Author: Editor web3
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளுக்கு வழங்கப்படும் ஓஆர்எஸ் (ORS) கரைசல்கள் குறித்து தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை இணைந்து முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளன. வயிற்றுப்போக்கு அல்லது வாந்தியால் உடலில் நீர்ச்சத்து குறையும் போது, உலக சுகாதார அமைப்பால் (WHO) அங்கீகரிக்கப்பட்ட ‘ORS’ பொடிகளை மட்டுமே மருந்தகங்கள் பரிந்துரைக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், ‘ORSL’ அல்லது ‘ORS Fit’ போன்ற பழச்சாறு சார்ந்த பானங்களை மருந்து எனக் கூறி விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பொதுமக்களிடம் விற்பனை மேற்கொள்ளும் போது, எது மருத்துவ ரீதியான ஓஆர்எஸ் கரைசல் மற்றும் எது உணவு பாதுகாப்புத் துறையின் (FSSAI) கீழ் வரும் பானம் என்பதைத் தெளிவாக விளக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்றது எனத் தவறான…
2026 ஐபிஎல் தொடரின் நேற்றைய 43வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டிக்குப் பிறகு ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் அளித்த பேட்டி தற்போது பேசுபொருளாகியுள்ளது. இந்த சீசனில் ரன் குவிக்க திணறி வந்த ரியான் பராக், இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடி 50 பந்துகளில் 90 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியால் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 225 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இருப்பினும், டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் (75) மற்றும் பதும் நிசங்கா (62) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோல்வி குறித்து பேசிய பராக், “நாங்கள் 200 ரன்களுக்கு மேல் எடுத்தோம், அது நல்ல ஸ்கோர் என்றுதான் நினைத்தேன். ஆனால், மிடில் ஓவர்களில் நாங்கள் இன்னும் சிறப்பாகப்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்து, வாக்கு எண்ணிக்கைக்காகக் காத்திருக்கும் நிலையில், அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் (Strong Rooms) முறைகேடுகள் மற்றும் தில்லுமுல்லுகள் செய்யப்படுவதாக எழுந்த புகார்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன. இந்தச் சூழலில், வாக்கு எண்ணிக்கை அமைதியாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (மே 2 சனிக்கிழமை) அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, மேற்கு வங்க மாநிலத்திற்கு என கூடுதலாக 165 வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களையும் (Counting Observers), பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைக் கண்காணிக்க 77 காவல்துறை பார்வையாளர்களையும் (Police Observers) நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முறைகேடு புகார்கள் எழுந்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது நடைபெற்று வரும் 2026…
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறினாலும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெரும் நம்பிக்கையுடன் உள்ளது. தங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், 180 முதல் 200 இடங்கள் வரை வெற்றி பெற்று விஜய்யின் தலைமையில் ஆட்சி அமைப்போம் என்றும் அக்கட்சியின் மாநிலச் செயற்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் அமைந்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,இந்தியாவே வியக்கும் தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ்க என காலமாக அமையும் அதற்காகத்தான் மனிதநேய தொடர்ந்த இயக்கத்தை உருவாக்கியுள்ளார்கள். அதுமட்டுமல்ல தியாகத்தோடு இந்த இயக்கத்தை வழி நடத்திச் செல்கிறார். பல்வேறு சோதனைகளை…
தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 8 மணி முதலே முன்னிலை நிலவரங்கள் வெளியாக தொடங்கும் நிலையில், பொதுமக்கள் குழப்பமின்றி துல்லியமான தகவல்களைப் பெறுவதற்காகத் தேர்தல் ஆணையம் பிரத்யேக இணையதள வசதிகளைச் செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் ஒவ்வொரு தொகுதியின் நிலவரமும் உடனுக்குடன் நேரலையாகப் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் அதிவேக இணைய வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்ப, மக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே மொபைல் போன் வழியாக முடிவுகளைத் தெரிந்துகொள்ள ‘Voter Helpline’ மற்றும் ‘ECINET’ ஆகிய செயலிகள் தயார் நிலையில் உள்ளன. இந்தச் செயலிகள் மூலம் எந்த வேட்பாளர் முன்னிலையில் உள்ளார், வாக்கு வித்தியாசம் எவ்வளவு போன்ற விவரங்களை வரைபட விளக்கங்களுடன் (Graphics) எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். முதலில் தபால்…
மும்பை பைதோனி பகுதியில் தர்பூசணி சாப்பிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட வழக்கில், தற்போது ஒரு அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த அப்துல்லா (40), அவரது மனைவி நசீம் (35) மற்றும் அவர்களது இரு மகள்கள் தர்பூசணி மற்றும் பிரியாணி சாப்பிட்ட பிறகு வாந்தி எடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியதுடன், தர்பூசணி விற்பனையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. முதற்கட்டமாக இது தர்பூசணி அல்லது பிரியாணி சாப்பிட்டதால் ஏற்பட்ட உணவு நச்சு (Food Poisoning) என்று கருதப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் உடலில் ‘மார்ஃபின்’ (Morphine) என்ற சக்திவாய்ந்த போதை மற்றும் வலி நிவாரணி மருந்தின் தடம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் தீவிர அறுவை சிகிச்சை மற்றும் கடும் வலி நிவாரணத்திற்குப் பயன்படுத்தப்படும் இந்த மார்ஃபின், எப்படி அந்த குடும்பத்தினரின் உடலுக்குள் சென்றது…
வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தில் தங்கும் விடுதிகள் மற்றும் பி.ஜி. (PG) கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. இது குறித்து தமிழ்நாடு ஐடி விடுதி மற்றும் பி.ஜி. உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில மாதங்களாக எரிவாயு விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருவதாகவும், ஒரு சிலிண்டரை 6,000 முதல் 7,000 ரூபாய் வரை கொடுத்து வாங்க வேண்டிய இக்கட்டான சூழல் நிலவுவதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் பல விடுதிகளில் தற்போது விறகு அடுப்புகளைப் பயன்படுத்தியே உணவு சமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது விறகு மற்றும் மளிகைப் பொருட்களின் விலையும் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளதால், வேறு வழியின்றி விடுதி கட்டணத்தை உயர்த்துவதாக உரிமையாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். வரும் மே 5-ஆம் தேதி முதல் இந்த புதிய கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இதன்படி, ஏசி மற்றும்…
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நிகழ்ந்த ஒரு கோரமான சிறிய ரக விமான விபத்தில், அதில் பயணம் செய்த 5 பிக்கிள்பால் (Pickleball) வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸின் அமரில்லோ கிளப்பைச் சேர்ந்த இந்த வீரர்கள், நியூ பிரான்ஃபெல்ஸ் நகரில் நடைபெறவிருந்த ஒரு முக்கியப் போட்டியில் பங்கேற்பதற்காகச் சென்றபோது இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. ஆஸ்டின் நகருக்கு தென்மேற்கே உள்ள விம்பர்லி அருகே அவர்கள் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. வியாழக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில், இவர்கள் பயணம் செய்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தனது கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. மலைப்பாங்கான பகுதியில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில், விமானத்தில் இருந்த வீரர்கள் 4 பேர் மற்றும் விமானி என மொத்தம் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து நடந்த இடம் ஆஸ்டினிலிருந்து சுமார் 64 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக டெக்சாஸ் பொதுப் பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.…
தமிழகம் முழுவதும் இன்று பலரது மொபைல் போன்கள் திடீரென அதிக சத்தத்துடன் அதிர்ந்தன. திரையில் ‘அவசரகால எச்சரிக்கை’ (Emergency Alert) என்ற செய்தி தோன்றியதால், பொதுமக்கள் பலரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால், இது மத்திய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) மற்றும் மத்திய தொலைத்தொடர்புத் துறை ஆகியவை இணைந்து நடத்திய ‘செல் பிராட்காஸ்ட் எமர்ஜென்சி அலர்ட்’ (Cell Broadcast Emergency Alert System) சோதனையாகும். இந்தத் தொழில்நுட்பச் சோதனையின் ஒரு பகுதியாகவே பொதுமக்களின் செல்போன்களுக்கு இந்த எச்சரிக்கை மெசேஜ் அனுப்பப்பட்டது. இயற்கைப் பேரிடர்களான சுனாமி, நிலநடுக்கம், வெள்ளம் அல்லது புயல் போன்ற அவசரக் காலங்களில், குறிப்பிட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு மிகக் குறுகிய காலத்தில் தகவல்களைத் தெரிவிப்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். செல்போன் நெட்வொர்க் குறைவாக இருக்கும் இடங்களிலும், இணைய வசதி இல்லாமலேயே இந்த எச்சரிக்கை ஒலி சென்றடையும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களில் உயிர்ச்…
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகை திரிஷா, தனது பிறந்தநாளான மே 4-ஆம் தேதியை முன்னிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவுகள், தமிழக அரசியல் சூழலோடு முடிச்சுப் போடப்பட்டு இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், அதன் முடிவுகள் வெளியாகும் அதே மே 4-ஆம் தேதியன்று திரிஷாவின் பிறந்தநாள் வருவதுதான் இந்த விறுவிறுப்பிற்குக் காரணம். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் வருகைக்கும் திரிஷாவின் பதிவுகளுக்கும் இடையே ரசிகர்கள் “கோட் வேர்ட்” கனெக்ஷன்களைத் தேடி வருகின்றனர். சமீபத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்த திரிஷா, அதற்கு “மே (மீ) சீசன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டது” (May-Me season officially begins) என்று தலைப்பிட்டுள்ளார். ஏற்கனவே வாக்குப்பதிவு தினத்தன்று ‘கில்லி’ படத்தின் ‘அர்ஜூனரு வில்லு’ பாடலைப் பின்னணியில் ஒலிக்கச் செய்து புகைப்படம் வெளியிட்டிருந்த திரிஷா, தற்போது அரியணை மற்றும் கிரீடம் குறித்த…