கோரிக்கைகள்…
    Next Article திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 20 மணி நேரம்… 7கி.மீ நீள வரிசையில் பக்தர்கள்..
    Editor TN Talks

    Related Posts

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்புமனு ஆவணங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் ஆர்டர்..!!

    June 10, 2026

    இனி கேட்குமா இந்த “என் இனிய தமிழ் மக்களே”…?? இயக்குநர்கள் டி.ராஜேந்தர், சேரன் இரங்கல்..!!

    June 10, 2026

    ”காலத்தால் அழியாத காவிய நாயகன்” – பாரதிராஜாவிற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் புகழஞ்சலி!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கெத்து காட்டும் பிரதமர் நரேந்திர மோடி..!! நேருவின் சாதனை முறியடிப்பு..!!

    கறுப்பர் இனவெறியா?. சோமாலிய நடுவரை நாட்டை விட்டு விரட்டிய அமெரிக்கா!. வெடித்த சர்ச்சை!

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்புமனு ஆவணங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் ஆர்டர்..!!

    இனி கேட்குமா இந்த “என் இனிய தமிழ் மக்களே”…?? இயக்குநர்கள் டி.ராஜேந்தர், சேரன் இரங்கல்..!!

    ”காலத்தால் அழியாத காவிய நாயகன்” – பாரதிராஜாவிற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் புகழஞ்சலி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.