Close Menu
    What's Hot

    நெட்பிளிக்ஸின் முதல் தெலுங்கு தொடர்..! சந்தீப் கிஷன் நடிப்பில்..!

    அதிகரிக்கும் குற்றங்கள்: வடமாநிலத்தவர்களை அரசு கண்காணிக்க அண்ணாமலை வலியுறுத்தல்!

    2மாத பெண் குழந்தையை விற்ற தாய்..! சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • சிறப்புக் கட்டுரைகள்
    • அரசியல்
    • LIFESTYLE
    TN Talks
    Home»இந்தியா»சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும் நேரம் அதிகரிப்பு!
    இந்தியா

    சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும் நேரம் அதிகரிப்பு!

    Editor web1By Editor web1December 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sabarimala
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சபரிமலையில் மீண்டும் அதிகரித்துள்ள பக்தர்களின் கூட்டம் காரணமாக பிற்பகல் மற்றும் இரவில், கோயில் நடை திறந்திருக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. கோயில் நடை திறந்து, 25 நாட்களை கடந்துள்ளது. முதல் சில நாட்கள் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்ததால், பாதுகாப்பு பணியில் போலீசாரும், தேவசம் போர்டு நிர்வாகமும் திணறியது. பின்னர், பக்தர்களின் கூட்டம் சற்று குறைந்தது. இந்தநிலையில், தற்போது பக்தர்களின் கூட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது. குறைந்தது 5 முதல் 7 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் சூழல் இருப்பதாக கூறப்படுகிறது.

    கோயில் நடை அடைக்கப்படும் போது பக்தர்கள், 18ம் படி ஏற்றப்பட்டு வடக்கு வாசல் வழியாக வெளியே அனுப்பப்படுகின்றனர். இவர்கள் மீண்டும் சில மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இதுகுறித்து போலீசார் மற்றும் தேவசம் போர்டு அதிகாரிகள் தந்திரியுடன் ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து,  பிற்பகல் மற்றும் இரவு நேங்களில் கோயில் நடை அடைக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி பிற்பகல் 1 மணிக்கு உச்ச பூஜை முடிந்து அடைக்கப்பட வேண்டிய நடை 1.30 மணி வரையும், இரவில், 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைப்பதற்கு பதிலாக, 11.15 மணி வரையிலும் கோயில் நடை அடைக்கப்படுவது நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 18ம் படிகளில் ஒரு நிமிடத்திற்கு, 80 பக்தர்கள் ஏற்றப்படுகின்றனர். நீட்டிக்கப்பட்டுள்ள, 45 நிமிடங்களில் கூடுதலாக, 3,500 பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது.

    இதனிடையே பள்ளி அரையாண்டு தேர்வுகள் முடிந்த பிறகு பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்,  தகுந்த பல முன்னேற்பாடுகளை போலீசார் மற்றும் தேவசம் போர்டு மேற்கொண்டு வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅபய்குமார் சிங்குக்கு கூடுதலாக டிஜிபி பொறுப்பு
    Next Article மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுமுறை… கர்நாடக அரசு முடிவு
    Editor web1
    • Website

    Related Posts

    சபரிமலையில் அன்புமணி-சௌமியா!. குடும்பத்துடன் சாமி தரிசனம்!

    June 15, 2026

    E100 எத்தனால் எரிபொருளுக்கு கிடைச்சாச்சு கிரீன் சிக்னல்..!! மத்திய அரசு ஒப்புதல்..!!

    June 15, 2026

    மகாராஷ்டிரா: கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் பாய்ந்த வாகனம்..!! ஒரு குடும்பமே உயிரிழந்த சோகம்..!!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நெட்பிளிக்ஸின் முதல் தெலுங்கு தொடர்..! சந்தீப் கிஷன் நடிப்பில்..!

    அதிகரிக்கும் குற்றங்கள்: வடமாநிலத்தவர்களை அரசு கண்காணிக்க அண்ணாமலை வலியுறுத்தல்!

    2மாத பெண் குழந்தையை விற்ற தாய்..! சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!

    சபரிமலையில் அன்புமணி-சௌமியா!. குடும்பத்துடன் சாமி தரிசனம்!

    திடீர் கடல் சீற்றம்..!! வீடுகளுக்குள் புகுந்த கடல் நீரால் தவிக்கும் குமரி மக்கள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.