Author: Editor TN Talks

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்குபவர் ரவிமோகன். ஜெயம் படத்தில் தனது திரைவாழ்வை தொடங்கிய அவர் அதன் காரணமாகவே ஜெயம் ரவி என அழைக்கப்பட்டார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது பெயரை ரவிமோகன் என மாற்றிக் கொண்டார். திரைப்படங்களில் வெற்றிநாயகனாக வலம்வந்த அவரது சொந்த வாழ்க்கையில் புயல் வீசியது. 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவருடன் ரவிக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆரவ் மற்றும் ஆயான் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மகிழ்ச்சிகரமாக சென்று கொண்டிருந்த அவர்களின் வாழ்வினில் சில வருடங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு தனது மனைவியை பிரிவதாக ரவி மோகன் அறிவித்தார். இந்நிலையில் கெனிஷா என்ற நடனக்கலைஞருடன் ரவி மோகன் இணைந்து வாழ்வதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு தகுந்தார்போல் அவரும் பொதுநிகழ்ச்சிகளில் சமீபமாக கெனிஷாவுடன் தென்பட்டார். இதுகுறித்து ஆர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இரண்டு பிள்ளைகளின் தகப்பன் என்பதை ரவிமோகன் மறுக்க முடியாது…

Read More

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நகைச்சுவை நடிகர் என்றால் அது வைகைப் புயல் வடிவேலு தான். தனது எதார்த்தமான பாடி லேங்குவேஜுடன் கூடிய நகைச்சுவை நடிப்பால் நம்மை கவர்ந்த வடிவேலு சமீப காலமாக வருடத்திற்கு ஒரு படம் என்று நடித்து வருகிறார். ஹீரோவுடன் நகைச்சுவை நடிகர்கள் இணைந்து கொடுக்கும் நகைச்சுவை காட்சிகள் என்றென்றும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடிக்கும். அப்படி வடிவேலு இயக்குநர் சுந்தர்.சி-உடன் இணைந்து நடித்திருந்த ’தலைநகரம்’ திரைப்படத்தில், இருவரின் நகைச்சுவை காட்சிகள் இன்று வரையிலும் ஒரு மாஸ்டர் பீஸ். அதேப் போல 2010-ம் ஆண்டு இருவரது நடிப்புல் வெளியான ’நகரம் மறுபக்கம்’ திரைப்படத்தில் வரக் கூடிய நகைச்சுவை காட்சிகளும் இன்று வரை பிரபலம். சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடித்த அனைத்துப் படங்களுமே நகைச்சுவைக்கு பிரபலம் தான். அப்படியிருக்க கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் இருவரும் சேராமல் இருந்து வந்தனர். 14 வருடங்கள் கழித்து இருவரும் ’கேங்கர்ஸ்’…

Read More

கர்நாடகாவில் 14 வயது சிறுவனை 12 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தை சேர்ந்த நண்பர்களான 14 வயது மற்றும் 12 வயது சிறுவர்கள் இருவரும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் 8 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இருவரும் ரூ.5 மதிப்புள்ள தின்பண்டத்தை கடையில் வாங்கி சாப்பிட்டுள்ளனர். தின்பண்டத்தை பகிர்ந்து கொள்வதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கைகலப்பாகி இருவரும் உருண்டு பிரண்டு சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த 12வயது சிறுவன், கத்தியை எடுத்து வந்து 14 வயது சிறுவனை சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடியுள்ளான். ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் குறித்து…

Read More

உலகப் பிரசித்தி பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127 வது மலர் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். மலர் கண்காட்சிக்காக 1.75 லட்சம் ரோஜா, கார்ப்பரேஷன், கிரைசாந்தி உள்ளிட்ட மலர்களைக் கொண்டு பிரம்மாண்டமான ராஜா சோழன் அரண்மனை, அரண்மனை நுழைவாயில், ராஜா சிம்மாசனம், அன்னப் பறவை, யானை, புலி உள்ளிட்ட 24 மலர் சிற்ப வடிவமைப்புகளை பார்வையிட்டு வருகிறார். இதில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சரும், நீலகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான மு.பெ சாமிநாதன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, தமிழக அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Read More

டிக்டாக் மற்றும் யூடியூப் மூலம் பிரபலமானவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி என்ற கிராமத்தில் சராசரியான குடும்பத்தை சேர்ந்தவர் ஜி.பி.முத்து. தனது யதார்த்த வட்டார வழக்கின் பேச்சால் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதன் மூலம் சினிமாவிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார். அத்தோடு கடந்தாண்டு தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தனது ரசிகர் பட்டாளத்தை விரிவாக்கிக் கொண்டார் ஜி.பி.முத்து. இப்படிப்பட சூழலில் ஜி.பி.முத்துவை கிராம மக்கள் சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபடுவதுமான காட்சி ஒன்று இணையத்தில் வைரலானது. ஜி.பி.முத்து தனது மனைவியுடன் கடந்த 13-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், பெருமாள்புரத்தில் கீழ தெரு ஒன்று இருந்ததாகவும், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை பொதுமக்கள் அந்த பாதையை பயன்படுத்தி வந்ததால், கடந்த 20 வருடங்களில் அந்த தெரு காணாமல் போய்விட்டதாக அவர் கூறியிருக்கிறார். அந்த தெரு இருந்த இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்து விட்டதால்,…

Read More

கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற குக்கே சுப்ரமண்யர் கோயிலின் நிர்வாக வாரிய தலைவராக முன்னாள் ரவுடி நியமிக்கப்பட்டுள்ளது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தட்சிணகன்னடா மாவட்டத்தில் உள்ளது குக்கே சுப்ரமணியர் கோயில். வரலாற்று சிறப்புமிக்க புண்ணிய தலமான இங்கு, உள்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டு பயணிகளும் கோயிலுக்கு வருகை தருவர். குறிப்பாக தோஷ நிவர்த்திக்கு இக்கோயில் சிறப்பு பெற்றது. கர்நாடகாவில் அதிக வருவாய் கிடைக்கும் கோயில்களின் பட்டியலில், குக்கே சுப்ரமணியர் கோயில் முதலிடத்தில் உள்ளது. இத்தகைய பெருமை வாய்ந்த கோயிலின் நிர்வாக வாரிய தலைவர் பதவிக்கு முன்னாள் ரவுடி ஹரிஷ் இஞ்சாடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை இந்த பதவிக்கு சிபாரிசு செய்தது சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் என தகவல் வெளியாகியுள்ளது. ஹரிஷ் இஞ்சாடி என்பவர் அடிக்கடி சிறைக்கு சென்று வந்துள்ள முன்னாள் ரவுடி. போலி காசோலை கொடுத்து பழங்கள், தேங்காய் விற்பனை டெண்டர் எடுத்து கோயில் நிர்வாகத்தை ஏமாற்றியதாக இவர் மீது…

Read More

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 6,000-க்கும் அதிகமான பணியாளர்களை உடனடி பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. உலக டெக் நிறுவனங்கள் பல தங்கள் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றனர். அந்த வகையில் தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் 6,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. உலகெங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு 2.28 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இதில் கிட்டத்தட்ட 3 சதவீதம் பேரை நிறுவனம் தற்போது பணி நீக்கியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் மட்டும் 1.26 லட்சம் பணியாளர்களும், இந்தியாவில் கிட்டத்தட்ட 20,000 பணியாளர்களும் உள்ளனர். கடந்தாண்டு 10,000 ஊழியர்களை இந்நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்த நிலையில், இந்தாண்டு மீண்டும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கடந்த 2024-2024-ம் கடைசி காலாண்டில், அதாவது இந்தாண்டு ஜனவரி தொடங்கி மார்ச் வரை இந்நிறுவனத்தின் லாபம் எதிர்பார்ப்புகளை விட அதிகம் இருந்துள்ளது. 70.1 பில்லியன் டாலர் வருவாயையும், 25.8 பில்லியன் டாலர் நிகர வருமானத்தையும் பெற்றிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது. லாபம் எதிர்பார்த்தை விட அதிகம்…

Read More

இந்தியா–பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததாக கூறியதற்கும், அதைப்பற்றி பிரதமர் மோடி இதுவரை எந்த விளக்கமும் தராததற்கும் எதிராக காங்கிரஸ் கட்சி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் ஊடக பிரிவு தலைவர் பவன் கேரா இணைந்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “பாகிஸ்தானுடன் நடந்த இரகசிய சமாதான பேச்சுவார்த்தையைப் பற்றி டிரம்ப் வெளியிட்ட தகவலுக்கு பிரதமர் மோடி இதுவரை பதிலளிக்கவில்லை. இது மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்புகிறது. இதற்கான விளக்கம் தேவைப்படுகிறது” என அவர்கள் வலியுறுத்தினர். இதையும் படிக்க: பெயர் மாற்றம் பயனற்றது.. அருணாசல பிரதேசத்தின் உரிமை இந்தியாவுடையதே.. மத்திய அரசு கடும் கண்டனம்! அத்துடன், “மோடியின் மவுனத்தை எதிர்த்து மற்றும்…

Read More

அருணாசல பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம் நிலைமையை மாற்ற முடியாது என மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின் தொடர்ந்து வரும் இத்தகைய முயற்சிகள் மீது இந்தியா உறுதியான பதிலை வழங்கியுள்ளது. சீனா கடந்த சில ஆண்டுகளாக அருணாசல பிரதேசத்தை “ஜாங்னான்” என அழைத்து, அங்கு உள்ள இடங்களுக்கு சீன மொழியில் பெயர் சூட்டுகிறது. கடந்த ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு பெயர் மாற்றம் செய்த சீனா, தற்போது மீண்டும் அதே போக்கை தொடரும் சூழலில் உள்ளது. இதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: “அருணாசலப் பிரதேசம் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதியாக இருந்தும் தொடரும். பெயரை மாற்றும் வெறுக்கத்தக்க முயற்சிகள் யதார்த்தத்தை மாற்ற முடியாது. இவை சாத்தியமற்ற மற்றும் அர்த்தமற்ற நடவடிக்கைகள் என்பதையும், இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது” என கூறினார். இதையும் படிக்க: பராமரிப்பு பணி காரணமாக மின்சார…

Read More

சென்னை சென்டிரல் மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கிய ரெயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால், பல்வேறு மின்சார ரெயில்கள் இன்று மற்றும் மே 17-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றன என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. பராமரிப்பு பகுதிகள்: பொன்னேரி – கவரப்பேட்டை இடைப்பட்ட ரெயில் பாளங்கள் பராமரிக்கப்படுவதால், சென்னை சென்டிரல், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை, ஆவடி, என பல வழித்தடங்களில் பயணிகள் பாதிக்கப்பட உள்ளனர். ரத்து செய்யப்படும் முக்கிய ரெயில்கள்: சென்னை சென்டிரலிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு செல்லும் மின்சார ரெயில்கள் (காலை 10:30, 11:35 மற்றும் மதியம் 1:40) கும்மிடிப்பூண்டி–சென்னை சென்டிரல் ரெயில்கள் (மதியம் 1:00, 3:45) சூலூர்பேட்டை வழித்தட ரெயில்கள் (சென்னையிலிருந்து காலை 5:40, 10:15, 12:10) சூலூர்பேட்டியில் இருந்து சென்னைக்கு புறப்படும் ரெயில்கள் (மதியம் 12:35, 1:15, 3:10) கடற்கரை–கும்மிடிப்பூண்டி (மதியம் 12:40, 2:40) நெல்லூர்–சூலூர்பேட்டை இடையே ஓடும் ரெயில்கள் ஆவடி–சென்டிரல் அதிகாலை ரெயில் (4:25am) சிறப்பு ரெயில்கள்…

Read More