Close Menu
    What's Hot

    காமன்வெல்த் விளையாட்டு 2026!. இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா போர்ஹோகைன்!

    காஞ்சிபுரம் : ஜனநாயகன் படம் காண வந்த ரசிகர்களுக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி..! அமைச்சர்கள் கொண்டாட்டம்..!

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் புதுச்சேரி வருகை திடீர் ரத்து..!! காரணம் இதுதானாம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»’மாமன்’ படத்திற்காக மண்சோறு… ரசிகர்களால் சூரி வேதனை…
    சினிமா

    ’மாமன்’ படத்திற்காக மண்சோறு… ரசிகர்களால் சூரி வேதனை…

    Editor TN TalksBy Editor TN TalksMay 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    soori 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் சூரி. ’வெண்ணிலா கபடிக் குழு’ படத்தில் பரோட்டா சாப்பிடும் காமெடியில் நடித்து பிரபலமடைந்ததால் பரோட்டா சூரி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். தொடர்ந்து ஒரு சில வருடங்களில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார்.

    soori

    பின்பு யாரும் எதிர்பாரா வண்ணம் விடுதலை படத்தில் ஹிரோவாக அறிமுகமானார் நடிகர் சூரி. விடுதலை பாகம் ஒன்று மற்றும் இரண்டாம் பாகத்தில் இவரது நடிப்பு மிகவும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ’கொட்டுக் காளி, கருடன்’ போன்ற படங்களிலும் ஹீரோவாக கலக்கினார். அதன்பின் ’விலங்கு’ வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ’மாமன்’ படத்தில் இணைந்தார் சூரி. ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிப்பில் குடும்ப உறவுகளின் மதிப்பை உணர்த்தும் விதமாக உருவான இப்படம் இன்று (16.05.2025)வெளியானது.

    soori 1

    இப்படம் வெற்றி படமாக வேண்டி மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்தில் சூரியின் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு வேண்டுதல் மேற்கொண்டனர். சூரியின் பெயரில் சிறப்பு அர்ச்சனையும் நடத்தினர். “மாமன் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். ரசிகர்கள் இந்த படத்தை தியேட்டரில் கொண்டாட வேண்டும் என்ற வேண்டுதலுக்காக இந்த செயலை செய்ததாகவும், இனி வரும் சூரியின் அனைத்து படங்களுக்கும் இதுபோன்று வேண்டுதல் செய்ய உள்ளதாகவும் அவரது ரசிகர்கள் கூறினர்.

    soori 2

    இந்த நிலையில் சென்னை கமலா திரையரங்கில் ரசிகர்களுடன் தனது படத்தை பார்த்து ரசித்த நடிகர் சூரி, பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மதுரையில் மண் சோறு சாப்பிட்டவர்களை தம்பிகள் என்று சொல்வதற்கே எனக்கு வெட்கமாக உள்ளது.தம்பிகளா, இது ரொம்ப முட்டாள்தனமானது. படம் நன்றாக இருந்தால், கதை நன்றாக இருந்தால் அந்த படம் ஓடும். அதை விட்டு விட்டு மண்சோறு சாப்பிட்டால் படம் எப்படி எடுத்தாலும் ஓடி விடுமா என்ன? மிகவும் வேதனையாக இருக்கிறது. அந்த பணத்திற்கு 4 பேருக்கு தண்ணீர், மோர், உணவு வாங்கி கொடுத்திருக்கலாம். இது போன்ற செயலை செய்பவர்கள் எனது ரசிகர்களாக இருக்கக் கூட தகுதியற்றவர்கள்” என கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜெயம் முதல் கெனிஷா வரை… சர்ச்சையில் இருந்து மீளுவாரா ரவி மோகன்?
    Next Article திருப்பதி லட்டு சர்ச்சை…
    Editor TN Talks

    Related Posts

    செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு..!! காரணம் என்ன?

    July 23, 2026

    நாடே போராடுது..!! இந்த நேரத்துல இது வேண்டாம்..!! ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்!

    July 23, 2026

    5 ஆண்டுகள் மட்டுமல்ல காலகாலத்திற்கும் தளபதி தான் முதல்வர்..!! நடிகர் ஜெய் நெகிழ்ச்சி பேச்சு..!!

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காமன்வெல்த் விளையாட்டு 2026!. இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா போர்ஹோகைன்!

    காஞ்சிபுரம் : ஜனநாயகன் படம் காண வந்த ரசிகர்களுக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி..! அமைச்சர்கள் கொண்டாட்டம்..!

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் புதுச்சேரி வருகை திடீர் ரத்து..!! காரணம் இதுதானாம்..!!

    மாணவர்கள் நலனில் சமரசமா? வாய்ப்பே இல்ல..!! நயினார் நாகேந்திரன் உறுதி..!!

    அடுத்த லாக்-அப் மரணம்?. போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் உயிரிழப்பு!. உறவினர்கள் போராட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.