Author: Editor web3

ஐபிஎல் தொடரின் ‘எல் கிளாசிகோ’ (El Clasico) என்று வர்ணிக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையிலான மோதல், இன்று அதன் பழைய பொலிவை இழந்து வருகிறதோ என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஒரு காலத்தில் புள்ளிப்பட்டியலின் உச்சத்தில் இருந்த இந்த இரு அணிகளும், தற்போது பிளே-ஆஃப் வாய்ப்பிற்காக போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. நடப்பு சீசனில் ஏற்கனவே வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் மோதலில், சஞ்சு சாம்சனின் அதிரடி சதத்தால் மும்பையை 103 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே துவம்சம் செய்தது. ஒரு காலத்தில் கடைசி பந்து வரை பரபரப்பாகச் சென்ற இந்த கிளாசிக் மோதல், தற்போது ஒருதலைப்பட்சமாக முடிவது ரசிகர்களுக்குச் சோர்வை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இன்று (மே 2) சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 44-வது லீக் ஆட்டம் இரு அணிகளுக்கும் வாழ்வா-சாவா போராட்டமாகும். தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் பங்கேற்பு குறித்த சந்தேகங்கள் ஒருபுறம் இருந்தாலும், புள்ளிப்பட்டியலில்…

Read More

திமுக, அதிமுகவை பின்னுக்கு தள்ளி விஜய் தனித்த சக்தியாக வர வாய்ப்பில்லை என திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து முகநூல் நேரடி ஒளிபரப்பில் பேசிய அவர், திமுக, அதிமுக எதிர்ப்பு வாக்குகள் தமிழக அரசியலில் எப்போதும் உள்ளன. அந்த வாக்குகளை மட்டுமே விஜய் பெருவாரியாக பெறுவார் என்றார். இதனால் இத்தேர்தலில் திமுகவே வெல்லும், விஜய் ஆட்சியமைக்க வாய்ப்பில்லை என்றும் அவர் பேசியுள்ளார். இந்த முறை திமுக எதிர்ப்பு வாக்குகளை அதிமுக, தவெக, நாதக மூவரும் அவரவர் சக்திக்கு ஏற்ப பிரித்து கொள்வார்கள். அதே நேரம் விஜய் ஆட்சி அமைப்பதற்கும், தனித்த சக்தியாக உருவெடுப்பதற்கு வாய்ப்பு இல்லை எனவும் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கருத்து தற்போது அரசியல் களத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. விஜய்யின் அரசியலை ஆரம்பம் முதலே திருமாவளவன் கடுமையாக விமர்சித்து வருகிறார். திமுக எதிர்ப்பு என்பதை மட்டுமே பிரதானமாக கொண்டு அவர் அரசியல் செய்வதாகவும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். திமுகவை ஆட்சியில் இருந்து…

Read More

உலகப் புகழ்பெற்ற ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், வரும் காலங்களில் திரைப்படங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அதிரடி விதிமுறை மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் நடிப்பு ஆகியவற்றில் AI-ன் பங்களிப்பு இருக்கக்கூடாது என்றும், இந்தத் துறைகளில் மனித உழைப்பும் திறமையும் மட்டுமே அங்கீகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைத்துறையில் மனிதர்களின் தனித்துவத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு நடிகர் ஒரே பிரிவில் வெவ்வேறு திரைப்படங்களுக்காகப் பரிந்துரைக்கப்படலாம் என்ற புதிய மாற்றமும், கேன்ஸ் மற்றும் வெனிஸ் போன்ற சர்வதேசத் திரைப்பட விழாக்களில் முதன்மை விருதுகளை வென்ற திரைப்படங்கள் நேரடியாக ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்படும் என்ற அறிவிப்பும் திரைத்துறையினரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. சர்வதேசத் திரைப்படப் பிரிவிலும் (International Feature Film) முக்கியமான மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது; அதன்படி, ஒரு நாட்டிலிருந்து இனி ஒன்றுக்கும் மேற்பட்ட…

Read More

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்த கோரமான படகு விபத்தில், திருச்சியைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி நவல்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்த காமராஜ் (38), அங்குள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் கடந்த ஓராண்டாகப் பணியாற்றி வந்தார். கோடை விடுமுறையைக் கொண்டாடுவதற்காக திருப்பூரிலிருந்து அவரது அண்ணன் குடும்பத்தினர் ஜபல்பூர் சென்றிருந்த நிலையில், அனைவரும் அங்குள்ள பர்கி அணைப் பகுதியில் படகு சவாரி செய்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது. அணைப் பகுதியில் படகு சவாரி செய்தபோது, எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்ததில் காமராஜ், அவரது மனைவி கார்குழலி, 5 வயது மகன் தமிழ் வேந்தன், காமராஜின் அண்ணி மற்றும் அவரது ஒரு குழந்தை என மொத்தம் 5 பேர் தண்ணீரில் மூழ்கினர். அதிர்ஷ்டவசமாக, லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்த காமராஜின் மூத்த மகன் புவிதரன் மற்றும் மற்றொரு குழந்தை…

Read More

தமிழகத்தில் வரும் 4ம் தேதி நாளை மறுநாள் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காகத் தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முக்கிய சந்திப்புகள், மக்கள் கூடும் இடங்கள் மற்றும் அரசியல் கட்சி அலுவலகங்களுக்கு ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் மத்திய ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்புப் படை மற்றும் உள்ளூர் போலீசார் எனப் பல்வேறு நிலைகளில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அடையாள அட்டை இன்றி எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில்…

Read More

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 9 காவலர்களுக்கும் அந்தத் தண்டனையை உறுதி செய்யக் கோரி சிபிஐ சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு போலீஸ் காவலில் இருந்தபோது கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட ஆய்வாளர் சுரேஷ் உள்ளிட்ட 9 பேருக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்தது. மரண தண்டனை விதிக்கப்படும் வழக்குகளில், விதிகளின்படி அந்தத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும். இதனை முன்னிட்டு, குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதிப்படுத்துமாறு சிபிஐ தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட…

Read More

ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் இ-சிகரெட் புகைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு பொருளை நேரலை போட்டியின் போது அவர் பயன்படுத்தியது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 28-ம் தேதி முல்லன்பூரில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த 16-வது ஓவரில், கேமரா வீரர்களின் ஓய்வறையை நோக்கித் திரும்பியது. அப்போது ரியான் பராக் வேப் பயன்படுத்திக் கொண்டிருப்பது நேரலையில் தெளிவாகத் தெரிந்தது. இந்த சீசனில் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இருந்தாலும், கேப்டன் ரியான் பராக்கின் தனிப்பட்ட ஆட்டம் மோசமாக உள்ளது. அவர் இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் வெறும் 117 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும்,…

Read More

தமிழக அரசியலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில், அக்கட்சிக்குச் சாதகமான தொகுதிகள் குறித்த பல்வேறு கணிப்புகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. குறிப்பாகத் தலைநகர் சென்னையில் தவெக கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரம்பூர், அண்ணா நகர், ஆவடி, அம்பத்தூர், மாதவரம், மயிலாப்பூர், வேளச்சேரி, எழும்பூர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளில் தவெகவின் வாக்கு வங்கி வலுவாக இருக்கும் என்றும், இந்தத் தொகுதிகளில் மற்ற பிரதான கட்சிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் கடும் போட்டியை  வழங்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதில் ஒருசில தொகுதிகளில் தவெக வெற்றியைக் கைப்பற்றவும் வாய்ப்புள்ளதாகத் தற்போதைய கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை மாநகருக்கு வெளியே உள்ள முக்கியமான நகரங்களிலும் தவெகவிற்குச் சாதகமான சூழல் நிலவுவது கவனிக்கத்தக்கது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபெரும்புதூர், தொழில் நகரமான திருப்பூர், ஆன்மீகம் மற்றும் பாரம்பரியம் மிக்க ஸ்ரீரங்கம், தென்மாவட்டத்தின் முக்கிய மையமான…

Read More

வங்கதேசத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில், தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை காப்பாற்ற தந்தை ஓடும் ரயிலுக்கு அடியில் பாய்ந்து பாதுகாத்த பதறவைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயில் நிலைய நடைமேடையில் நின்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு குழந்தை தண்டவாளத்தில் தவறி விழுந்தது. அதே நேரத்தில் அதிவேகமாக ஒரு ரயில் அந்தத் தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. ஒரு நொடி தாமதித்திருந்தால் பெரும் விபரீதம் நிகழ்ந்திருக்கும். https://x.com/AJENews/status/2049719682081456252? நிலைமையை உணர்ந்த தந்தை, ஒரு நொடி கூட யோசிக்காமல் தண்டவாளத்தில் குதித்தார். ரயிலை நிறுத்த முடியாது என்பதை அறிந்த அவர், குழந்தையை தண்டவாளத்தின் நடுவே படுக்க வைத்து, அதன் மேல் தானும் படுத்துக் கொண்டார். ரயில் பெட்டிகள் அவர்கள் இருவருக்கும் மேலாக மின்னல் வேகத்தில் கடந்து சென்றன. இந்த காட்சியைப் பார்த்த நடைமேடையில் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். என்ன செய்வதென்று தெரியாமல் பலர் திகைத்து நின்றனர். பல பெட்டிகள்…

Read More

பஹல்காம் தீவிரவாதை தாக்கதலை தொடர்ந்து நடத்தப்பட்ட’ஆபரேஷன் சிந்து நடவடிக்கை குறித்து மிக முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த நடவடிக்கை எந்தவொரு கட்டாயத்தினாலோ அல்லது பலவீனத்தினாலோ நிறுத்தப்படவில்லை, மாறாக இந்தியாவின் சொந்த முடிவின்படியே 72 மணி நேரத்தில் முடிக்கப்பட்டது என்று தெளிவுபடுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்களது திறமை குறைந்துவிட்டதால் இந்த நடவடிக்கையை நாங்கள் நிறுத்தவில்லை. இது ஒரு முழுமையான திட்டத்தின் ஒரு பகுதி. தேவைப்பட்டால், நீண்ட காலப் போரை எதிர்கொள்ள இந்தியா முழுமையாகத் தயாராக இருந்தது. நாங்கள் எங்களது சொந்த விருப்பத்தின் பேரில் மட்டுமே இதை நிறுத்தினோம்,” என்று கூறினார். இந்தியாவின் ‘சர்ஜ் கெபாசிட்டி’ (Surge Capacity) எனப்படும், தேவைப்படும் நேரத்தில் ராணுவ பலத்தை திடீரென அதிகரிக்கும் திறன் முன்பை விட இப்போது பல மடங்கு வலுவாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆபரேஷன் சிந்து என்பது இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளுக்கு…

Read More