Author: Editor web3

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்திய சந்தையில் தாறுமாறாக உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. நேற்று விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் சனிக்கிழமை (ஜன.10)தங்கம் விலை கிராமுக்கு ரூ.ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,900-க்கும், சவரன் ரூ.1,03,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் வாரத்தின் தொடக்க நாளான இன்றும் (ஜன.12)தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனிடையே 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.220 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,120க்கும், ரூ.1,760 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,04,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.12,000 அதிகரித்து ரூ.287,000க்கும், கிராமுக்கு ரூ.12 அதிகரித்து ஒரு கிராம் ரூ.287க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Read More

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில்  நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவிற்கு 8 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களை குவித்தது. 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49 ஓவர் முடிவில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 91 பந்துகளில் 94 ரன்கள் குவித்து அசத்தினார். அதே போல் கேப்டன் ஷுப்மன் கில் 56 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 49 ரன்களும் விளாசினர். நியூசிலாந்து அணியில் கையில் ஜேமீசன் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய…

Read More

வரும் சட்டமன்ற தேர்தலிலும் கோவையிலேயே அண்ணாமலையை களமிறக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024ம் ஆண்டு தேர்தலில் தமிழ்நாட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றான கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருந்தார். ஆனாலும், அவருக்குக் கிடைத்த சுமார் நான்கரை லட்சம் வாக்குகளே கோவை தொகுதியில் திமுக, அதிமுக தயவில்லாமல் பாஜகவுக்குக் கிடைத்த அதிகபட்ச வாக்குகள் ஆகும். ஏனென்றால், மற்ற மாவட்டங்களை விட கோவையில் அவருக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பதாகவே தெரிகிறது. இந்தநிலையில், வரும் சட்டமன்ற தேர்தலிலும் அப்பகுதியிலேயே களமிறக்க டெல்லி பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, கோவை சிங்காநல்லூர் அல்லது வடக்கு தொகுதியில் அண்ணாமலையை களமிறக்க ஆலோசனை நடப்பதாக பேசப்படுகிறது. இதை தவிர காங்கேயத்திலும் களமிறக்க வாய்ப்பு எனவும் கூறப்படுகிறது.

Read More

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தவெக தலைவர் விஜய் டெல்லி சென்றுள்ளார். தவெகவின் கரூர் பிரச்சாரத்தின் போது 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த டிச.29,30,31 ஆகிய 3 நாட்கள் தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மதியழகன் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, கரூரில் விஜய் பயன்படுத்திய பிரச்சார பேருந்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, ஓட்டுநரிடமும் விசாரணை நத்தப்பட்டது. இதேபோல், கூட்ட நெரிசல் நடந்த இடத்திலும் விசாரணை நடத்திய சிபிஐ, தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அதாவது, இன்று (ஜன.12ஆம் தேதி) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பிய நிலையில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர் ஆவதற்காக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனி விமான மூலம் சென்னை விமான…

Read More

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி வரும் 12,500-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் தங்களின் ஊதிய விகிதத்திற்கு ஏற்ற வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து ஆறாம் நாளாக இன்றும் சென்னையில் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊராட்சி செயலாளர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்துவதற்குக் கூட திமுக அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டிலுள்ள ஊராட்சி செயலாளர்களில் பெரும்பான்மையினர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். தொடக்கத்தில் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தப் பணியாளர்களாக நியமிக்கப்பட்ட அவர்கள், தொடர் போராட்டங்களுக்குப் பிறகு 2006-ஆம் ஆண்டில் ரூ.1,300 அடிப்படை ஊதியத்தில் பணி நிலைப்பு செய்யப்பட்டு 2018-ஆம் ஆண்டு முதல் ரூ.15,900 அடிப்படை ஊதியத்தில் பணியாற்றி…

Read More

சாதி, மதம், முதலாளி, தொழிலாளி உள்ளிட்ட அனைவரையும் தாண்டி நம்மை இணைத்திருப்பது தமிழ்தான் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் சார்பில் தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம் என்ற தலைப்பின் கீழ் அயலக தமிழர் தின விழா கொண்டாடப்பட்டது, விழாவில் துணை முதலமைச்சர், அமைச்சர்கள் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,அயலக தமிழர் தினத்தை திராவிட மாடல் அரசு கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பாக கொண்டாடி வருகிறது. தமிழ் மொழி என்பது நம் அனைவரையும் இணைக்கக்கூடிய மொழி. தமிழ் யாரையும் வேறுபடுத்தாது, பிரித்துப் பார்க்காது. யாருக்கும் எந்த பேதத்தையும் காட்டாத மொழிதான் நம்முடைய தாய் மொழி, தமிழ் மொழி. தமிழ் அடையாளத்திற்கு முன்னாடி வேறு எந்த அடையாளமும் நிற்க முடியாது, போட்டி போடவும் முடியாது. சாதி, மதம், ஏழை, முதலாளி உள்ளிட்ட…

Read More

காற்று மாசுபாடு தொடர்பாக காங்கிரஸ் மீண்டும் மோடி அரசாங்கத்தைத் தாக்கியுள்ளது. இந்தியாவில் காற்று மாசுபாடு இனி ஒரு சில பெருநகரங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சினை அல்ல, மாறாக நாடு தழுவிய நெருக்கடியாக மாறியுள்ளது, இதற்கு அரசாங்கத்தின் பதில் மிகவும் பலவீனமாகவும் போதுமானதாகவும் இல்லை என்று காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார். எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையத்தின் (CREA) சமீபத்திய செயற்கைக்கோள் அடிப்படையிலான ஆராய்ச்சியை மேற்கோள் காட்டி, ஜெய்ராம் ரமேஷ், இந்தியாவின் சுமார் 44 சதவீத நகரங்கள் தொடர்ந்து கடுமையான காற்று மாசுபாட்டை அனுபவித்து வருவதாகக் கூறினார். CREA அறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் (2019-2024, COVID-19 ஆண்டு 2020 தவிர) இந்தியாவின் 4,041 நகரங்களில் 1,787 இல் வருடாந்திர PM 2.5 அளவுகள் தொடர்ந்து தேசிய தரத்தை மீறியுள்ளன. இதன் பொருள் கிட்டத்தட்ட பாதி நகர்ப்புற இந்தியா நச்சுக் காற்றை சுவாசிக்க வேண்டிய கட்டாயத்தில்…

Read More

மெரினா உள்ளிட்ட பிற கடற்கரை பகுதிகளில் குப்பைகளை  கொட்டினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையின் பெருமையாகவும், சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகை தரும் முக்கிய சுற்றுலாதலமாகவும் விளங்கும் மெரினா கடற்கரை, சென்னை மாநகரின் அடையாளமாகத் திகழ்கிறது. மெரினா கடற்கரையை சர்வதேசதரத்தில் மேம்படுத்தி பாதுகாத்திட பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மெரினா கடற்கரையை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிப்பது அனைவரின் பொது பொறுப்பாகும். திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016 (Solid Waste Management Rules, 2016)ன்படி, பொது இடங்கள் மற்றும் கடற்கரைகளில் குப்பைகள், பிளாஸ்டிக்கழிவுகள், உணவுப் பொருள் எச்சங்கள் உள்ளிட்ட எந்தவிதமான கழிவுகளையும் கொட்டுவது சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பாக, மெரினா கடற்கரையின் தூய்மையை உறுதி செய்வதற்காக Chennai Enviro Solutions Pvt. Ltd (SPV) என்ற…

Read More

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கப் படைகள் கைது செய்துள்ள நிலையில், அடுத்த இலக்கு ரஷிய அதிபர் புதின் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறைமுகமாக பேசியிருந்தார். இந்நிலையில் புதினை கைது செய்ய அமெரிக்கா உத்தரவிடுமா என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “அதற்கான அவசியம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. அவருடன் எப்போதும் ஒரு சிறந்த உறவை வைத்திருக்கவே விரும்பினேன். ஆனால் தற்போதைய நிலைமை ஏமாற்றமளிக்கிறது. உக்ரைன்-ரஷிய போரைத் தடுக்க முடியாததில் எனக்கு எனக்கு வருத்தம் உண்டு” என்று கூறினார். ரஷியாவின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், பல ரஷிய வீரர்கள் போரில் கொல்லப்படுவதாகவும் குறிப்பிட்ட டிரம்ப் , இந்தப் போரை மிக விரைவில் முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாக தெரிவித்தார். உக்ரைனில் செய்த போர் குற்றங்களுக்காக ரஷிய அதிபர் புதின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

1.7 கோடி இன்ஸ்டா பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் கசிந்ததாக தகவல் வெளியான நிலையில், மெட்டா நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், பயனர்களின் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதாக உறுதியளித்துள்ளது உலகின் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சமூக ஊடக தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் 17.5 மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஒரு பெரிய தரவு மீறலால் அம்பலப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது , முன்னதாக, சைபர் பாதுகாப்பு நிறுவனமான மால்வேர்பைட்ஸ், சுமார் 17.5 மில்லியன் இன்ஸ்டாகிராம் பயனர்கள் தொடர்பான தரவுகள் டார்க் வெப்பில் விற்கப்படுவதாகத் தெரிவித்திருந்தது. இது தனியுரிமை மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது. கசிந்த தரவுகளில் பயனர்பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள் மற்றும் சில சமயங்களில் நேரடி முகவரிகள் கூட அடங்கியிருந்ததாக மால்வேர்பைட்ஸ் கூறியது. இந்த அறிக்கை இன்ஸ்டாகிராமில் ஒரு பெரிய தரவு மீறல் குறித்த அச்சங்களைத் தூண்டியது, இதனால் பயனர்கள் தங்கள் கடவுச்சொற்களை மாற்றவும், எக்ஸ் போன்ற சமூக ஊடக…

Read More