Author: Editor web2

நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்த்சர்ச்சில் உள்ள ஹேக்லி ஓவல் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது. முதல் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 231 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 167 ரன்களுக்கு ஆட்டம் இழக்க. 64 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடி 466 ரன்கள் சேர்த்தது. 531 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை எதிர்கொண்டு விளையாட தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பத்திலேயே நான்கு விக்கெடுகளை அடுத்தடுத்து எழுந்தது. ஒரு கட்டத்தில் 72 ரன்கள் எடுத்த நிலையில் நான்கு விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. பின்னர் அந்த அணி வீரர் சாய் ஹோப்…

Read More

வருகிற டிசம்பர் 19ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச மடிகணியை வணக்கம் திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து கல்லூரி மாணவ மாணவிகள் அனைவருக்கும் இந்த திட்டத்தின் கீழ் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கைகணினி ( Tablet) அல்லது மடிக்கணினி ( Laptop ) வழங்கப்படும். ஒவ்வொரு லேப்டாப்பும் இந்திய மதிப்பில் சுமார் 22 ஆயிரம் ரூபாய்க்கு நிகரானது என்று கூறப்படுகிறது. இந்த இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் மூன்று மாதத்திற்குள், அதாவது தேர்தலுக்கு முன்பாகவே குறைந்தது 10 லட்சம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மொத்தமாக 20 லட்சம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Read More

சினிமா துறையில் கேஸ்டிங் கவுச் இல்லை என்று பலர் மறுத்தாலும் அது எங்கேயோ ஒரு மூலையில், அருவருக்கத்தக்க மனிதர்களால் நடத்தப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. கேஸ்டிங் கவுச் என்பது ஒரு தொழிலை நாம் பெறுவதற்காக பாலியல் ரீதியாக அவர்களுக்கு சலுகையை வழங்குவது. அதாவது சினிமா துறையில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு வரும் நடிகைகளிடம் பாலியல் ரீதியான சலுகையை எங்களுக்கு கொடுத்தால்தான் உங்களுக்கு நாங்கள் பட வாய்ப்பு கொடுப்போம் என்று சொல்வதுதான் கேஸ்டிங் கவுச். தெலுங்கு திரையுலகையை சேர்ந்த மூத்த நடிகை ஆன மிர்ச்சி மாதவி 300க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடத்தி இருக்கும் அவர் தன் வாழ்வில் நடந்த ஒரு கசப்பான அனுபவத்தை ஒரு காணொளியில் பகிர்ந்திருக்கிறார். “ஆரம்பத்தில் என்னுடைய நடிப்புத் திறமையை மூலம் நிறைய பட வாய்ப்புகளை பெற்றேன்.100% லவ் வித் குரு என்கிற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக…

Read More

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பாரத பிரதமர் நரேந்திர மோடி உடன் இணைந்து இந்திய அரசியல் தரப்பில் நிறைய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறார். இந்தியா மற்றும் ரஷ்யா எப்பொழுதும் நட்பு நாடுகளாக விளங்கி வருகிறது. பல்வேறு வகையில் இரு நாட்டுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது வழக்கம். அதன் அடிப்படையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 23வது இந்திய ரஷ்யா உச்சி மாநாட்டில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு வருகிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய மக்களுக்கு இலவச டூரிஸ்ட் மற்றும் குரூப் டூரிஸ்ட் விசாக்களை வழங்குவதாக தெரிவித்திருந்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு ரஷ்யா எப்பொழுதும் ஒரு நட்பு நாடாக இருக்கும். இந்தியாவின் வளர்ச்சியில் ரஷ்யா எப்பொழுதும் தன்னுடைய உதவியை தடை இல்லாமல் செய்யும். இந்தியாவின் வளர்ச்சிக்கு தேவைப்படும் எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி போன்ற பொருட்களை ரஷ்யா எப்பொழுதும் தடையில்லாமல் தர ரஷ்யா எப்பொழுதும் தயார்…

Read More

2006ம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித்குமார் மூன்று வேடத்தில் நடித்து வெளியான வரலாறு திரைப்படம் அந்த வருடத்தில் அதிக வசூல் செய்து சாதனை படைத்தது. படத்தில் அசின், கனிகா, எம்.எஸ். பாஸ்கர், மன்சூர் அலிகான், ரமேஷ் கண்ணா என ஒரு நட்சத்திர பட்டாளமே இருக்கும். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை மேலும் வலுசேர்த்தது. அனைத்து ரீதியிலும் ஜனரஞ்சகமான கமர்சியல் படமாக இந்த திரைப்படம் 12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. 12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து அன்றைய தேதியில் ஒரு சாதனை படைத்தது. இந்தப் படத்தை இயக்குவதற்கு முன்பு கேஎஸ் ரவிக்குமார் மற்றும் அஜித்குமார் இடையே நடைபெற்ற விவாதத்தை கே எஸ் ரவிக்குமார் ஒரு காணொளியில் கூறியிருக்கிறார். “கதையை கூறிய பின்பு அஜித்குமார் என்னிடம் சார் அந்த அப்பா கதாபாத்திரம் நான் ஏற்று நடித்தால் என்னை யாரும்…

Read More

Netflix நிறுவனம் வாரணர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தை சுமார் 83 பில்லியன் டாலர்கள் கைப்பற்றியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் வாரனர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்திற்கு கீழ் வரும் HBO, HBO Max, Studio என அனைத்து உரிமத்தையும் Netflix நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்திய மதிப்பில் 7 லட்சத்து 43 ஆயிரத்து 630 கோடி ரூபாய்க்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதை Netflix நிறுவனம் அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது. வாரணர பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தை கைப்பற்றும் ஏலப்போரில் பாரமௌண்ட ஸ்கை டான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனமும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 1923 ஆம் ஆண்டு நான்கு சகோதரர்களால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் நூற்றாண்டுக்கும் மேலாக தரமான படைப்புகளின் மூலம் உலகில் உள்ள நிறைய மக்களின் மனதை வென்றிருக்கிறது. முக்கியமாக டிசி காமிக்ஸ் (டிசி காமிக்ஸ்) மூலமாக நிறைய ஜனரஞ்சகமான திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களை வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனம் தயாரித்துள்ளது. பேட்மேன்…

Read More

இந்திய மற்றும் ரஷ்ய நட்புணர்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புதின் புதுடெல்லிக்கு வந்து இருக்கிறார். பல்வேறு ஒப்பந்தங்கள் இந்த சுற்றுப்பயணத்தில் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது. இன்று பிரதமர் மோடி ரஷ்ய மக்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தியை கூறியிருக்கிறார். அது என்னவென்றால் ரகசிய மக்களுக்கு இலவசமாக ஈ விசா தரப்போவதுதான். ஆம் ரஷ்ய மக்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தேவைப்படும் E விசாவை எந்த ஒரு கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்போவதாக பிரதமர் மோடி கூறியிருக்கிறார். மேலும் இந்த விசாவிற்கு விண்ணப்பித்த அடுத்த 30 நாட்களுக்குள் விசா கிடைத்துவிடும் என்கிற உத்தரவாதத்தையும் கொடுத்திருக்கிறார். டூரிஸ்ட் விசா மற்றும் குரூப் டூரிஸ்ட் விசா என இரண்டும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக ரஷ்ய மக்கள் இந்தியாவுக்கு வருகை தருவது ஆண்டுக்கு ஆண்டு அதிகமாய் கொண்டு தான் போகிறது. சர்வே படி 2023 ஆம் ஆண்டு மொத்தமாக ஒரு…

Read More

ஏவிஎம் ப்ரோடக்சன்ஸ் 1945 ஆம் ஆண்டு ஏ வி மெய்யப்ப செட்டியாரால் துவங்கப்பட்டது. பின்பு அவருடைய மகன் ஏவிஎம் சரவணன் 1958 ஆம் ஆண்டு இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு தலைமை ஏற்றார். அவர் தலைமையை ஏற்ற பின் ஏவிஎம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பல்வேறு வெற்றி படங்கள் வெளியாகின. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னட மற்றும் ஹிந்தி என முன்னுருக்கும் மேற்பட்ட படங்கள் ஏவிஎம் புரோடக்சன்ஸ் பேனரில் தயாரிக்கப்பட்டுள்ளது. நேற்று டிசம்பர் 4ஆம் தேதி ஏவிஎம் சரவணன் உடல் நல குறைவு காரணமாக தன்னுடைய 86 வது வயதில் இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்கு பல்வேறு துறை பிரபலங்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். அதில் சிவக்குமார் அவருடைய மகன் நடிகர் சூர்யா ஆகியோரும் அஞ்சலி செலுத்து வந்து இருந்தனர். அஞ்சலி செலுத்து வந்த இடத்தில் சிவக்குமார் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் கண்ணீர் மல்க தங்களது அஞ்சலியை செலுத்தினர். பின்பு பேசிய சிவகுமார்,…

Read More

ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்பொழுது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. தற்பொழுது இரண்டாவது போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் மொத்தமாக 334 ரன்கள் எடுத்தது. 334 ரன்கள் பின்தங்கிய நிலையில் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி மிகவும் நிதானமாக தற்பொழுது விளையாடி வருகிறது. மூன்று விக்கெட்டுகளை மற்றும் இழந்து 243 ரன்கள் எடுத்து சற்று வலுவான நிலையில் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே 65 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதோடு ஒரு உலக சாதனையையும் அவர் கைவசப்படுத்தி இருக்கிறார். பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் அதிவேக ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்கிற சாதனையை…

Read More

1999 ஆம் ஆண்டு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படையப்பா திரைப்படம் சுமார் 26 ஆண்டுகள் கழித்து மீண்டும் வருகிற டிசம்பர் 12ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. 4k ரெசல்யூசனில் இந்த படம் ரீ மாஸ்டர் செய்யப்பட்டு ரீ ரிலீஸ் செய்ய தயாராக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சௌந்தர்யா ரம்யா கிருஷ்ணன் ராதாரவி மணிவண்ணன் செந்தில் என பல்வேறு நட்சத்திர பட்டாளஙகள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.கே எஸ் ரவிக்குமாரின் கதை திரைக்கதை வசனம் ஒரு பக்கம், மறுபக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைல் மற்றும் ஜனரஞ்சகுமான் நடிப்பு என்று பார்த்தால் இன்னொரு பக்கம் ஏ ஆர் ரகுமானின் மிரட்டலான இசை. சோகம் ஆனந்தம் உத்வேகம் என அனைத்து ஏரியாக்களிலும் ஏ ஆர் ரகுமான் தனது இசையில் மிரட்டி இருப்பார். வெற்றிக்கொடி கட்டு என்கிற பாடல் இன்றுவரை பலருக்கும் உத்வேகத்தையும் உந்து சக்தியும் கொடுக்கும் என்று சொன்னால் அது…

Read More