Author: Editor TN Talks
பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் மூலம் இழப்பீடு வழங்கப்பட்ட விவரங்கள் தெரிய வந்து உள்ளன. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட 8 பெண்களில் இருவர் தற்போது இழப்பீடு பெற விண்ணப்பித்து உள்ளனர். முன்னதாக, இந்த வழக்கில் குற்றவாளிகள் அபகரித்த தங்க நகைகள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும், நீதிமன்றம் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தம் 85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, ஒவ்வொரு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. முதல் பெண்ணுக்கு 2 லட்சம், இரண்டாவது பெண்ணுக்கு 15 லட்சம், மூன்றாவது பெண்ணுக்கு 10 லட்சம், நான்காவது பெண்ணுக்கு 10 லட்சம், ஐந்தாவது பெண்ணுக்கு 8 லட்சம், ஏழாவது பெண்ணுக்கு 15 லட்சம், எட்டாவது பெண்ணுக்கு 25 லட்சம் என இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களில்…
பாலிவுட் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட ராஜ் நிதிமோருவுடன் சமந்தா காதலில் இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிய நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து சமந்தாவின் மேனேஜர் விளக்கமளித்துள்ளார். நாட்டையே சலசலப்புக்கு உள்ளாக்கிய வெப் சீரிஸில் ஒன்று ஃபேமிலி மேன். இதனை இயக்கவர்களில் ஒருவர் ராஜ் நிதிமோரு. இந்த சீரிஸில் நடித்தப் போது தான் சமந்தா-நாக சைதன்யா பிரிவும் ஏற்பட்டது. சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பெண்ணான சமந்தா தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு போதிய வாய்ப்புகள் கிடைக்காத போதிலும், தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார். தந்தையின் மறைவு, மயோசிடிஸ் தொற்று ஆகியவற்றில் இருந்து மீண்டு வந்த சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது கிசுகிசுகள் வெளியாவது நின்றபாடில்லை. முதன்முறையாக தயாரிப்பில் களமிறங்கியுள்ள சமந்தா தெலுங்கில் ’சுபம்’ என்ற படத்தை தயாரித்துள்ளார்.…
ராமயாணம், மகாபாரத புராணங்களை நம்மால் நவீன சமூகத்திற்கு ஏற்ப மாற்ற முடியுமா?? அதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்றால்.?? சாதிய படிநிலையை முற்றும் முழுவதுமாக நீக்கிவிட்டு கொடுக்க முடிந்தால் ஒரு வேளை அது சரியாக வரும் என்று தோன்றுகிறது. ஆனால் அதற்கு பார்ப்பனியம் உடன்படுமா ???!என்றாலும் இடைநிலை சாதிகள் அதில் உடன்படுமா?? என்கிற சந்தேகம் இருக்கதான் செய்கிறது. சோற்றுக்கு வழி இல்லையென்றாலும் தங்களை இன்னும் சத்ரியர்கள் என்று பெருமைப் பட்டுக்கொண்டு இருக்கும் சமூகத்திடம் அதை எதிர்பார்க்க முடியுமா ?? சரி விஷயத்திற்கு வருவோம்.. மணிரத்தினம் இயக்கிய “தளபதி “மகாபாரதத்தை மருவி எடுக்கப்பட்டது படம் . கர்ணன் – துரியோதனனை மையப்படுத்தி இருந்தாலும் குந்தியின் கதாபாத்திரத்தை முதன்மை கருவாக இயக்குநர் மணிரத்னம் உலவவிட்டு இருப்பார். இன்னும் சொல்லப்போனால் தாய் செண்டிமெண்டில் உச்சம்! தளபதி படத்தின் ஸ்ரீவித்யா பாத்திரம். அதைப்போல ஓர் பிரதி எடுத்து மகாபாரதத்தின் முதன்மை பாத்திரமான கிருஷ்ணன் பாத்திரத்தை கொண்டு வந்துள்ளார் இயக்குநர்…
தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைக்கிறது. அறிவிப்பு வெளியாகி, திமுகவுக்கு எதிரான இரண்டாம் அணியை உருவாக்கும் முயற்சி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் ஏற்கனவே பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவரும் இருக்கிறார்கள். இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலை இந்த கூட்டணி ஒற்றுமையோடு எதிர்கொள்ளுமா? இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி என மூவரும் பாஜக கூடாரத்தில் இணைகிறார்களா என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளன. அதிமுக – பாஜக கூட்டணி கடந்த 1998-ம் நாடாளுமன்ற தேர்தலில் இருந்து, அதிமுகவும் பாஜகவும் பலமுறை கூட்டணி அமைத்திருக்கின்றன. இடையில் பலமுறை பிரிந்து, இணைந்திருக்கின்றன. கடைசியாக, 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்ததற்கு பின்னால், அதிமுகவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், பாஜகவை அதிமுகவினரும் சரமாரியாக சாடிவந்தனர். இதனால் மீண்டும் பாஜக அதிமுக கூட்டணி அமைய வாய்ப்பே இல்லை கருதப்பட்டது. ஆனால் ஒரேடியாக அதை மாற்றி விடும்படி, கடந்த ஏப்ரல் 10-ம் தேதி…
கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15-ம் தேதி வரை தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித் தேர்வர்கள், 272 சிறை கைதிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதியிருந்தனர். இந்த தேர்வு முடிவுகளை இன்று (16.05.2025) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். அதன்படி இத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் 8 லட்சத்து 17 ஆயிரத்து 261 பேர். இது கிட்டத்தட்ட 93.80சதவீதம் ஆகும். தனித்தேர்வர்களில் சிதம்பரம் அருகே 70 வயது முதியவர் ஒருவரும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார். சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் 70 வயதான கோதண்டராமன். இவர் அதே கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 1965-ம்…
தமிழ்நாட்டில் தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் தற்போது பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சேலத்தை சேர்ந்த பெரும் தொழிலதிபர் பாஸ்கரனின் மகன் இந்த ஆகாஷ் பாஸ்கரன். துணை முதலமைச்சர் உதயநிதியின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் ’கவின்கேர்’ குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் 3-வது மகள் தாரணியை திருமணம் செய்து கொண்டார் ஆகாஷ் பாஸ்கரன். இவர்களது திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி ஆகியோர் முன்நின்று நடத்தி வைத்தனர். அத்தோடு இந்த திருமணத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், தனுஷ், நயன்தாரா, விக்னேஷ் சிவன், ஆர்.ரவிக்குமார், சிவகார்த்திகேயன், அட்லி, அனிரூத் உள்ளிட்ட திரைபிரபலங்களும் கலந்து கொண்டனர். சினிமாவில் தனது முத்திரையை பதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ’DAWN PICTURES’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் ஆகாஷ்…
திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதமான லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஏ ஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் விசாரணைக்கு வந்த போது, நெய் மட்டுமல்லாமல் அனைத்து பால் பொருட்கள் உற்பத்திக்கான உரிமத்தை நிறுத்தி வைத்ததன் மூலம் நிறுவனம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனத்தின் தரப்பில் வாதிடப்பட்டது.…
தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் சூரி. ’வெண்ணிலா கபடிக் குழு’ படத்தில் பரோட்டா சாப்பிடும் காமெடியில் நடித்து பிரபலமடைந்ததால் பரோட்டா சூரி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். தொடர்ந்து ஒரு சில வருடங்களில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார். பின்பு யாரும் எதிர்பாரா வண்ணம் விடுதலை படத்தில் ஹிரோவாக அறிமுகமானார் நடிகர் சூரி. விடுதலை பாகம் ஒன்று மற்றும் இரண்டாம் பாகத்தில் இவரது நடிப்பு மிகவும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ’கொட்டுக் காளி, கருடன்’ போன்ற படங்களிலும் ஹீரோவாக கலக்கினார். அதன்பின் ’விலங்கு’ வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ’மாமன்’ படத்தில் இணைந்தார் சூரி. ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிப்பில் குடும்ப உறவுகளின் மதிப்பை உணர்த்தும் விதமாக உருவான இப்படம் இன்று (16.05.2025)வெளியானது. இப்படம் வெற்றி படமாக வேண்டி மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்தில்…
திரைப்பட எடிட்டர் மோகனுக்கு இரண்டு மகன்கள். அவரின் இரண்டாவது மகன் ரவி மோகன். மூத்த மகன் இயக்குநர் மோகன் ராஜா. மோகன் ரவி என்ற இயற்பெயர் கொண்டவர், லயோலா கல்லூரியில் விஸ்காம் முடித்து விட்டு சிறிது நாட்கள், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவியாளராக பயிற்சி எடுத்துக் கொண்டார். தனது தந்தையின் தயாரிப்பில் 2003-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ம் தேதி வெளியான ”ஜெயம்” என்ற படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார் ரவி. அவரது அண்ணனான மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான இந்தப் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து சினிமா உலகில் ஜெயம் ரவி என புதிய பெயரோடு வலம் வரத் தொடங்கினார். இரண்டாவாதாக அசின், நதியா உடன் இணைந்து ரவி நடித்து ”சன் ஆஃப் மகாலட்சுமி” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதுவும் அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கியது தான். வெங்கட்பிரபு எப்படி தனது தம்பி பிரேம் ஜி-யை…
ஆப்பிள் ஐ-போன்களை தயாரிக்கும் பணி இந்தியாவில் விரைவுப்படுத்தப்பட்டு உள்ளது. எஸ் அண்ட் பி குளோபல் நடத்திய ஆய்வின் படி, கடந்தாண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதியாகும் ஐ-போன்கள் எண்ணிக்கை 3.1 மில்லியன் யூனிட்களாக உள்ளன. அதே ஆண்டில் அமெரிக்காவில் ஐ-போன் விற்பனை 75.9 மில்லியன் யூனிட்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ஜூன் காலாண்டில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் ஐ-போன்களில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்படுபவையாக இருக்கும் என அப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் இந்தியாவில் ஐ-போன்களை தயாரித்து வரும் நிலையில், அதனை நிறுத்தும்படி ஆப்பிள் நிறுவனத்திடம் அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை விமர்சித்து நடிகையும், பாஜக எம்.பி-யுமான கங்கனா ரனாவத் எக்ஸ் தளத்தில் தனது கருத்தை பதிவிட்டிருந்தார். பின்னர் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின்படி அதை நீக்கியதாக கங்கனா தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதிகளவில்…