Author: Editor web3

ஐபிஎல் 19 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை எந்தவொரு இந்திய வீரரும் எட்டாத 150 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டி கே.எல். ராகுல் இமாலய சாதனை படைத்துள்ளார். டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடிய ராகுல் 67 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 152 ரன்கள்  விளாசினார். இதன் மூலம் கிறிஸ் கெய்ல் (175*), பிரண்டன் மெக்கல்லம் (158*) ஆகியோருக்கு அடுத்தபடியாக, ஐபிஎல் போட்டியில் 150 ரன்களுக்கு மேல் எடுத்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அதிரடியாக விளையாடி தனது மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ராகுல், டெல்லி அணி 264 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக இருந்தார். இருப்பினும், ராகுலின் இந்த வரலாற்றுச் சாதனை வெற்றியில் முடியாமல் போனது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. டெல்லி நிர்ணயித்த 265 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய பஞ்சாப்…

Read More

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்க இரவு விருந்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நேற்று இரவு (ஏப்ரல் 25) நடைபெற்ற இந்த விருந்தின் போது, பாதுகாப்பு சோதனைகள் நடைபெறும் பகுதிக்கு அருகே துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. இதனால் மேடையில் அமர்ந்திருந்த டிரம்ப் மற்றும்  மெலனியா டிரம்ப் ஆகியோரை ரகசிய சேவை அதிகாரிகள் உடனடியாகப் பாதுகாப்பாக வெளியேற்றினர். அரங்கிற்குள் இருந்த நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் மற்றும் விருந்தினர்கள் அச்சத்தில் மேசைகளுக்கு அடியில் பதுங்கினர். https://x.com/sentdefender/status/2048202539770802483/video/1 இந்தச் சம்பவம் தொடர்பாக கலிபோர்னியாவைச் சேர்ந்த கோல் தாமஸ் ஆலன் (31) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து துப்பாக்கிகள் மற்றும் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ரகசிய சேவை அதிகாரி ஒருவர் காயமடைந்த போதிலும், குண்டு துளைக்காத கவசம் அணிந்திருந்ததால் அவர் உயிர் தப்பினார். பின்னர் செய்தியாளர்களிடம்…

Read More

அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியினரில் சுமார் 40 சதவீதம் பேர் அந்நாட்டை விட்டு வெளியேற விரும்புவதாக சமீபத்திய ஆய்வில் வெளியாகி இருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘கார்னகி எண்டோமென்ட்’ (Carnegie Endowment) என்ற புகழ்பெற்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சுமார் 1,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், இந்தியர்கள் மத்தியில் அமெரிக்கா மீதான மோகம் குறைந்து வருவதைச் சுட்டிக்காட்டுகின்றன. டொனால்ட் டிரம்ப் தலைமையிலான தற்போதைய அமெரிக்க ஆட்சியில் நிலவி வரும் அரசியல் மாற்றங்கள், பொருளாதார மந்தநிலை மற்றும் சமூக ரீதியாக இந்தியர்களுக்கு எதிராக நிலவும் ஒருவித நெருக்கடியான சூழலே இந்த மனமாற்றத்திற்கு முதன்மையான காரணங்களாகக் கூறப்படுகின்றன. குறிப்பாக, குடியேற்றக் கொள்கைகளில் உள்ள சிக்கல்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை போன்றவை, அங்குள்ள இந்தியர்களைத் தங்களது தாயகத்திற்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ இடம்பெயரத் தூண்டுவதாக அந்த ஆய்வறிக்கை விளக்குகிறது. தற்போது…

Read More

தேர்தல் முடிவுக்கு பின் வேட்பாளர்களின் சொத்து விவரங்களை சரிபார்க்கும் நடைமுறை தொடங்கும் என வருமான வரித்துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களுக்கும், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது தாக்கல் செய்த சொத்து விவரங்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் குறித்து வருமான வரித் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளர் குமாரவேல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குக்கு பதிலளித்து வருமான வரித் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தல்களின்போது வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுவில் கூறியுள்ள சொத்து விவரங்கள் குறித்து சரிபார்க்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை நேரடி வரிகள் வாரியம் 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, வேட்புமனுவில் கூறப்பட்டுள்ள சொத்து விவரங்களை வருமான வரித்துறை தாமாக…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 23) உற்சாகத்துடன் நிறைவடைந்தது. பொதுவாக வாக்குப்பதிவு முடிந்தவுடன் அன்று மாலையே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) வெளியாவது வழக்கம். ஆனால், இந்த முறை ஏப்ரல் 29-ம் தேதி மாலை வரை எந்தவொரு ஊடகமும் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட இந்தியத் தேர்தல் ஆணையம் கடுமையான தடை விதித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், மேற்கு வங்கத்தில் இன்னும் தேர்தல் பணிகள் நிறைவடையவில்லை என்பதுதான். அங்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற உள்ளது. ஒரே நேரத்தில் பல மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் போது, ஒரு மாநிலத்தில் வெளியாகும் கருத்துக்கணிப்பு மற்ற மாநில வாக்காளர்களின் மனநிலையைப் பாதிக்கக்கூடும் என்பதால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் இந்தத் தடையை ஆணையம் அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஏப்ரல் 29-ம் தேதி மாலை 6:30 மணிக்கு மேல்தான் தமிழக தேர்தல் முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வமான கணிப்புகள் ஊடகங்களில்…

Read More

தெலங்கானாவில் அமைச்சர்களின் சம்பளத்தில் 50% பிடித்தம் செய்ய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் ஓய்வுபெற்ற சுமார் 8,000 ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.8,000 கோடி மதிப்பிலான பணிக்கொடை மற்றும் இதர பயன்கள் நிலுவையில் உள்ளன. கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும், முதியோர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அமைச்சர்கள் தாமாக முன்வந்து தங்களது ஊதியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். இந்த நிதி ஆதாரத்தைக் கொண்டு அடுத்த 100 நாட்களுக்குள் நிலுவைத் தொகைகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நிதி நெருக்கடியைச் சமாளிக்க இமாச்சல பிரதேச அரசும் அண்மையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் ஊதியத்தை ஆறு மாத காலத்திற்குத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க  உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தெலங்கானாவில் அமைச்சர்களைத் தொடர்ந்து, தேவைப்பட்டால் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற மக்கள் பிரதிநிதிகளின் ஊதியத்திலும் 50 சதவீத பிடித்தம் செய்ய அரசு ஆலோசித்து வருகிறது. இதற்காகத் துணை முதல்வர் மல்லு…

Read More

5 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக விறகுவெட்டிக்கு தூக்கு தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் சுற்றுவட்டாரத்தை சார்ந்த 5 சிறுமிகளை அழைத்து சென்று சந்திரன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி திருப்பத்தூர் மகளை காவல் நிலையத்தில் சந்திரன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வழக்கின் அடிப்படையில் சிங்கம்புணரியை சேர்ந்த சந்திரன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக இதுதொடர்பான வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று இவ்வழக்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக சந்திரனுக்கு 5 மரண தண்டனையுடன் 4 ஆயுள் தண்டனை, 22 ஆண்டு சிறை விதித்து சிவகங்கை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. மேலும் பாதிக்கப்பட்ட 5 சிறுமிகளின் குடும்பங்களுக்கு…

Read More

பாஜக ஆட்சி அமைக்கும்போது, மக்கள் 5 லட்சம் வரையிலான இலவச சிகிச்சையைப் பெறுவார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசியவர், மேற்கு வங்கத்தில் நீண்ட காலமாக தென்பட்டு வரும் மாற்றத்தின் அலை என்பது நேற்றைய முதல் கட்ட வாக்குப்பதிவில் முத்திரையாக பதித்துள்ளது. எங்கே திரிணாமுல் காங்கிரஸ் ஜனநாயக கோவிலை மிதித்ததோ, எங்கே, தனது கொடுங்கோன்மையால், அது ஜனநாயக கோவிலின் புனிதத்தை கெடுத்ததோ, அதே மேற்கு வங்கத்தில் முதல் கட்டத்திலேயே, மக்கள் ஜனநாயகக் கோவிலை மீண்டும் கட்டியெழுப்பிவிட்டார்கள். இப்போது, இரண்டாம் கட்டத்தில், நீங்கள் இந்த ஜனநாயகக் கோவிலின் உச்சியில் வெற்றி கொடியை ஏற்ற வேண்டும். தற்போது, திரிணாமுல் காங்கிரஸ் முற்றிலும் நிலைகுலைந்துள்ளது. நேற்று இரவு முழுவதும், திரிணாமுல் காங்கிரஸ் தனது குண்டர்களைத் தைரியப்படுத்தி, தெருக்களில் இறங்குமாறு அவர்களைத் தூண்டியது. வங்காள மக்களிடமும், அனைத்து பா.ஜ.க…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 23) விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்ததாக தலைமைச் செயலகத்தில் அரியணை ஏறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தின் மூலை முடுக்குகளெங்கும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அனைத்துத் தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கூடிய அறைகளில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் வெற்றித் தோல்வியைத் தீர்மானிக்கும் அந்தத் தீர்ப்பு, இன்னும் 9 நாட்களில், அதாவது மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது. அதுவரை தேநீர் கடைகள் முதல் சமூக வலைத்தளங்கள் வரை எங்கு நோக்கினும் வெற்றி வாய்ப்பு குறித்த விவாதங்கள் அனல் பறக்கின்றன. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் ஆளுங்கட்சியும், மீண்டும் அரியணையைப் பிடிக்கப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்த எதிர்க்கட்சிகளும் தங்களின் வெற்றியைக் கணக்கிட்டு வருகின்றன. குறிப்பாக, வாக்குப்பதிவு சதவீதத்தை வைத்து ஒவ்வொரு தொகுதியிலும் யாருக்குச் சாதகமான காற்று வீசுகிறது…

Read More

நாடாளுமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய முகமாகத் திகழ்ந்த ராகவ் சத்தா, இன்று (ஏப்ரல் 24) பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். ராகவ் சத்தாவுடன் சேர்த்து, ஹர்பஜன் சிங், சுவாதி மாலிவால், சந்தீப் பதக் உட்பட மொத்தம் ஏழு ராஜ்யசபா எம்.பி.க்கள் ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். இது அக்கட்சிக்கு தேசிய அளவில் மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. “நான் தவறான கட்சியில் இருந்த சரியான நபர்” என்று குறிப்பிட்ட ராகவ் சத்தா, ஆம் ஆத்மி தனது அடிப்படைக் கொள்கைகளில் இருந்து விலகி, சிலரின் சுயநலத்திற்காகச் செயல்படுவதால் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு ராகவ் சத்தா கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்தே அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. தற்போது ராஜ்யசபாவில் இருந்த 10 ஆம் ஆத்மி எம்.பி.க்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் (7 பேர்) பிரிந்து…

Read More