Author: Editor TN Talks
மத்திய கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 12 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலை தெற்கு கொங்கன் மற்றும் கோவா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடல் பரப்புகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழையுடன் தொடங்கிய கத்தரி வெயில், தற்போது சுட்டெரிக்கும் வெப்பமாக மாறியுள்ளது. கடந்த மே 16 முதல் லேசான மழை தொடர்ச்சியாக பெய்து வந்த நிலையில், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பதிவாகி வெப்ப நிலை சற்று குறைந்துள்ளது. இதற்கிடையில், தென்மேற்கு பருவமழை பொதுவாக மே 27-ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அது சில நாட்கள் முன்னதாகவே – அதாவது மே 25-க்குள் தொடங்கும் சாத்தியம் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடக்கத்தில் இது…
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகத்திற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 40 வது கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது, காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் நீர் இருப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கர்நாடகா காவிரியில் இருந்து தரவேண்டிய நீர் விவகாரம் மற்றும் நீர்த்திறப்பு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதையும் படிக்க: இனி இந்தியாவின் பதிலடி பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்- பிரதமர் மோடி கூட்டத்தின் முடிவில் தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் திறந்து விட வேண்டிய 9.19 டி.எம்.சி தண்ணீர், ஜூலை மாதத்திற்கான 31.24 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டுமென கர்நாடகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து டெல்லி செல்கிறார். நாளை பிரதமர் மோடி தலைமையில் 10 வது நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் முதல்வர்களும் கலந்து கொள்ள அழைப்பதில் விடுக்கப்பட்டுள்ளது இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று காலை 9:30 மணி அளவில் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் சென்று டெல்லி செல்ல உள்ளார். பிற்பகல் 12. 50 மணிக்கு டெல்லி செல்லும் முதலமைச்சருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு அளிக்க உள்ளனர் அதனை தொடர்ந்து முதலமைச்சர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார். தொடர்ந்து நாளை காலை எட்டு முப்பது மணி அளவில் தமிழ்நாடு இல்லத்திலிருந்து புறப்பட்டு ஒன்பது மணிக்கு பாரத் மண்டபம் சென்று…
மாஸ்கோ விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் காரணமாக கனிமொழி கருணாநிதி எம்.பி பயணித்த விமானம், தரையிறங்க முடியாமல், வானில் சிறிது நேரம் வட்டமடித்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த மே 7ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டது. இதற்கிடையே, பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து வெளிநாடுகளுக்கு விவரிக்கும் வகையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை ஒன்றிய அரசு அறிவித்தது. இந்த நிலையில், கனிமொழி கருணாநிதி தலைமையிலான எம்.பி-க்கள் குழு நேற்று ரஷ்யாவுக்குப் புறப்பட்டனர். இந்த நிலையில், நள்ளிரவில் மாஸ்கோ விமான நிலையத்தில் ட்ரோன்கள் ஏவப்பட்ட தாக்குதல்கள் நடைபெற்றது. இதனால், சில நேரம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் தற்காலிகமாக…
கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வைஷ்ணவி திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். கடந்த மே 3 ம் தேதி த.வெ.க வில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, சமூக பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். பதவிக்கு ஆசைப்படாமல், மக்களுக்கு உதவுவதே தனது நோக்கமாக வைத்துக் கொண்டு செயல்பட்டு வந்ததாகவும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார். பல்வேறு கட்சிகளிடம் இருந்து அழைப்புகள் வந்த போதும், எந்தவொரு தவறான முடிவையும் எடுக்காமல், நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு தி.மு.க வின் வளர்ச்சி பணிக்கே தன்னையும் குடும்பத்தையும் அர்ப்பணிக்க முடிவெடுத்ததாக அவர் தெரிவித்தார். தி.மு.க வின் வளர்ச்சியும், மு.க. ஸ்டாலின் அவர்கள் வழிநடத்தும் சமூகநல அரசியலும் தான் தேர்வு செய்யக் காரணமாக அமைந்ததாகவும் கூறி உள்ளார். தி.மு.க வில் தனது அம்மா கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்ததையும், தன்னுடைய அரசியல் பயணத்திற்கு உறுதுணையாக இருந்ததையும்,சமூக ஊடகங்களில் சிலர் மேற்கொண்ட தரக்குறைவான விமர்சனங்களும் தன்னையும், குடும்பத்தையும் பாதித்து உள்ளதாகவும் அவர்…
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வைஷ்ணவி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இன்று அதிகாரப் பூர்வமாக இணைந்தார். கடந்த மே 3 ம் தேதி த.வெ.க வில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, சமூக பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். பதவிக்கு ஆசைப்படாமல், மக்களுக்கு உதவுவதே தனது நோக்கமாக வைத்துக் கொண்டு செயல்பட்டு வந்ததையும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார். பல்வேறு கட்சிகளிடம் இருந்து அழைப்புகள் வந்த போதும், எந்தவொரு தவறான முடிவையும் எடுக்காமல், நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு தி.மு.க வின் வளர்ச்சி பணிக்கே தன்னையும் குடும்பத்தையும் அர்ப்பணிக்க முடிவெடுத்ததாக அவர் தெரிவித்தார். தி.மு.க வின் வளர்ச்சியும், மு.க. ஸ்டாலின் அவர்கள் வழிநடத்தும் சமூக நல அரசியலும் தான் தேர்வு செய்யக் காரணமாக அமைந்ததாகவும் கூறி உள்ளார். தி.மு.க வில் தனது அம்மா கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்ததையும், தன்னுடைய அரசியல் பயணத்திற்கு உறுதுணையாக இருந்ததையும்,சமூக ஊடகங்களில் சிலர் மேற்கொண்ட தரக்குறைவான விமர்சனங்களும்…
இங்கிலாந்துக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டுள்ளார். 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஜூன் 24 முதல் ஜூலை 23 வரை பயிற்சி ஆட்டம் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. 2025-ன் 18வது ஐபிஎல் தொடர் முடிந்தவுடன், இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஜூன் 20 முதல் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. அதே மாதத்தில், 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியும் இங்கிலாந்து செல்ல உள்ளது. இதையடுத்து இந்திய ஜூனியர் அணியை பிசிசிஐ இன்று (மே 22) அறிவித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் மும்பையை சேர்ந்த ஆயுஷ் மாத்ரே 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான சிறப்பாக விளையாடி வரும் சூர்யவன்ஷி-யும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய…
அமெரிக்காவில் வெறுப்புக்கும், பயங்கரவாதத்திற்கும் இடமில்லை என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில், யூத அருங்காட்சியத்திற்கு அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இஸ்ரேல் தூதரகத்தை சேர்ந்த 2 அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை பாலஸ்தீன ஆதரவு நபர் நிகழ்த்தியதாக கூறப்படும் கருத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், யூத எதிர்ப்பு பயங்கரவாதம் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் வெறுப்புக்கும், பயங்கரவாதத்திற்கும் இடமில்லை என்று கூறியுள்ள அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆறுதலை தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனை அளிப்பதாகவும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.