ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 55வது படத்திற்கு ’ஓம்’ என தலைப்பு வைக்கப்பட்டு, படத்தின் புதிய போஸ்டர் மற்றும் வீடியா கிளிம்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது.

தனுஷின் ‘வுன்டர்பார் ஃபிலிம்ஸ்‘ (Wunderbar Films) மற்றும் ‘ஆர்டேக் ஸ்டூடியோஸ்‘ (RTake Studios) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தனுஷின் 55வது படத்தை தயாரிக்கின்றன. தனுஷ் உளவாளி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி காவல் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நாயகிகளாக சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவாளராக செய்கிறார்.
இந்தநிலையில், தனுஷின் இந்த படத்திற்கு ’ஓம்’ Chapter 1 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் புதிய போஸ்டர் மற்றும் வீடியா கிளிம்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் 16ம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தனுஷ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ‘D55’ திரைப்படம், தனுஷ்– ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகும் மற்றொரு முக்கியப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
