Close Menu
    What's Hot

    மீண்டும் எகிறியது தங்கம் விலை!. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்வு!

    டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்..!! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!!

    அனைவரின் ஆசீர்வாதங்களுடன்.. அரசியலுக்குள் நுழைகிறேன்..!! ராகவா லாரன்ஸ் போட்ட பரபரப்பு பதிவு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»ஐபிஎல் வரலாற்றில் சுவாரஸ்யம்!. ஒரே நாளில் நான்கு வீரர்களிடம் கைமாறிய ‘ஆரஞ்சு கேப்’!
    விளையாட்டு

    ஐபிஎல் வரலாற்றில் சுவாரஸ்யம்!. ஒரே நாளில் நான்கு வீரர்களிடம் கைமாறிய ‘ஆரஞ்சு கேப்’!

    Editor web3By Editor web3April 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Orange Cap
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுக்கும் வீரருக்கான ‘ஆரஞ்சு தொப்பி’ போட்டி நேற்று உச்சகட்ட விறுவிறுப்பை எட்டியது. டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, நட்சத்திர வீரர் விராட் கோலி 328 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார். ஆனால், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கே.எல். ராகுல் ருத்ரதாண்டவம் ஆடி 151* ரன்களைக் குவித்தார். இதன் மூலம் மொத்தமாக 357 ரன்களை எட்டிய ராகுல், கோலியைப் பின்னுக்குத் தள்ளி ஆரஞ்சு தொப்பியைத் தன்வசப்படுத்தினார்.

    ராகுலின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. நேற்று இரவு நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) மற்றும் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையிலான போட்டியில் ரன் வேட்டை தொடர்ந்தது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணியின் வீரர் வைபவ் 103 ரன்களை விளாசினார். முதல் இன்னிங்ஸ் முடிவில் வைபவ்வும் 357 ரன்களை எட்டியிருந்தாலும், சிறந்த சராசரி அடிப்படையில் கே.எல். ராகுலிடமிருந்து அந்தத் தொப்பி வைபவ்விடம் கைமாறியது. இதனால் ஒரே நாளில் மூன்றாவது முறையாக முதலிடம் மாறியது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    இதேபோல், நேற்றைய ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 57 ரன்களைச் சேர்த்தார். இதன் மூலம் 380 ரன்களை எட்டிய அவர், வைபவ்வை முந்தி ஆரஞ்சு தொப்பியைத் தட்டிச் சென்றார். ஒரே நாளில் விராட் கோலி, கே.எல். ராகுல், வைபவ் என மூவரைத் தாண்டி நான்காவதாக அபிஷேக் சர்மாவிடம் இந்தத் தொப்பி வந்து சேர்ந்தது. ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறுகிய காலத்தில் இத்தனை வீரர்களிடம் ஆரஞ்சு தொப்பி கைமாறியது இதுவே முதல்முறை எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிபத்து எதிரொலி!. பட்டாசு ஆலைகளுக்கு அதிரடி கட்டுப்பாடு!.
    Next Article தமிழ்நாட்டில் மறுவாக்குப்பதிவா? தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    கோல்களை விட சிவப்பு அட்டைகள் அதிகம் ; 3 வீரர்கள் வெளியேற்றம் – பிஃபா முதல் போட்டியின் சுவாரஸ்யங்கள்

    June 12, 2026

    இன்று தொடங்குகிறது 10-வது மகளிர் டி 20 உலகக் கோப்பை தொடர்

    June 12, 2026

    உலகக் கோப்பை கால்பந்து ; வெற்றிக் கணக்கை தொடங்கியது மெக்சிகோ

    June 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் எகிறியது தங்கம் விலை!. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்வு!

    டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்..!! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!!

    அனைவரின் ஆசீர்வாதங்களுடன்.. அரசியலுக்குள் நுழைகிறேன்..!! ராகவா லாரன்ஸ் போட்ட பரபரப்பு பதிவு..!!

    இந்திய மாம்பழங்களுக்கு கிடைச்சாச்சு கிரீன் சிக்னல்.. இனி NO தடை..!! நேபாள அரசு அறிவிப்பு..!!

    பற்றி எரியும் மணிப்பூர்..!! மீண்டும் வெடித்த வன்முறை..!! 30 வீடுகள் தீயிட்டு எரிப்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.