Author: Editor web1

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 8வது பயங்கரவாதியை  தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில்நிலையம் சிக்னல் அருகே கடந்த நவம்பர் 10ம் தேதி மாலை பயங்கர கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில், 15 பேர் உயிரிழந்தனர். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தையடுத்து பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், உமர் நபி என்பவன் மனித வெடிகுண்டாக செயல்பட்டு, தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. மேலும், உமர் நபிக்கு நெருக்கமானவர்களை NIA கைது செய்து வருகிறது. கார் குண்டு வெடிப்பு சம்பவம்  தொடர்பாக அரியானா மாநிலம் பரிதாபாதில் உள்ள அல்பலாஹ் பல்கலையில் பணியாற்றும் மருத்துவர் உள்ளிட்ட 7 பயங்கரவாதிகளை NIA அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும்,…

Read More

இந்தோனேஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் 7 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடத்தில் குடியிருப்புகளுடன் விவசாயத் துறைக்கு தேவையான பொருட்களை தயாரித்து கொடுக்கும் அலுவலகம் ஒன்றும் செயல்பட்டு வந்தது. இந்தநிலையில், இன்று (டிச. 9) பிற்பகல் அடுக்குமாடிக் கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் முதல் மாடியில் ஏற்பட்ட தீ, சிறிது நேரத்தில் மளமளவென அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவத் தொடங்கியது. உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. தீ விபத்தில் சிக்கியும், மூச்சுத் திணறியும் 20 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த பயங்கர தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Read More

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வீரர் ஹார்திக் பாண்டியா இரட்டை சாதனை படைப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றியநிலையில், ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றது. இந்தநிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 20 ஓவர் தொடர் நாளை (டிச. 9) தொடங்குகிறது. ஆசிய கோப்பை போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்த ஹார்திக் பாண்டியா, தற்போது காயத்தில் இருந்து குணமாகி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார். இந்த தொடரில் அவர் இரட்டை சாதனை படைப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதுவரை இந்திய அணிக்காக 120 T20 போட்டிகளில் விளையாடி உள்ள பாண்டியா, 1860 ரன்கள் மற்றும் 98 விக்கெட்டுக்களை எடுத்துள்ளார்.…

Read More

வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ள சிவகார்த்திகேயனின் கெட்டப் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. அமரன், மதராஸி திரைப்படங்களைத் தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்தநிலையில், விஜயின் 68வது படமான GOAT-க்கு பிறகு, இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித்துடன் மீண்டும் வெங்கட் பிரபு இணைய உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்தநிலையில், சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு கூட்டணி அமைய உள்ளதாக உறுதியான தகவல் வெளியானது. இதுபற்றி அண்மையில் பேசிய வெங்கட் பிரவு, சிவகார்த்திகேயனுடனான படம் வித்தியாசமான நகைச்சுவை படமாக இருக்கும் என்றார். தயாரிப்பு நிறுவனத்துக்கும், சிவகார்த்திகேயனுக்கம் கதை மிகவும் பிடித்துள்ளதாகவும் கூறினார். இந்த திரைப்படத்தில் வித்தியாசமான சிவகார்த்திகேயனை பார்க்கலாம் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தார். இந்தநிலையில், வெங்கட் பிரபு…

Read More

இந்தியாவில் உள்ள சீன தூதரகம் ஆன்லைன் விசா விண்ணப்ப முறையை வரும் 22ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான சீன தூதர் ஜூபெய்ஹோங் தமது X வலைதள பதிவில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் உள்ள சீன தூதரகத்தில் 2025 டிசம்பர் 22 அன்று முதல் சீன ஆன்லைன் விசா விண்ணப்ப முறை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். விண்ணப்பதாரர்கள் https://visaforchina.cn/DEL3_EN/qianzhengyewu என்ற இணையதள முகவரியில் படிவத்தை நிரப்பி ஆன்லைனில் பதிவேற்றலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கூடுதல்  விவரங்கள் தேவைப்படுபவர்கள் டெல்லியில் உள்ள சீன விசா விண்ணப்ப சேவை மையத்தை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை அதன் அலுவலக நேரமான காலை 9 மணி முதல் மதியம் 3 வரை அணுகலாம் என்று சீன தூதர் ஜூபெய்ஹோங் தெரிவித்துள்ளார். வேறு தகவல்கள் எதுவும் தேவைப்பட்டால், +91-9999036735 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்றும் தமது…

Read More

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை (டிச. 9) விசாரணைக்கு வருகிறது. தமிழ் கடவுள் முருகப்பெருமானின், அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சி பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீப நாளில் தீபம் ஏற்றப்படுகிறது. ஆனால் இந்த தீபத்தை, மலையில் உள்ள தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என்று ராம ரவிக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார். அந்தப் பகுதியில் சிக்கந்தர் தர்கா உள்ளதாகவும், தீபத்தூணுக்கும், தர்காவுக்கும் குறுகிய இடைவெளி இருப்பதால், அங்கு தீபம் ஏற்றும்பட்சத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1ம் தேதி உத்தரவிட்டார். ஆனால், தீபநாளான 3ம் தேதி வழக்கம்போல் உச்சி…

Read More

தமிழ்நாட்டிற்கு டிசம்பர் மாதத்திற்கு வழங்க வேண்டிய 7.35 டி.எம்.சி தண்ணீரை திறக்க வேண்டுமென கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் 46வது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று (டிச. 8) நடைபெற்றது. எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைப்பெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் நீர்வளத்துறை அரசு செயலாளர் ஜெ.ஜெயகாந்தன் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதி நீர்ப் பிரிவு தலைவர் ரா.சுப்ரமணியன் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் கலந்துகொண்டனர். இன்றைய (டிச. 8) நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர் இருப்பு 87.554 டி.எம்.சி ஆக உள்ளது என்றும் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,282 கன அடியாக உள்ளது என்றும் அணையில் இருந்து வினாடிக்கு 2,986 கன அடி நீர் விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலை…

Read More

ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள ‘ஹேப்பி ராஜ்’ படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்கை துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார். இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனரான மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் குமார் நடித்தள்ள திரைப்படம் ‘ஹேப்பி ராஜ்’. நகைச்சுவை கதைக்களத்தில் உருவாக உள்ளதாக கூறப்படும் இந்த திரைப்படத்தில் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள ‘ஹேப்பி ராஜ்’ படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க உள்ளார். இந்தநிலையில், ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார். தனது X தளத்தில் துல்கர் வெளியிட்டுள்ள பதிவில், அன்பு சகோதரர் ஜி.பி. பிரகாஷ் குமாருக்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். ‘ஹேப்பி ராஜ்’ மிகவும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

Read More

டிட்வா புயலின் கோர தாண்டவத்தில் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627ஐ தாண்டியுள்ளது. அண்மையில் வங்கக் கடலில் இலங்கை அருகே உருவான டிட்வா புயல் அந்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் இதுபோன்ற இழப்போ, சேதமோ ஏற்பட்டதில்லை என்றநிலையில் மிகப்பெரிய பாதிப்பை டிட்வா புயல் ஏற்படுத்தி உள்ளது. இலங்கைக்கு  ‘ஆப்பரேஷன் சார்பந்து’ திட்டத்தின் கீழ் இந்தியா பல்வேறு வகையில்  உதவிகள் அளித்து வருகிறது. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், நடமாடும் மருத்துவமனை, தற்காலிக பாலம் போன்றவற்றுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மோப்ப நாய்கள் களத்தில் இறங்கி பணியாற்றினர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் செயல்படும் நடமாடும் மருத்துவமனைகள் மூலம் இதுவரை 1,250 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாகவும், 5 பெரிய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், 3 இரும்புப் பாலங்கள் அமைத்து தந்துள்ளதாவும் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், இந்த…

Read More

இந்தியாவில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சவராக 10வது முறையாக பதவியேற்ற ஒரே நபர் என்ற சாதனை படைத்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூ.ட்டணி, மீண்டும் ஆட்சி அமைத்தது. அந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். இதன் மூலம் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக 10வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றார். நாட்டில் உள்ள ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக அதிக முறை பதவியேற்ற, அவரின் சாதனை நிகழ்வை லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. இதனை ஐக்கிய ஜனதா தளம் தேசிய செயல் தலைவர் சஞ்சய்குமார் தெரிவித்துள்ளார். பீகாரின் 10வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிதிஷ்குமார் அடைந்த அசாதாரண மைல் கல்லை லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகம் (World book of Records) அங்கீகரித்துள்ளது…

Read More