Author: Editor TN Talks

டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டி அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், அதில் தொடர்புடைய தொழிலதிபர் ரத்தீஷ் என்பவர் தலைமறைவாகி உள்ளார். டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான வழக்குகளை பதிவு செய்தது. இதில் சட்டவிரோத பணபரிமாற்றமும் அடக்கம். இதன்பேரில் கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டர். 2 நாட்கள் நடைபெற்ற சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பணியிட மாற்றம், பார் உரிமம், மதுபானங்களின் விலையை 10 ரூபாய் கூடுதலாக விற்பது, குறிப்பிட்ட நிறுவனங்களிடம் மட்டும் அதிகம் கொள்முதல் செய்வது போன்றவற்றால் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டியது. டாஸ்மாக்கில் நடத்தப்பட்ட சோதனை சட்டவிரோதம் என்று அறிவிக்கக்…

Read More

இயக்குநர் இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், நிஹாரிகா, வைபவ், சாந்தினி, சுனில் உட்பட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ’பெருசு’. 18+ காமெடி திரைப்படமாக உருவாகியிருந்தது இப்படம். பாக்ஸ் ஆபிசில் பின்னடைவை சந்தித்தாலும் கூட, விமர்சன ரீதியாக இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடித்திருந்த நிஹாரிகா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் உடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் ’மிஷன்-இம்பாசிபிள் தி பைனல் ரெக்கனிங்’ படத்தின் பிரீமியர் ஷோவில் நிஹாரிகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் டாம் குரூஸுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நிஹாரிகா அதனை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ”கனவில் கூட இப்படி நடக்கும் என்று நினைக்க தைரியம் இல்லாத எனக்கு, அதனை சாத்தியப்படுத்தியதற்கு நன்றி” என பதிவிட்டுள்ளார் நிஹாரிகா.

Read More

நேற்று (16) மாலை காங்கேசன் துறைமுகத்தில் 4 கிலோ குஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் இந்தியாவில் இருந்து நாகபட்டினம் துறைமுகம் வழியாக கப்பலில் போதைப்பொருளை கடத்தி வந்துள்ளார். அவரை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து அதிகாரிகள் கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் போதைப்பொருள் போலீஸ் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது காங்கேசன்துறைமுக போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். விசாரணைக்கு பிறகு அந்நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்படவுள்ளார்.

Read More

சென்னை மாநகராட்சியில் 1.80லட்சத்திற்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றனர். நாள்தோறும் இந்த தெருநாய்கள் சாலையில் விளையாடும் சிறுவர்கள் முதல் நடமாடும் முதியவர்கள் வரை கடித்து காயம் ஏற்படுத்துகிறது. இதனை தடுக்கும் பொருட்டு சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேப் போல சென்னை மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளாலும், நாள்தோறும் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். சாலையில் நடந்து செல்பவர்களை சில நேரம் முட்டி விடுவதாலும், சாலையின் குறுக்கே திடீரென செல்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், சென்னை திருவொற்றியூர் பெரியார் நகர் பழைய கிணறு தெருவை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவர் மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இரவு 8 மணிக்கு பணியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில்வீடு திரும்பும் போது, மணலி எம் ஜி ஆர் நகர் அருகில் சாலையில் குறுக்கே வந்த எருமை மாடு அவரது…

Read More

வட இந்தியாவின் மிகப்பெரிய தேசியப் பூங்காக்களில் ஒன்று ரந்தம்பூர் தேசிய பூங்கா. ராஜஸ்தான் மாநிலம் சவார் மாதோபூர் மாவட்டத்திலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலும், ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 180 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது இந்த பூங்கா. ரந்தம்பூர் காடானது 1,334 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலானது. இங்கு அதிகளவு ராயல் பெங்கால் புலிகள் வசித்து வருவது தனிச்சிறப்பு. சுற்றுலாப் பயணிகளை காடுகளுக்குள் சஃபாரி அழைத்துச் செல்வர் வனத்துறையினர். இயற்கையின் அழகில் புலிகளை நேரடியாக பார்கும் அனுபவத்தை அனுபவிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர். அந்த வகையில் இந்தப் பூங்காவிற்கு வருகை தந்த நபர் ஒருவர் பூங்காவில் இருந்த புலிக் குட்டிகளை தொட்டு பார்த்து அவைகளுடன் விளையாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. ஒரு தேசியப் பூங்காவில் பயணிகளின் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்ற பல்வேறு கேள்விகளை எழுப்பியது இந்த சம்பவம். அதேப் போல புலிகளின்…

Read More

ஹரியானாவை சேர்ந்த தடகள வீரரான நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதலில் சர்வதேச களத்தில் சிறந்து விளங்கி வருகிறார். 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற 2020 ஒலிம்பிக் போட்டியில் 87.58மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றவர் நீரஜ் சோப்ரா. அதனை தொடர்ந்து சர்வதேச விளையாட்டுத் திருவிழாவுக்கான 33-வது ஒலிம்பிக் போட்டி கடந்தாண்டு பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் நடைபெற்றது. 206 நாடுகளை சேர்ந்த 10,700 வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றிருந்தனர். ஈட்டி எறிதலில் பங்கேற்றிருந்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, 89.45 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரரை, அவரும் தன்னுடைய மகன் தான் என்று நீரஜ் சோப்ராவின் தாய் கூறியிருந்தது அப்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அத்தோடு பெங்களூருவில் நடைபெற்ற ஈட்டி எறிதல் தொடருக்காக அவர் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமை அழைத்திருந்தார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் விரருடன்…

Read More

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் ட்ரைலர் தான் என்றும் இனிமேல் தான் படமே இருப்பதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் புஜ் விமானப்படை தளத்திற்கு சென்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப் படை வீரர்களை சந்தித்து பாகிஸ்தான் உடனான தாக்குதலில் சிறப்பாக செயல்பட்டதற்கு பாராரட்டு தெரிவித்தார். பின்னர் பேசிய ராஜ்நாத் சிங், இந்தியா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் 14 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளதாக குற்றம்சாட்டினார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை முழுமையாக அழிக்கும் வரை இந்தியா ஓயாது என்றும் அவர் தெரிவித்தார். சர்வதேச செலாவணி நிதியம் கொடுத்த நிதியை பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் வழங்கி உள்ளதாகவும், நிதி கொடுப்பதை பரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்திய ராணுவ வீரர்களின் கண்காணிப்பின் கீழ் நமது எல்லைகள் பாதுகாப்பாக உள்ளதாகவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை…

Read More

முறைகேடு வழக்கு தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுக் கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இந்த சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் மற்றும் திமுக அரசு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்த முழு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்நிலையில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விசாகன் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கி கணக்கு பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததாக…

Read More

பாகிஸ்தான் உடனான ஆதரவு நிலைப்பாட்டை கண்டித்து துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகளுடனான வர்த்தக உறவை முழுமையாக புறக்கணிப்பதாக இந்திய வர்த்தகர்கள் அறிவித்துள்ளனர். பஹல்காம் சம்பவத்தை கண்டித்து பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இதில், பாகிஸ்தான் சேதங்களை சந்தித்தது. இந்தநிலையில், பாகிஸ்தான் ராணுவமும் எதிர்த்தாக்குதல் நடத்தியது. இருப்பினும், பாகிஸ்தானின் தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்தது. இந்தநிலையில், பாகிஸ்தான் பயன்படுத்தி ஆயுதங்கள் துருக்கி மற்றும் அஜர்பைஜான் வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு கண்டனங்கள் எழுந்தது. இந்தநிலையில், பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை கண்டித்து துருக்கி, அஜர்பைஜான் நாடுகளை முழுமையாக புறக்கணிப்பதாக இந்திய வர்த்தகர்கள் அறிவித்துள்ளனர். 24க்கும் மேற்பட்ட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த வணிகத் தலைவர்கள் டெல்லியில் கூடி இந்த விவகாரம் குறித்து இறுதி முடிவை எடுத்தனர். கூட்டத்திற்கு பிறகு பேசிய அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால், துருக்கி…

Read More

தமிழ்த் திரையுலகம் உலகிற்கு அளித்த கொடை என்று ஒரு பட்டியலிட்டால் சிவாஜி, இளையராஜா என்ற வரிசையில் கட்டாயம் இடம்பெறும் தகுதி படைத்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் மண்ணின் அசலான நகைச்சுவையை திரையில் லாவகமாக கடத்தியதில் வடிவேலுக்கு இணையென யாரையும் சொல்ல முடியாது. ஆபாச வசனங்கள், இரட்டை அர்த்த வசனங்கள், உடல்ரீதியாக ஒருவரை ஏளனம் செய்வது, மாற்றுத்திறனாளிகளை குறை சொல்வது போன்ற அபத்தங்கள் ஏதுமின்றி தன்னை தாழ்த்தி பிறரை சிரிக்கச் செய்யும் பாணியில் தனித்துவமானவர் வடிவேலு. குடும்பத்துடன் வயது வித்தியாசமின்றி அவரது நகைச்சுவைக்கு சிரிக்க முடியும். நம் வாழ்வின் அபத்தங்களை நகைச்சுவையாக மாற்றுவதில் தான் வடிவேலுவின் மேதமை அடங்கி இருக்கிறது. வெறும் நகைச்சுவை நடிகர் மட்டுமல்லாது குணசித்திர கதாபாத்திரங்களிலும் நம்மில் ஒருவராக வலம் வரும் நடிப்பாற்றல் கொண்டவர். தமிழ் திரையுலகம் பேச ஆரம்பித்த காலத்தில் கதாநாயகர்கள் என்றால் நன்றாக பாடத்தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இப்போதைய கதாநாயகர்களில் எத்தனை பேரால் சிறந்த முறையில் பாட…

Read More