Author: Editor web1

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை வேறு சிறைக்கு மாற்றம் செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், கடந்த 2018 முதல் 2022ம் ஆண்டு வரை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்த போது, அவர் மீது ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அப்போது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை இல்லாததால், 2022 ஏப்ரலில் இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார். பின்னர் பொறுப்பேற்ற பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, இம்ரான் கான் மீது, பல்வேறு வழக்குகளை பதிவு செய்தது. ஊழல் புகாரில் தண்டிக்கப்பட்ட இம்ரான் கான், கடந்த 2023  ஆகஸ்ட் முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரான் கானை சந்திக்க அவரது குடும்பத்தினர் நீதிமன்ற ஆணை பெற்றிருந்தும், அவர்களுக்கும், இம்ரான் ஆதரவாளர்களுக்கும் போலீசார் அனுமதி மறுத்து…

Read More

2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் டிசம்பர் 15 முதல் 23 வரை விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அடுத்தாண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. டிசம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், அரசியல் கட்சிகளும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்தநிலையில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து இன்று (டிச. 11) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா சட்டப்பேரவைத்  தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை விருப்ப…

Read More

10-வது நாளாக இன்று (டிச. 11) சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். கடந்த 8 நாட்களாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சேவையால் இண்டிகோ நிறுவனம் கடும் விமர்சனத்தையும், பொருளாதார இழப்பையும் சந்தித்து வருகின்றது. இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று (டிச. 10) சிங்கப்பூர், பாங்காக், பினாங்கு, குவைத், மும்பை, கொல்கத்தா, கவுகாத்தி, கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய 33 இண்டிகோ விமானங்களும், சென்னைக்கு வரவேண்டிய 37 விமானங்களும் என மொத்தம் 70 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்தாலும் பயணிகள் முன்பதிவு ரத்து போன்ற காரணங்களால் விமான சேவையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று 10வது நாளாக புறப்பட வேண்டிய…

Read More

சபரிமலையில் மீண்டும் அதிகரித்துள்ள பக்தர்களின் கூட்டம் காரணமாக பிற்பகல் மற்றும் இரவில், கோயில் நடை திறந்திருக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. கோயில் நடை திறந்து, 25 நாட்களை கடந்துள்ளது. முதல் சில நாட்கள் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்ததால், பாதுகாப்பு பணியில் போலீசாரும், தேவசம் போர்டு நிர்வாகமும் திணறியது. பின்னர், பக்தர்களின் கூட்டம் சற்று குறைந்தது. இந்தநிலையில், தற்போது பக்தர்களின் கூட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது. குறைந்தது 5 முதல் 7 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் சூழல் இருப்பதாக கூறப்படுகிறது. கோயில் நடை அடைக்கப்படும் போது பக்தர்கள், 18ம் படி ஏற்றப்பட்டு வடக்கு வாசல் வழியாக வெளியே அனுப்பப்படுகின்றனர். இவர்கள் மீண்டும் சில மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இதுகுறித்து போலீசார்…

Read More

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) இன்றுடன் (டிச. 11) நிறைவுடைகிறது. கடந்த 2002ம் ஆண்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) நடைபெறுகிறது. கடந்த நவம்பர் மாதம் 4ம் தேதி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கின. வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கிட்டு ஒவ்வொரு வாக்காளருக்கும் படிவங்களை வழங்கினர். அந்த படிவங்களை பூர்த்தி செய்ததும் அவற்றை வாங்கி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் உடனுக்குடன் நடைபெற்றன. இறந்தவர்கள், இடம் மாறியவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, புதிதாக பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. இந்தநிலையில், வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணிகள் இன்றுடன் (டிச. 11) நிறைவடைகின்றன. இதனையொட்டி, கணக்கீட்டு படிவங்களை பெற்ற வாக்காளர்கள் இன்று (டிச. 11) சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனிடையே நவம்பர் 4ம் தேதி…

Read More

இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே 2வது T20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது இந்தநிலையில் 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டத்தில் உள்ள நியூ சண்டிகாரில் இன்று (டிச. 11) நடைபெற உள்ளது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த விரக்தியில் உள்ள தென்னாப்பிரிக்கா அணி இன்றைய போட்டியில் முழு திறமையையும் வெளிப்படுத்தும் என்பதால் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் 2வது முறையும் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்க வேண்டுமென்று இந்திய அணியும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டியில் அதிரடிக்கு பஞ்சமிருக்காது  என ரசிகர்கள்…

Read More

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் தேர்தல் சீர்திருத்தம் குறித்து மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் மத்திய அரசுக்கு 3 முக்கிய கேள்விகளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்துள்ளார். டிசம்பர் 1ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தன. இதையடுத்து, டிசம்பர் 9ம் தேதி SIR தொடர்பாக விவாதம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி மக்களவையில் இன்று (டிச. 9) விவாதம் நடைபெற்றது. காலையில் விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி, நடுநிலையான அமைப்பான தேர்தல் ஆணையம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் சூழல் உருவானது துரதிருஷ்ட வசமானது என குறிப்பிட்டார். SIR விவகாரத்தில் வெளிப்படையான நடவடிக்கைகள்  இருக்கும் வகையில் செயல்பாடுகள் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து நடைபெற்ற தேர்தல்…

Read More

‘எஸ்கே 26’ படம் தொடர்பாக வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது. சத்ய ஜோதி நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் கூட்டணி அடுத்த இணைய உள்ளது. அந்த வகையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘எஸ்கே 26’ படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயனின் தோற்றம் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றிய பேசிய வெங்கர் பிரபுவும், சிவகார்த்திகேயன் உடனான திரைப்படம் நிச்சயம் வித்தியாசமான நகைச்சுவைப் படமாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். கதையைக் கேட்ட தயாரிப்பு நிறுவனமும், சிவகார்த்திகேயனும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதுவரை பார்க்காத எஸ்கே-வை இந்தப் படத்தில் நிச்சயமாக  பார்க்கலாம் என்றும் வெங்கட் பிரபு கூறியிருந்தார். இந்தநிலையில், இயக்குனர் வெங்கட் பிரபுவின் இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட்பிரபு இருவரும் கிராபிக்ஸ் தொழில்நுட்ப பணிகளுக்காக அமெரிக்காவுக்கு பயணித்திருப்பதற்கான அறிவிப்பாக இது அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Read More

இந்தியாவில் 1.57 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மைக்ரோசாப்ட் முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் CEO சத்ய நாதெல்லா தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் CEO சத்ய நாதெல்லா, டெல்லியில் இன்று (டிச. 9) பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவில் ஏஐ வாய்ப்பு குறித்து ஊக்கமளிக்கும் வகையில் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடியதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய முதலீடாக 1.57 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு, உள்கட்டமைப்பு திறன் ஆகியவற்றை உருவாக்குவதற்காக முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு துறையைப் பொறுத்தவரை இந்தியா மீது உலக நாடுகள் நம்பிக்கையுடன் உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். சத்ய நாதெல்லா உடனான சந்திப்பு குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலாக அமைந்ததாக பிரதமர்…

Read More

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் டிசம்பர் 21ம் தேதி தொடங்கி டிசம்பர் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. விசாகப்பட்டித்தில் முதல் 2 போட்டிகளும், எஞ்சிய 3 போட்டிகள் திருவனந்தபுரத்திலும் நடைபெற உள்ளன. இந்தநிலையில், இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியில் தமிழக வீராங்கனை உள்பட புதுமுகங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தை சேர்ந்த குணாலன் கமலினி, வைஷ்ணவி ஷர்மா இருவருர் அறிமுக வீராங்கனைகளாக  களமிறங்க உள்ளனர். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரான கமலினி மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார்.

Read More