Author: Editor web3
மத்திய கிழக்கு ஆசியாவில், குறிப்பாக ஈரானில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக இந்தியாவிற்குத் தேவையான எரிசக்தி இறக்குமதியில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இந்தியா தனது சமையல் எரிவாயு (LPG) மற்றும் கச்சா எண்ணெய் தேவையின் பெரும்பகுதியை வளைகுடா நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்து வருகிறது. ஆனால், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கிருந்து இந்தியாவிற்கு வரும் எரிசக்தி விநியோகம் தற்போது ஏறத்தாழ முடங்கியுள்ளது. கடல்வழிப் பாதைகளில் நிலவும் பதற்றம் மற்றும் போர் அபாயம் காரணமாக சரக்குக் கப்பல்களின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. போர்ச் சூழலுக்கு இடையிலும், பாதுகாப்புடன் கூடிய மிகக் குறைந்த அளவிலான கப்பல்கள் மூலம் அவ்வப்போது எல்பிஜி கொண்டு வரப்பட்டாலும், அது நாட்டின் ஒட்டுமொத்த தேவையையும் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை. இந்தியாவின் தினசரி எரிசக்தித் தேவை மிக அதிகம் என்பதால், விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இந்தத் தடை வரும் நாட்களில் பெரும் சவாலாக…
தமிழகத்தில் தங்கம் விலை இன்று மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,900-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு போன்ற காரணிகளால் கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட நிலையில், இன்று விலையில் பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி மந்தமான நிலையே நீடிக்கிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை, ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2,60,000 ஆக உள்ளது. சர்வதேச அளவில் தங்கம் விலை இன்று அதிகாலையில் சற்று சரிவைச் சந்தித்தாலும், தற்போது வர்த்தகத்தில் பெரிய முன்னேற்றமின்றி மந்தமான சூழலில் உள்ளதால் உள்ளூர் சந்தையிலும் அதன் தாக்கம் பிரதிபலிக்கிறது. வரும் நாட்களில் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகித முடிவுகளைப் பொறுத்தே தங்கம் விலையில் அடுத்தகட்ட மாற்றங்கள்…
மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கட்சிச் சின்னங்கள் மறைக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஃபால்டா (Falta) தொகுதியில் உள்ள 144 மற்றும் 189 ஆகிய வாக்குச்சாவடிகளில் பாஜக-வின் தாமரைச் சின்னம் டேப்பால் மறைக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதனை தொடர்ந்து பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் அமித் மால்வியா எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து, மறுதேர்தல் நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தினார். பாஜக தலைவர் பகிர்ந்த வீடியோவின் நம்பகத்தன்மையை ஆணையம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை, ஆனால் கள நிலவர அறிக்கைகள் ஆராயப்பட்டு வருவதாகக் கூறியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தை உடனடியாகக் கையில் எடுத்த மேற்கு வங்கத் தலைமைத் தேர்தல் அதிகாரி, சின்னங்கள் மறைக்கப்பட்டதாகப் புகார் எழுந்த வாக்குச்சாவடிகளில் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதேனும் ஒரு சின்னம் மறைக்கப்பட்டிருப்பது…
சில்லென்று இருக்கும் பானங்கள் அல்லது தண்ணீரை குடிப்பது நமது தாகத்தை தணிக்கவும், புத்துணர்ச்சியுடன் உணர வைக்கவும் உதவுகிறது. ஆனாலும் எப்போதாவது ஐஸ்-கோல்டு வாட்டரை குடிப்பது வேறு வெயிலுக்காக தினமும் குடிப்பது சிறந்த விஷயம் அல்ல என பலர் நம்புகிறார்கள். கோடைகாலம் வந்துள்ள நிலையில் வெயில் கொடுமையிலிருந்து சிறிது இளைப்பாற குளிர்ந்த பானங்கள் மற்றும் ஐஸ் வாட்டர் குடிக்கும் பழக்கம் பலரிடமும் உள்ளது. செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு உடல் செயல்பாடுகளை ஆதரிக்க மற்றும் இயல்பான உடல் வெப்பநிலையை பராமரிக்க, உறுப்புகள் மற்றும் திசுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க தினசரி போதுமான அளவு தண்ணீரை குடிப்பது மிகவும் அவசியம். இது மற்ற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய நீரிழப்பு தவிர்க்க உதவுகிறது. மேலும் இது பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு காரணமான நீரிழப்பை தவிர்க்க உதவுகிறது. பொதுவாக நம் உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். நாம் குளிர்ந்த நீரை அருந்தும்…
தமிழகத்தில் கோடை விடுமுறை தொடங்கிவிட்ட நிலையில், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுவதைக் கட்டுப்படுத்தவும், அதன் மூலம் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழக காவல்துறை மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. மத்திய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இனி சிறார்கள் வாகனம் ஓட்டிப் பிடிபட்டால், அந்தச் சிறுவர்கள் மீது மட்டுமல்லாமல், வாகனத்தை ஓட்ட அனுமதித்த பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர்கள் மீது நேரடி நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்ட விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களின் பதிவுச் சான்றிதழ் (RC) ஒரு வருட காலத்திற்கு ரத்து செய்யப்படும். மேலும், விதிகளை மீறும் சிறுவர்களின் எதிர்கால ஓட்டுநர் உரிமத்திற்கும் தடை விதிக்கப்படும். பிடிபடும் சிறுவர்கள் தங்களுக்கு 25 வயது நிறைவடையும் வரை ஓட்டுநர் உரிமம்…
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து, ஒட்டுமொத்த மாநிலமும் மே 4-ஆம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில், ஒருபுறம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவியுடன் கொடைக்கானலுக்கு ஓய்வெடுக்க சென்றார். மறுபுறம் தவெக தலைவர் விஜய் ஆன்மீக ரீதியாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். நேற்று அதிகாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விஸ்வரூப தரிசனம் செய்த அவர், இன்று (ஏப்ரல் 29) மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலில் வழிபாடு நடத்தினார். அங்கு அவர் முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதற்கிடையே, விஜய் நாளை (ஏப்ரல் 30) புனித மெக்கா நகருக்கு செல்லத் திட்டமிட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் தகவல் வேகமாகப் பரவி வருகிறது. தனது கட்சி முன்னிறுத்தும் மதச்சார்பின்மை மற்றும் ‘மத நல்லிணக்கம்’ ஆகிய கொள்கைகளைப் பறைசாற்றும் விதமாக, அனைத்து மதங்களின் புனிதத் தலங்களுக்கும் அவர் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.…
இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த நிர்வாகப் பூசல்கள் மற்றும் அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில், அந்த வாரியத்தின் தலைவர் ஷம்மி சில்வா தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். இலங்கை விளையாட்டு அமைச்சகத்திற்கும் கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே நிலவி வந்த தொடர் மோதல் போக்கு, நிதி முறைகேடு புகார்கள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்த கடுமையான விமர்சனங்கள் ஆகியவையே இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இலங்கை வாரியத்திற்குத் தடை விதிக்கும் அளவிற்கு நிலைமை மோசமடைந்திருந்த சூழலில், ஷம்மி சில்வாவின் இந்த விலகல் அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைவர் பதவியில் இருந்து அவர் விலகியுள்ளதைத் தொடர்ந்து, வாரியத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்துத் தீர்மானிக்க அவசர ஆலோசனைக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுக்கும் வரை இடைக்காலத் தலைவர் ஒருவரை நியமிக்க அல்லது ஒரு…
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள புகழ்பெற்ற சாய்பாபா கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, வரும் மே 4-ஆம் தேதி முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், விஜய்யின் இந்த ஆன்மீகப் பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. முன்னதாக நேற்று அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் செய்த அவர், இன்று காலை தனி விமானம் மூலம் மும்பை சென்று அங்கிருந்து ஷீரடியை அடைந்தார். ஷீரடி சாய்பாபா சன்னதியில் தரிசனம் செய்த விஜய், பாபாவின் சிலைக்கு முன்பாக முழங்காலிட்டு மிகுந்த பக்தியுடன் வழிபாடு செய்தார். அவர் முழங்காலிட்டு வேண்டிக்கொள்ளும் காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. தேர்தல் பரப்புரையின் போது திருச்சி புனித அந்தோணியார் தேவாலயத்திலும் அவர் இதேபோல் முழங்காலிட்டு பிரார்த்தனை செய்தது குறிப்பிடத்தக்கது. ஷீரடியில் அவருக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் பூரண…
ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் கடந்த 146 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் கடுமையான பனிப்பொழிவு பதிவாகி, ஒட்டுமொத்த நகரத்தையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. வழக்கமாக ஏப்ரல் மாத இறுதியில் வசந்த காலத்தின் தாக்கம் தொடங்கும் நிலையில், எதிர்பாராத விதமாக தாக்கியுள்ள இந்த அதீத பனிப்புயல், இதற்கு முன் 1880-ஆம் ஆண்டில் பதிவான சாதனையை முறியடித்துள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரே இரவில் சுமார் 21 சென்டிமீட்டர் உயரத்திற்குப் பனி கொட்டித் தீர்த்ததால், மாஸ்கோ நகரின் சாலைகள் மற்றும் கட்டிடங்கள் அனைத்தும் அடர்ந்த வெண் போர்வையால் போர்த்தப்பட்டது போன்ற காட்சியைத் தருகின்றன. இந்தத் திடீர் இயற்கைச் சீற்றத்தினால் ஏற்பட்ட பல்வேறு விபத்துகளில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. பனிப்புயலுடன் வீசிய பலத்த காற்றினால் நகரின் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து மின்கம்பிகள் மீது விழுந்ததில், சுமார் 76,000-க்கும் மேற்பட்ட மக்கள் மின்சார இணைப்பு இன்றி பெரும்…
முன்னாள் மின்சாரத்துறை அமைச்சரும், திமுக முக்கிய பிரமுகருமான செந்தில் பாலாஜிக்கு எதிரான டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2021-23 காலகட்டத்தில் சுமார் 45,000 டிரான்ஸ்பார்மர்களைக் கொள்முதல் செய்ததில், அரசுக்கு சுமார் ரூ.397 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியதாக அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஏற்கனவே இந்த புகாரை விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை, இதில் போதிய முகாந்திரம் இல்லை எனக்கூறி வழக்கை முடித்து வைத்திருந்த நிலையில், தற்போது நீதிமன்றம் அதனை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதி காரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. டிரான்ஸ்பார்மர் டெண்டர்களில் முறைகேடுகள் நடந்ததற்கான முதற்கட்ட ஆதாரங்கள் மற்றும் புகாரில் உள்ள தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, ஒரு சுதந்திரமான விசாரணை அமைப்பு மூலம் இந்த ஊழல்…