Author: Editor web3

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுக்கும் வீரருக்கான ‘ஆரஞ்சு தொப்பி’ போட்டி நேற்று உச்சகட்ட விறுவிறுப்பை எட்டியது. டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, நட்சத்திர வீரர் விராட் கோலி 328 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார். ஆனால், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கே.எல். ராகுல் ருத்ரதாண்டவம் ஆடி 151* ரன்களைக் குவித்தார். இதன் மூலம் மொத்தமாக 357 ரன்களை எட்டிய ராகுல், கோலியைப் பின்னுக்குத் தள்ளி ஆரஞ்சு தொப்பியைத் தன்வசப்படுத்தினார். ராகுலின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. நேற்று இரவு நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) மற்றும் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையிலான போட்டியில் ரன் வேட்டை தொடர்ந்தது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணியின் வீரர் வைபவ் 103 ரன்களை விளாசினார். முதல் இன்னிங்ஸ் முடிவில் வைபவ்வும் 357 ரன்களை எட்டியிருந்தாலும், சிறந்த சராசரி அடிப்படையில் கே.எல். ராகுலிடமிருந்து அந்தத் தொப்பி வைபவ்விடம் கைமாறியது.…

Read More

தொடர் விபத்துகள் எதிரொலியாக பட்டாசு ஆலைகளுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, தமிழ்நாட்டில் கத்தரி வெயில் காலம் தொடங்க உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை இப்போதே சதம் அடித்து வருகிறது. போகப்போக, வெயில் இன்னும் உக்கிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கோடை வெயில் அதிகரித்துள்ளதால் விருதுநகர், சாத்தூர், சிவகாசி பகுதிகளில் பட்டாசு தயாரிப்பு பணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு மூலப் பொருட்கள் கலவை செய்யும் பணியை காலை 6-10 மணிக்குள் முடிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதிகரித்து வரும்ம் வெயில் காரணமாக வெடி விபத்துக்கள் ஏற்பட கூடிதல் வாய்ப்புகள் உள்ளன. பட்டாசு மூலப் பொருட்களை கையாளும் தொழிலாளர்கள் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும் என ஒன்றிய அரசு கூறியுள்ளது. பட்டாசு செய்யும் இடங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். காலை 11 மணி முதல்…

Read More

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. எப்போதும் கம்பீரமாகத் தோற்றமளிக்கும் ஸ்டோக்ஸ், தற்போது கன்னங்கள் ஒட்டிப்போய் மிகவும் மெலிந்து காணப்படுகிறார். கடந்த ஜனவரி மாதம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பந்து அவரது முகத்தில் பலமாகத் தாக்கியுள்ளது. இந்த விபத்தில் அவரது கன்ன எலும்புகள் கடுமையாகச் சேதமடைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு முகத்தில் சிக்கலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சிகிச்சைக்குப் பின்னரே அவரது முகம் அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றமடைந்துள்ளது. இந்த விபத்து குறித்து மனம் திறந்துள்ள பென் ஸ்டோக்ஸ், இது தனது வாழ்வின் மிகவும் பயங்கரமான தருணம் என்று குறிப்பிட்டுள்ளார். “அந்தப் பந்து முகத்தின் வேறு பகுதியில் பட்டிருந்தால், நான் இன்று உயிரோடு இருந்திருக்க வாய்ப்பில்லை” என அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்ததை எண்ணி அவர் வேதனைப்பட்டுள்ளார்.…

Read More

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET-UG) நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி இன்று வெளியாகாமல், நாளை (ஏப்ரல் 27) காலை 10 மணிக்குத் தேசிய தேர்வு முகமையின் (NTA) அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்வு மையங்கள் குறித்த ‘சிட்டி இன்டிமேஷன் ஸ்லிப்’ வெளியிடப்பட்டுள்ள நிலையில், இறுதி அனுமதிச் சீட்டான ஹால் டிக்கெட்டைப் பெற மாணவர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2:00 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் சுமார் 28 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வினை எழுத விண்ணப்பித்துள்ளனர். தேர்வர்கள் தங்களது விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம்…

Read More

இந்தியாவின் அடுத்த பிரம்மாண்ட மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் 2027-ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு தற்போது வேகம் எடுத்துள்ளன. முதற்கட்டமாக குடியிருப்புகளின் விவரங்களைச் சேகரிக்கும் பணிகள் நாடு முழுவதும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த முறை, வழக்கமான முறைகளுடன் தொழில்நுட்பத்தையும் இணைத்து, மிகவும் துல்லியமான தகவல்களைப் பெறுவதில் இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலகம் தீவிரம் காட்டி வருகிறது. அரசு எடுக்கும் இந்தத் தரவுகள் நாட்டின் வருங்காலத் திட்டமிடலுக்கு மிக முக்கியம் என்பதால், பொதுமக்களின் பங்களிப்பை உறுதி செய்யப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கணக்கெடுப்பின் போது கேட்கப்படும் கேள்விகள் குறித்தோ அல்லது இதர நடைமுறைகள் குறித்தோ மக்களுக்கு எழும் ஐயப்பாடுகளைப் போக்க, முதல் முறையாக வாட்ஸ்அப் (WhatsApp) உரையாடல் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களின் சந்தேகங்களுக்குத் தங்கள் கைபேசி வழியாகவே விளக்கங்களைப் பெற முடியும். மேலும், மின்னணு வசதிகளைப் பயன்படுத்தத் தெரியாதவர்களுக்காக ‘1855’ என்ற தேசிய கட்டணமில்லா உதவி எண்ணும் செயல்பாட்டிற்கு…

Read More

ஈரானின் முக்கிய பாதுகாப்பு ரகசியங்களை இஸ்ரேலின் ‘மொசாட்’ (Mossad) உளவு நிறுவனத்திற்குத் திருட்டுத்தனமாக வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட எர்பான் கியானி என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்பஹான் நகரில் கடந்த ஜனவரி மாதம் நிகழ்ந்த மக்கள் போராட்டங்களின் போது, பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியதிலும், வன்முறையைத் தூண்டியதிலும் இவருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக ஈரான் நீதிமன்றம் உறுதி செய்தது. உளவு பார்த்தல் மற்றும் தேச விரோதச் செயல்களில் ஈடுபட்டதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், ஈரானிய உச்ச நீதிமன்றம் மரண தண்டனையைச் சரி என ஏற்றுக்கொண்டதை அடுத்து, ஏப்ரல் 25 அன்று அதிகாலை அவர் தூக்கிலிடப்பட்டார். மரண தண்டனை விதிக்கப்பட்ட எர்பான் கியானி, வெறும் உளவு வேலைகளுடன் நிற்காமல், பெட்ரோல் குண்டுகளைப் பயன்படுத்தி பாதுகாப்புப் படையினரைத் தாக்கியதாகவும், பொதுச் சொத்துக்களுக்குத் தீ வைத்ததாகவும் ஈரான் நீதித்துறை ஊடகம் தெரிவித்துள்ளது. அவரிடமிருந்து அதிநவீன ஆயுதங்கள் மற்றும் ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை விவரித்துள்ளது. குறிப்பாக,…

Read More

காலையில் கண் விழித்தவுடன் மொபைல் திரையைப் பார்ப்பது, பலருக்கும் அன்றாட சடங்காகவே மாறிவிட்டது. ஆனால், இந்த ஒரு சிறு பழக்கம் நம் மூளையைத் தூக்கத்திலிருந்து மெதுவாக விழித்தெழ விடாமல், நேரடியாக ஒருவித ‘மன அழுத்த’ நிலைக்குத் தள்ளுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். விழித்த முதல் சில நிமிடங்களில் மூளை அதிக ஆற்றலுடன் இருக்கும்போது, சமூக வலைதளச் செய்திகளையும் மின்னஞ்சல்களையும் உள்ளே செலுத்துவது, நம்மைச் சிந்திக்க விடாமல் மற்றவர்களின் கருத்துக்களுக்கு எதிர்வினை (Reaction) ஆற்றும் நிலைக்குக் கொண்டு செல்கிறது. காலையிலேயே டிஜிட்டல் தகவல்களை நுகர்வது, அன்றைய நாள் முழுவதிற்குமான ஒருவித அவசர உணர்வை (Sense of urgency) உருவாக்குகிறது. இதனால் வேலையில் கவனம் செலுத்துவதில் சிரமம், தேவையற்ற எரிச்சல் மற்றும் மனச்சோர்வு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. நம் உடல் சொல்லும் பசி அல்லது தாகம் போன்ற சிக்னல்களைக் கூட கவனிக்க விடாமல், இந்தத் திரைப் பழக்கம் நம்மை ஒரு ‘ரோபோ’ போன்ற மனநிலைக்கு…

Read More

வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தின் போது, அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பினர். பாதுகாப்பு அதிகாரிகள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு இருவரையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்திய நிலையில், தாக்குதல் நடத்திய மர்ம நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து தனது எக்ஸ்  சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “அதிபர் டிரம்ப், மெலனியா டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஆகியோர் காயமின்றி பாதுகாப்பாக இருப்பதை அறிந்து பெரும் நிம்மதி அடைகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் அனைவரும் தொடர்ந்து ஆரோக்கியத்துடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அவர் அந்தப் பதிவில் பகிர்ந்துள்ளார். மேலும், அமெரிக்காவைப் போன்ற…

Read More

சென்னை மாநகரின் ஒருசில பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் குழந்தைகளுக்குத் தட்டம்மை நோயின் தாக்கம் திடீரென அதிகரித்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. தீவிரக் காய்ச்சல், விடாத இருமல் மற்றும் உடல் முழுவதும் சிவந்த தடிப்புகள் போன்ற அறிகுறிகளுடன் சிறுவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தத் தொற்று காற்றின் மூலம் மிக வேகமாகப் பரவக்கூடியது என்பதால், நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டாலே பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனச் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. தற்போதைய சூழலில், பாதிக்கப்பட்ட குழந்தைகளை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்துவது நோய் பரவலைத் தடுக்க மிக அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளத் தடுப்பூசி மட்டுமே நிரந்தரத் தீர்வாகும். இதைக் கருத்தில் கொண்டு, 9 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்குத் தமிழக அரசு மற்றும் மாநகராட்சி சார்பில் சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் போர்க்கால அடிப்படையில் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை தடுப்பூசி செலுத்தத் தவறிய குழந்தைகளைக் கண்டறிந்து,…

Read More

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் காக்கா மாகாணத்தில், பான்-அமெரிக்கன் நெடுஞ்சாலையில் நேற்று சனிக்கிழமை ஒரு பயணிகள் பேருந்து மீது நடத்தப்பட்ட கொடூரமான வெடிகுண்டுத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். காஜிபியோ பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வீசப்பட்ட இந்த வெடிகுண்டு, பேருந்தை உருக்குலைத்ததோடு சாலையில் பெரும் பள்ளத்தையும் ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வரும் நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு அந்தப் பகுதியில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் கிளர்ச்சிக் குழுக்களே காரணம் என கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார். இதனை ஒரு “பயங்கரவாதத் தாக்குதல்” என வன்மையாகக் கண்டித்துள்ள அவர், குற்றவாளிகளைத் தேடிப் பிடிக்க ராணுவத்திற்கு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அடுத்த மாதம் கொலம்பியாவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் அந்நாட்டு மக்களிடையே…

Read More