Author: Editor TN Talks

கள்ளழகருக்கு கோலாகல வரவேற்பு… புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வைகையாற்றில் எழுந்தரும் நிகழ்ச்சிக்காக அழகர்கோயிலில் இருந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடமணிந்து புறப்பட்டு, மதுரை நகருக்கு வருகை தந்துள்ளார். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் விசேஷ வாகனங்கள் சுவாமி மற்றும் அம்மாள் எழுந்தருளி மாசி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கடந்த 6ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 8ம் தேதி மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 9ம் தேதி திருத்தேரோட்டமும் விமர்சையாக நடைபெற்றது. இந்தநிலையில், புகழ்பெற்ற மதுரை அழகர்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 8ம் தேதி தொடங்கியது. மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக 10ம் தேதி மாலை சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடமணிந்து தங்கப்பல்லக்கில் மதுரை மாநகர் நோக்கி புறப்பட்டார். வழியெங்கும் அமைக்கப்பட்டுள்ள மண்டகபடிகளில் எழுந்தருளும் கள்ளழகர் பக்தர்களுக்கு…

Read More

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்து பயணம் செய்யப்போகும் குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு எட்டு, 10 மற்றும் 12ஆம் வீடுகளின் மீது விழுகிறது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். தொழில் ஸ்தானத்தை குரு பகவான் பார்வையிடுவதால் நல்ல வேலை கிடைக்கும். இது யோகமான குரு பெயர்ச்சியாக உள்ளது. அதிர்ஷ்ட மழையில் நனையப்போகிறீர்கள்.

Read More

உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து பயணம் செய்யும் குரு பகவான் உங்கள் ராசியை பார்வையிடுகிறார், குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் குபேர யோகம் தேடி வரப்போகிறது. வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரும். புதிய கௌரவப் பதவிகள் தேடி வரும்.

Read More

குரு பகவான் ருண ரோக சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் பயணம் செய்வதால் நோய்கள் நீங்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் அரசு வேலையில் இருப்பவர்களுக்கு கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். புரமோசனும் சம்பவ உயர்வும் கிடைக்கும். பணவருமானம் அபரிமிதமாக இருக்கும். `குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடு, பத்தாம் வீடு, 12ஆம் வீட்டினை பார்வையிடுகிறார். சுப காரியங்கள் கை கூடி வரும். சுப விரையங்கள் ஏற்படும்.

Read More

உங்கள் ராசிக்கு 7ஆம் வீடான களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து பயணம் செய்யப்போகும் உங்கள் ராசி நாதன் குரு பகவானால் தொட்டது துலங்கும். குருவின் அருள் பார்வை உங்களுக்கு நேரடியாக கிடைக்கிறது. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குரு பார்வையால் நன்மைகள் அதிகம் நடைபெறும். வேலையில் புரமோசன் கிடைக்கும். சம்பள உயர்வும் அதிகம் கிடைக்கும்.

Read More

குரு பெயர்ச்சியால் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. எட்டாம் வீட்டில் பயணம் செய்யப்போகும் குரு பகவானால் விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. குருவின் அருள் பார்வையால் உங்களுக்கு சுப விரைய செலவுகள் ஏற்படும். வேலை விசயத்தில் சில பிரச்சினைகள் வரலாம் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம்.

Read More

ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்யும் குரு பகவான் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப்போகிறார். குருவின் பார்வை உங்களுக்கு சகலவிதமான நன்மைகளையும் தரப்போகிறது. படிப்பில் இருந்த தடைகள் விலகும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணமழையில் நனையப்போகிறீர்கள்.

Read More

தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் பயணம் செய்யும் குருவினால் புதிய பதவிகள் தேடி வரும். நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரும். குருவின் பொன்னான பார்வையால் வீடு நிலம் வாங்கலாம். புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். பதவி யோகத்தை தரப்போகிறார் குரு பகவான்.

Read More

லாப ஸ்தானத்தில் வந்து அமரும் குரு பகவான் ராஜாதி ராஜயோகத்தை தரப்போகிறார். குருவின் பார்வையால் வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சிலருக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். வெற்றி மேல் வெற்றி தேடி வரும். மன நிம்மதியும் சந்தோஷமும் தரக்கூடிய குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது.

Read More

குரு பகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12ஆவது வீட்டில் அமரப்போவதால் விரைய செலவுகளை சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். குரு பகவானின் பார்வையால் உங்களுடைய தொழில் வியாபாரத்தில் இருந்த சுணக்க நிலை மாறும் பணம் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நோய்கள் நீங்கும். எதிரிகள் விசயத்தில் கவனம் தேவை. பணத்தை கடனாக கொடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.

Read More