Author: Editor TN Talks
இன்று 7.5% இட ஒதுக்கீட்டை தான் தான் கொண்டு வந்ததைப் போல மக்களிடம் பொய்யான பிரச்சாரத்தை ஸ்டாலின் மேற்கொண்டு வருவதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறியுள்ளார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மேற்கு ஒன்றியத்துக்கு உடபட்ட முள்ளிப்பாடி, தாமரைப்பாடி,பெரிய கோட்டை ஊராட்சி மற்றும் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் சிலுவத்தூர் சாலையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் ஏற்பாட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் அதிமுக பொருளாளரமான திண்டுக்கல் சீனிவாசன்,கழக அமைப்புச் செயலாளர் ஆசைமணி ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன், “இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலையில் அண்ணா திமுக காலத்தில் கொண்டு வந்த பல்வேறு நல்ல திட்டங்களை இன்று ஸ்டாலின் அவர்கள் ஸ்டிக்கர் அவர்கள் கொண்டு வந்ததைப் போல ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.உதாரணமாக அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயிலும் வகையில்…
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களை 8 மண்டலங்களாக பிரித்து மண்டல பொறுப்பாளர்கள் நியமித்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆ ராசா, தங்கம் தென்னரசு, கனிமொழி சக்கரபாணி, செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மண்டல பொறுப்பாளர்களாக பணியாற்றி வருகின்றனர். திமுக எம்எல்ஏக்களின் செயல்பாடுகள், தொகுதிகளில் கட்சியில் உள்ள கோஷ்டி பூசல் உள்ளதா? அரசின் திட்டங்கள் பொதுமக்களிடம் எந்த அளவுக்கு சென்று சேர்ந்துள்ளது,இன்னும் பொதுமக்களிடம் சென்று சேராத திட்டங்கள் என்னென்ன? உள்ளிட்ட கேள்விகள் அடங்கிய விண்ணப்ப படிவங்களை நிர்வாகிகளிடம் கொடுத்து நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்து வருகின்றனர். இதையும் படிக்க: பலிவாங்கும் நீட்… பறிபோகும் உயிர்கள்.. How many students died 2025 because of NEET in Tamilnadu? இன்று சென்னை ,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,மாவட்ட சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டத்திலும் நிர்வாகிகளுக்கு விண்ணப்பங்களை ஆ.ராசா வழங்கி உள்ளார். நிர்வாகிகளின் கருத்தைப் பொறுத்து வேட்பாளர் தேர்வு, தேர்தல் பணிகளை மேலும் தீவிரப்படுத்த…
கோவை மாவட்டத்தில் கஞ்சா, போதை பொருட்கள், வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றசம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், வடமாநிலங்களை மிஞ்சும் வகையில் கிரிகெட் சூதாட்டமும் தலைதூக்கி வருவது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கோவை காந்திபுரம் போலிசார் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதை தொடர்ந்து போலிசார் வேறு யாராவது இதுபோன்ற சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்களா? என்று தனிபடை அமைத்து ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் “லீப் புக்” மற்றும் ‘லோட்டஸ்” என்ற வலைதளப்பக்கததை உருவாக்கி அதன்மூலம் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதை போலிசார் கண்டறிந்தனர். அதைதொடர்ந்து ரகசியமாக மேற்கொண்ட விசாரணையில் கோவை சொக்கம்புதூர், அன்னை இந்திரா நகரை சேர்ந்த ராஜகணேஷ் என்பவரை போலிசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.2.25 லட்சம் பணம், சொகுசுக்காரை பறிமுதல் செய்த போலிசார், வேடப்பட்டியில் உள்ள ஹரிஸ்ரீ தோட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான…
கடந்த 19-ம் தேதி அரக்கோணத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அதிமுக எம்.எல்.ஏ ரவியிடம் ஒரு புகார் மனுவை அளித்தார். அதில் திமுகவைச் சேர்ந்த ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் தெய்வசெயல் என்பவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு, திமுக பிரமுகர்களுக்கு விருந்தாக்க நினைப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அத்தோடு இது தொடர்பான புகாரை எந்த ஒரு காவல்நிலையத்திலும் எடுத்துக் கொள்ளாமல் அலைகழிப்பதாகவும் கூறியிருந்தார். இந்த விவகாரம் பூதாகராமன நிலையில், அரக்கோணம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தெய்வசெயல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்கு எதிராக அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய…
கோவை மாநகராட்சியில் அனியாய வரி உயர்வுக்கு எதிராக கம்யூனிட்டுகள், கோவை மாநகராட்சியை திடீர் என்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்களிடையே சந்தேகம். மேலும் போலிசாரை தள்ளிவிட்டு கடுமையாக தாக்குதலில் ஈடுபட்ட “கம்யூனிஸ்டுகள்…. சண்டையில் கிழியாத சட்டையா?” என்ற நடிகர் வடிவேலுவின் காமடியைபோல அப்பாவியாக கம்யூனிஸ்ட்டுகளிடம் அடிவாங்கிய போலிசார்… கடந்த 14 ஆம் தேதி கோவை மாநகராட்சியில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் பொருள் எண் 101 இல் பாதாள சாக்கடைக்கான வைப்புதொகை உயர்வு ரூ,7500 முதல்,80 ஆயிரம் வரை உயர்வு, மேலும் வருடம் 3 % சதவிகிதம் உயர்வு என்று தீர்மானம் நிறைவேற்றம், இந்த உயர்வு 1980 பிறகு இணைப்பு பெற்ற அணைவருக்கும் பொருந்தும் என்றும், அதுபோல் பொருள் எண்:- 102 இல் குடிநீர் இணைப்புகளுக்கான வைப்பு தொகையும், மாதாந்திர கட்டணமும் பல மடங்கு உயர்வு, மேலும் வருடம் 3% சதவிகிதம் உயர்த்தபடும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த இரண்டு பொருள்களின்…
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ரவி மோகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். 2009-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். திடீரென தனது பிரிவு முடிவை அவர் வெளிப்படையாக பொதுவெளியில் கூற, இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது அவருடன் சேர்ந்து வாழவே விரும்புவதாக ஆர்த்தி கூறியிருந்தார். ஆர்த்தி தன்னை மரியாதை குறைவாக நடத்துவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை ரவி முன்வைத்திருந்தார். மேலும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கலும் செய்தார். இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வீட்டு திருமண விழாவில், மனநல மருத்துவரும், பாடகருமான கெனிஷாவுடன் ஜோடியாக கலந்து கொண்டார் ரவிமோகன். அதன்பின் ஒரு அறிக்கையை வெளியிட்டார் ஆர்த்தி. புதிதாக வந்தவர்களுக்காக இத்தனை வருட வாழ்க்கை ரவிக்கு கசந்து விட்டதாக தெரிவித்திருந்தார். அதற்கு பதில் கொடுக்கும் விதமாக ஆர்த்தியின் தாயார் தன் மீது கடன்…
மார்ச் 2 – திண்டிவனம் இந்துமதி மார்ச் 28 – கிளாம்பாக்கம் தர்ஷினி ஏப்ரல் 3 – பெரியமுத்தியம்பட்டி சத்யா ஏப்ரல் 4 – புதுப்பாக்கம் சக்தி புகழ்வாணி மே 20 – சேலம் நரசோதிப்பட்டி கௌதம் நீட் தேர்வுக்கு அஞ்சி இரண்டு மாத காலத்தில் 5 மாணவச் செல்வங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டின் சட்டப்போராட்டங்கள் கடலில் கரைத்த பெருங்காயமாக உள்ளன. மத்திய அரசோ, உயிரைப் போக்கிக் கொள்ளும் மாணவ-மாணவிகளை வெறும் எண்ணிக்கையாக பார்க்கிறது. மருத்துவப் படிப்புதான் பெரிது என்று பிள்ளைகளுக்கு நெருக்கடி கொடுக்கும் பெற்றோரை குறைசொல்வதா? பெரியண்ணன் மனோபாவத்தில் இருக்கும் மத்திய அரசைக் குறை சொல்வதா? கையறு நிலையில் இருக்கும் தமிழக அரசை நொந்து கொள்வதா? கடைசியில் இழப்பு என்னவோ? ஆசை, ஆசையாய் வளர்த்த பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோருக்குத் தான்.
சென்னை மக்களின் பயணத்திற்கு ஏதுவாக மின்சார ரயில் மற்றும் பறக்கும் ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை கடற்கரையில் இருந்து செல்லக் கூடிய மின்சார ரயிலில் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரயிலின் 6-வது பெட்டியில் புகை வந்துள்ளது. இதனால் பல்லாவரம் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. மறுபுறம் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற ரயில் தண்டவாளத்தில் கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கி சென்ற ரயிலும் திருப்பி விடப்பட்டதால், இரண்டு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் வந்து நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பதட்டமடைந்தனர். 30 நிமிடங்களுக்கு மேலாக ரயில் சேவை நிறுத்தப்பட்டு புகை வந்ததற்கான காரணம் குறித்து ரயில்வே பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பிரேக் ஷூவில் ஏற்பட்ட குளறுபடியை சரி செய்து ரயிலை அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்படி பிரிவு வருகே தனபால் என்பவர் டீ கடை நடத்தி வருகிறார். இங்கு நேற்று (20.05.25) இரவு 11 மணி அளவில், அம்பாத்துறையைச் சேர்ந்த சின்னபாண்டி என்பவர் சிகரெட் வாங்கியுள்ளார். அதற்கான பணத்தை கூகுள் பே-ல் செலுத்தியதாக கூறப்படுகிறது. பணம் அனுப்பியது தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக சின்னபாண்டி தனது காரில் இருந்த அரிவாளை எடுத்து தனபாலை தாக்க முற்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கடையின் உரிமையாளர் தனபால், மற்றும் அவரது கடையில் டீ மாஸ்டராக இருந்த முருகேசன் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாழைக்காய் பஜ்ஜி போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த கட்டையை வைத்து தனபால் சின்னபாண்டியை தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்தார். அருகேயிருந்தவர்கள் சின்னபாண்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக சின்னாளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார், சின்னப்பாண்டி எடுத்து வந்த அரிவாள்,…
தமிழ் சினிமாவில் சினிமா பின்புலம் இல்லாமல் அடிமட்டத்திலிருந்து படிபடியாக உயர்ந்த நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. சிறு சிறு வேடங்களில் நடித்து பீட்சா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகானவர், தனது எதார்த்த நடிப்பால் அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். குறிப்பிட்ட வருடங்களில் கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டிற்கும் சென்றுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ”ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” படத்தை ஆறுமுக குமார் என்பவர் இயக்கி இருந்தார். இத்திரைப்படம் பெரிய வரவேற்பு இல்லாமல் சென்ற நிலையில், 5 ஆண்டுகள் கழித்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. விஜய் சேதுபதியின் 51-வது படத்தில் இணைந்த இந்த கூட்டணி, விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தியது. மலேசியாவில் மொத்த படப்பிடிப்பையும் முடித்த படக்குழு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் முழு வீச்சில் செய்தது. ’ஏஸ்’ என பெயரிடப்பட்ட இந்தப் படத்தில், யோகிபாபு, ருக்மிணி…