Close Menu
    What's Hot

    வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை சமன் செய்தது நியூசிலாந்து!

    ”ரஜினிக்கு இருந்த அதே சிக்கல்தான் விஜய்க்கும்!”

    பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை நீக்க வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ம.பி.-யில் சோகம்!. படகு கவிழ்ந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பலி!.
    இந்தியா

    ம.பி.-யில் சோகம்!. படகு கவிழ்ந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பலி!.

    Editor web3By Editor web3May 2, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Boat Capsize
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்த கோரமான படகு விபத்தில், திருச்சியைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி நவல்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்த காமராஜ் (38), அங்குள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் கடந்த ஓராண்டாகப் பணியாற்றி வந்தார். கோடை விடுமுறையைக் கொண்டாடுவதற்காக திருப்பூரிலிருந்து அவரது அண்ணன் குடும்பத்தினர் ஜபல்பூர் சென்றிருந்த நிலையில், அனைவரும் அங்குள்ள பர்கி அணைப் பகுதியில் படகு சவாரி செய்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

    அணைப் பகுதியில் படகு சவாரி செய்தபோது, எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்ததில் காமராஜ், அவரது மனைவி கார்குழலி, 5 வயது மகன் தமிழ் வேந்தன், காமராஜின் அண்ணி மற்றும் அவரது ஒரு குழந்தை என மொத்தம் 5 பேர் தண்ணீரில் மூழ்கினர். அதிர்ஷ்டவசமாக, லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்த காமராஜின் மூத்த மகன் புவிதரன் மற்றும் மற்றொரு குழந்தை ஆகிய இருவரும் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் உள்ளூர் மீட்புப் படையினர் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    தற்போதைய நிலவரப்படி, கார்குழலி மற்றும் அவரது அண்ணியின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. நீரில் மூழ்கிய காமராஜ் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை விமானம் மூலம் திருச்சிக்குக் கொண்டு வரத் துப்பாக்கி தொழிற்சாலை நிர்வாகமும், உறவினர்களும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா சென்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் திருச்சியில் உள்ள அவர்களது உறவினர்களிடையே ஆறாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவாக்கு எண்ணிக்கை!. தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!.
    Next Article ஆஸ்கர் விருது விதிகளில் அதிரடி மாற்றம்!. திரைக்கதை, நடிப்பில் AI-க்கு தடை!
    Editor web3
    • Website

    Related Posts

    ”ரஜினிக்கு இருந்த அதே சிக்கல்தான் விஜய்க்கும்!”

    May 2, 2026

    பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை நீக்க வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

    May 2, 2026

    150 ஆண்டுகளுக்கு பின்.. சூரியனின் கோரத்தாண்டவம்!. இந்தியாவுக்கு காத்திருக்கும் கடும் வெப்பமும் வறட்சியும்!

    May 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை சமன் செய்தது நியூசிலாந்து!

    ”ரஜினிக்கு இருந்த அதே சிக்கல்தான் விஜய்க்கும்!”

    பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை நீக்க வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

    150 ஆண்டுகளுக்கு பின்.. சூரியனின் கோரத்தாண்டவம்!. இந்தியாவுக்கு காத்திருக்கும் கடும் வெப்பமும் வறட்சியும்!

    குப்பைக் கிடங்காகும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – சுகாதார சீர்கேட்டால் பயணிகள் அவதி

    Trending Posts

    தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும்?

    May 2, 2026

    180-200 இடங்களில் வெற்றி பெறுவோம்!. செங்கோட்டையன் நம்பிக்கை!.

    May 2, 2026

    ”ரஜினிக்கு இருந்த அதே சிக்கல்தான் விஜய்க்கும்!”

    May 2, 2026

    “சாதி பற்றி பேசினால் உதைப்பேன்!” பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் நிதின் கட்கரி ஆவேசம்!.

    May 2, 2026

    விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை!. RR கேப்டன் ரியான் பராக் !

    May 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.