Close Menu
    What's Hot

    ”ரஜினிக்கு இருந்த அதே சிக்கல்தான் விஜய்க்கும்!”

    பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை நீக்க வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

    150 ஆண்டுகளுக்கு பின்.. சூரியனின் கோரத்தாண்டவம்!. இந்தியாவுக்கு காத்திருக்கும் கடும் வெப்பமும் வறட்சியும்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை!. RR கேப்டன் ரியான் பராக் !
    விளையாட்டு

    விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை!. RR கேப்டன் ரியான் பராக் !

    Editor web3By Editor web3May 2, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    riyan parag 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 ஐபிஎல் தொடரின் நேற்றைய 43வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டிக்குப் பிறகு ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் அளித்த பேட்டி தற்போது பேசுபொருளாகியுள்ளது.

    இந்த சீசனில் ரன் குவிக்க திணறி வந்த ரியான் பராக், இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடி 50 பந்துகளில் 90 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியால் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 225 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இருப்பினும், டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் (75) மற்றும் பதும் நிசங்கா (62) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தோல்வி குறித்து பேசிய பராக், “நாங்கள் 200 ரன்களுக்கு மேல் எடுத்தோம், அது நல்ல ஸ்கோர் என்றுதான் நினைத்தேன். ஆனால், மிடில் ஓவர்களில் நாங்கள் இன்னும் சிறப்பாகப் பந்துவீசியிருக்க வேண்டும்” என்று ஒப்புக்கொண்டார்.

    மேலும், ஃபார்மில் இருந்த டோனோவன் ஃபெரீராவிற்கு முன்னதாக ரவீந்திர ஜடேஜாவை களம் இறக்கியது குறித்துக் கேட்டபோது, “இடது-வலது காம்பினேஷனுக்காக அந்த முடிவு எடுக்கப்பட்டது. சரியாகத் தெரியவில்லை, இன்னும் 8-9 ஓவர்கள் இருந்ததால் இன்னிங்ஸை நீட்டிக்க நினைத்தோம். அதைப் பற்றி அதிகம் யோசிக்கத் தேவையில்லை” என்று பதிலளித்தார். ஃபெரீரா வெறும் 14 பந்துகளில் 47 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது.

    தமது காயம் குறித்துப் பேசிய பராக், “இது ஒரு தசைப்பிடிப்பு தான். ஒரு வார ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் என்று நம்புகிறேன்” என்றார். தொடர்ந்து தனது ஆட்டம் குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், “நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஃபார்மில் இல்லை,  இ-சிகரெட் பிடித்தார் என பல விமர்சனங்கள் உள்ள நிலையில், அவர் இவ்வாறு பேசியுள்ளார். மேலும், அணி தோற்றால் தன்னுடைய ரன்களுக்கு மதிப்பு இருக்காது, அணியின் வெற்றியே தன்னுடைய கடமை என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleEVM முறைகேடு எதிரொலி!. மே.வங்கத்தில் 242 கூடுதல் பார்வையாளர்கள் நியமனம்!
    Next Article திமுக மாணவரணி சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான உதவி மையம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
    Editor web3
    • Website

    Related Posts

    ஜடேஜா சாதனையை சமன் செய்த கே.எல்.ராகுல்..!

    May 2, 2026

    எல் கிளாசிகோ!. வீழ்ந்த பெருமையை மீட்கப்போவது யார்? CSK VS MI இன்று மோதல்!.

    May 2, 2026

    சர்வதேச சிலம்பப் போட்டி: தமிழக வீரர்கள் 12 தங்கம் வென்று சாதனை!

    April 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”ரஜினிக்கு இருந்த அதே சிக்கல்தான் விஜய்க்கும்!”

    பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை நீக்க வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

    150 ஆண்டுகளுக்கு பின்.. சூரியனின் கோரத்தாண்டவம்!. இந்தியாவுக்கு காத்திருக்கும் கடும் வெப்பமும் வறட்சியும்!

    குப்பைக் கிடங்காகும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – சுகாதார சீர்கேட்டால் பயணிகள் அவதி

    ‘ஜன நாயகன்’ படத்திற்கு அடுத்த அடி!. அமேசான் பிரைம் ஒப்பந்தம் ரத்து?. கைகொடுக்குமா Zee5?

    Trending Posts

    தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும்?

    May 2, 2026

    180-200 இடங்களில் வெற்றி பெறுவோம்!. செங்கோட்டையன் நம்பிக்கை!.

    May 2, 2026

    “சாதி பற்றி பேசினால் உதைப்பேன்!” பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் நிதின் கட்கரி ஆவேசம்!.

    May 2, 2026

    தவெக வேட்பாளருக்கு எதிரான மோசடி வழக்கு – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    May 2, 2026

    ஹார்மூஸ் முடக்கம்: இந்தியா எவ்வளவு பாதிக்கப்படும்?

    May 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.