Author: Editor web3
ஆட்சிக்கு வரும்போது “அண்ணா வழி நடப்போம்” என்று கூறிய விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்த உடனே மறந்தது அப்பேரறிஞர் பெருந்தகையைத் தான் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தலத்தில், மேடைகளில் பேசும் வெற்று வாய்ச் சவடாலுக்கும், குடும்ப தயாரிப்புப் படங்களில் வசனம் வைத்து வியாபாரம் செய்ய மட்டுமே இவர்களுக்கு அண்ணாவின் தேவை உண்டு. ஆனால், மக்கள் நலன் சார்ந்த எந்த ஒரு இடத்திலும் இந்த விடியா திமுக அரசு அண்ணாவின் பெயரை முன் நிறுத்தியது இல்லை. அஇஅதிமுக திட்டங்களுக்கு ஒட்டிய ஸ்டிக்கர்களில் கூட தன் தந்தை கருணாநிதி பெயரை வைத்தாரே தவிர, அண்ணாவின் திருப்பெயரை வைக்கவில்லை! தற்போது ஒருபடி மேலே போய், மதுரை திருநகர் “அறிஞர் அண்ணா பூங்கா” என்ற பெயரில் உள்ள அறிஞர் அண்ணாவை நீக்கிவிட்டு, “ஸ்டெம்” பூங்கா என்று பெயர் வைத்துள்ளது ஸ்டாலின் மாடல் திமுக அரசு. தங்களை ஏதோ பெரிய…
திமுக அரசால் கைதாகி வீட்டுச் சிறையில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுக்கு சிறு தீங்கு நேர்ந்தாலும் அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் முழு பொறுப்பு ஏற்கவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், “திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண். 311 (சமவேலைக்கு சம ஊதியம்) நிறைவேற்றக் கோரி தொடர்ந்து 17-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராடிவரும் நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளான ராபர்ட், தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார், கண்ணன் உள்ளிட்ட 8 பேரை, நேற்று காலை 8 மணியளவில் இருந்து HouseArrest செய்துள்ள ஸ்டாலின் அரசு, வீட்டுச் சிறையில் வைத்து, அவர்கள் செல்போனைக் கூட பறித்துக்கொண்டு Switch Off செய்து தற்போது வரை அவர்களை விடுக்கவில்லை என செய்திகள் வருகின்றன. சுமூகமான முறையில் போராட்டத்தை எதிர்கொள்ளத் தெரியாத கையாலாகாத பொம்மை முதல்வரின் அரசு, இப்படி சட்டத்திற்கு புறம்பான வகையில் கைதுகளில் ஈடுபடுவதும்,…
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தாங்கள் வெளியேறவில்லை என ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவில் தந்தை மகன் இடையேயான மோதலை அடுத்து ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இருவரும் பாமகவை சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் மாறி மாறி நிர்வாகிகளை நீக்குவதும், சேர்ப்பதுமாக அதிரடி காட்டி வருகின்றனர். ஆனால் தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸ் பாமகவின் தலைவராகவும் கட்சியின், சின்னம், பெயர், கொடி உள்ளிட்டவை அவருக்குத்தான் சொந்தம் என அங்கீகரித்துள்ளது. ஆனால் டெல்லி உயர்நீதிமன்றம் ராமதாஸ்க்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இருப்பினும், இவருக்கிடையே உள்ள பிரச்சனையை தீர்த்து என்.டி.ஏ. கூட்டணியில் பாமகவை இழுக்கவேண்டும் என்று பாஜக முயற்சித்து வருகிறது. அதனடிப்படையில் இருவரிடமும் பேச்சுவார்த்தைகளும் நடப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அன்புமணி, கூட்டணி , தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுக்கப்பட்டதாகவும் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து…
ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுக்காமல் பயணிகளை சுரண்ட திமுக அரசு துணை போவதா? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லத் திட்டமிட்டிருக்கும் நிலையில், இதைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளன. அரசின் விதிகளை மீறி அப்பட்டமாக கட்டணக் கொள்ளை நடைபெறும் நிலையில், அதைத் தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. சென்னையிலிருந்து நாளை 13-ஆம் தேதியும், நாளை மறுநாள் 14-ஆம் தேதியும் மதுரை செல்வதற்குன் ரூ.4,000 வரையிலும், நெல்லை செல்ல ரூ.4,500 வரையிலும், கோவைக்கு ரூ.3,800 வரையிலும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று ஆம்னி பேருந்துகள் அறிவித்துள்ளது. இந்தக் கட்டணம் விவரங்கள் ஆன்லைன் முன்பதிவு இணைய தளங்களில் வெளியிடப்பட்டு முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து ஊடகங்களிலும் இந்தக்கட்டணக் கொள்ளை தொடர்பாக…
இஸ்ரோவின் இந்த ஆண்டின் முதல் ராக்கெட் லாஞ்ச் தோல்வியை சந்தித்துள்ளதாக இந்தியாவே சோகத்தில் மூழ்கியுள்ளது. 2026 ஆம் ஆண்டில் இன்று ஜனவரி 12, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அந்த ஆண்டின் தனது முதல் திட்டத்தை தொடங்கியது. ஸ்ரீரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து காலை 10:17 மணிக்கு 16 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் ஏவப்பட்டன. இருப்பினும், பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் அதன் திட்டமிடப்பட்ட பாதையிலிருந்து விலகிச் சென்றதால் இந்த திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் கூறுகையில், “பிஎஸ்எல்வி ராக்கெட்டின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்கள் முடியும் வரை அதன் செயல்பாடு சாதாரணமாகவே இருந்தது. இருப்பினும், மூன்றாம் கட்டத்தின் முடிவில், ராக்கெட்டின் சுழற்சி வேகத்தில் ஒரு சிறிய விலகல் காணப்பட்டது, அதன் பிறகு அது பாதையை விட்டு விலகிச் சென்றது. நாங்கள் தரவுகளை ஆய்வு செய்து வருகிறோம் என்று கூறினார். அதாவது, (டிஆர்டிஓ) உருவாக்கப்பட்ட…
கிரிக்கெட் வரலாற்றில், தங்கள் வேகம் அல்லது சுழல் பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களைத் திணறடித்த பல பந்துவீச்சாளர்கள் இருந்துள்ளனர். ஆனால், வேகம் அல்லது சுழற்சி இல்லாமலேயே, துல்லியமான லைன்–லெந்த் மற்றும் அபாரமான கட்டுப்பாட்டால் பேட்ஸ்மேன்களின் பொறுமையை சோதித்தவர்களும் இருந்துள்ளனர். அத்தகையவர்களில் இந்திய கிரிக்கெட்டின் மறக்க முடியாத பெயர் பாபு நாட்கர்னி. 1964 ஆம் ஆண்டு இதே நாளில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே உலகின் மிகவும் எக்னாமிக்கலான (economical) பந்துவீச்சு ஸ்பெல் என்ற சாதனையை அவர் படைத்தார். அந்த சாதனை இன்றுவரை கிரிக்கெட் உலகில் தனித்த இடத்தைப் பிடித்துள்ளது. 1964 ஆம் ஆண்டில், இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடருக்காக இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில், இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸின் போது, பாபு நாட்கர்னி தனது பந்துவீச்சால் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான நாட்கர்னி, தொடர்ச்சியாக 21 ஓவர்களை மெய்டன் ஓவர்களாக வீசி, பேட்ஸ்மேன்களை…
மும்பையின், எம்.என்.எஸ் கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே அண்ணாமலையின் மும்பை யாத்திரை குறித்து கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், மிரட்டலுக்கு பயப்படமாட்டேன் என்றும் மும்பை வருவது உறுதி என்றும் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை, பராசக்தி படம் முரசொலி போல் களத்தில் இருக்கும் என்று கமல்ஹாசன் சொல்லி இருக்கிறார். நியாயமாக பேசிய கமல்ஹாசன் கருத்தை ஏற்கிறேன். இந்த படம் காங்கிரஸ் கட்சி தமிழக மக்களுக்கு செய்த துரோகத்தை சொல்லி இருக்கிறது. 1965ம் ஆண்டு இந்தி திணிக்க காங்கிரஸ் கட்சி செய்த அடாவடித்தனத்தை படம் தெளிவாக சொல்லி இருக்கிறது. பராசக்தி படக்குழுவிற்கு வாழ்த்துகளை சொல்லி கொள்கிறேன். எங்கே ஆப்பு செய்தார்கள் என்று திமுகவினர் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி இலங்கையில் இன படுகொலை செய்தனர். 2026ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் யாரொல்லம் கூட்டணிவைக்கிறார்களோ பராசக்தி முரசொலியாக பரவட்டும். தீ…
இஸ்ரோவின் 2026 ஆம் ஆண்டின் முதல் திட்டமாக இன்று, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து EOS-N1 உட்பட 16 செயற்கைக்கோள்கள் PSLV C-62 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 2026 ஆம் ஆண்டின் முதல் விண்வெளிப் பயணத்தை இன்று, திங்கட்கிழமை (ஜனவரி 12, 2026) காலை 10:17 மணிக்கு தொடங்கியது. இந்தத் திட்டத்தில், பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் மூலம் ஈஓஎஸ்-என்1 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் முதன்மைப் பேலோடாக ஏவப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியா மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா, அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் 16 துணைச் செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. பிஎஸ்எல்வி-டிஎல் வகை ராக்கெட் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த 64வது பிஎஸ்எல்வி பயணத்தில், பேலோடானது 505 கிலோமீட்டர் உயரமுள்ள சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். EOS-N 1 (Anvesha): பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்காக (DRDO) உருவாக்கப்பட்ட, சுமார் 400…
தேர்தல் நெருங்கும் சூழலில் பாமக எம்.எல்.ஏ.க்கள் 3 பேரை கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் முரளி சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்களிடம் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய ஒழுங்கு நடவடிக்கை குழுவின் மூலம் விளக்கம் கேட்டு 2007.2025 ல் அனுப்பப்பட்டது. இக்கடிதத்திற்கு இதுவரை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் அய்யா அவர்களிடம் நேரிலோ, தொலைபேசியிலோ அல்லது கடிதம் மூலமாகவோ எந்தவித பதிலும் அளிக்காமல் தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.சிவக்குமார், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ்.சதாசிவம், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ்.பி வெங்கடேஸ்வரன் ஆகிய மூவரும் கட்சியின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். எனவே இதுவரை தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்த அவர்கள் மூவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில்…
“ரஷ்யா ஒவ்வொரு நாளும் சுமார் 1,000 வீரர்களை இழந்து வருகிறது என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். டிசம்பர் மாதம் முதல் ரஷ்யா தினமும் குறைந்தது 1,000 வீரர்களை இழந்து வருவதாக அவர் கூறினார். இதை ஒரு ‘பைத்தியக்காரத்தனம்’ என்று குறிப்பிட்ட ஜெலென்ஸ்கி, போரை முடிவுக்குக் கொண்டுவர விடாமல் தடுப்பதற்காகவே ரஷ்யா இவ்வளவு பெரிய விலையைக் கொடுத்து வருவதாகத் தெரிவித்தார். ரஷ்யாவைத் தடுத்து நிறுத்த அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஒன்றிணைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த உக்ரேனிய அதிபர், இந்த யுத்தம் ஆக்கிரமிப்பு சக்திகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் திறன் இன்னும் உலகிற்கு இல்லை என்பதை நிரூபித்துள்ளது என்றார். ரஷ்யாவைத் தடுத்து நிறுத்த அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அனைத்து கூட்டாளி…